ஜாதிக்காய் என்பது தாவரவியலில் Myristica fragrans என அழைக்கப்படுகின்றது. இம் மரத்தின் காய்கள் உலர்த்தப்பட்டு ஜாதிக்காய் என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் கேரளா மாநிலத்தில் ரோட்டோரங்களிலும் காடுகளிலும் காணப்படுகின்றது. இது சமையலில் வாசனைப் பொருளாக உபயோகிக்கப்படுகின்றது.
வயிற்றுப் போக்குக்கு
ஒரு ஜாதிக்காயை பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரில் கலந்து இரு வேளை பருக தீராத வயிற்றுப்போக்கு மறையும். பருக்கள் மறைய அதிக பருக்கள் வரும் பருவத்தினர் ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் பொடியை சிறிது பாலில் கலந்து முகத்தில் பூசி வர பருக்களும் அதன் தழும்புகளும் மறையும்.
தூக்கமின்மை
தூக்கம் வராதவர்கள் சிறிது ஜாதிக்காய் பொடியை எடுத்து நெய்யில் கலந்து கண் இமைகளில் பூசி வர நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.
மூட்டுவலி குறைய
ஒரு டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியை எடுத்து சிறிது கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில் கலந்து வலியுள்ள மூட்டுக்களில் தடவி வர மூட்டுவலி குறையும்.
தலைவலி மறைய
ஒரு ஜாதிக்காயை எடுத் து ஒரு கல்லில் சிறிது தண்ணீர் தெளித்து உரசி அதனை எடுத்து மூக்கிலும் தலையில் நெற்றிப் பகுதியிலும் தடவ தலைவலி போகும்.
தாங்க முடியாத வலி மறைய ஜாதிக்காய் பொடியை சிறிது ஒயினில் கலந்து அதிக வலியுள்ள இடங்களில் தடவி வர அதிக வலி குறையும்.
சரும நோகய்ளுக்கு
சிறிது ஜாதிக்காய் பொடியை பாதிக்கப்பட்ட இடங்களில் தண்ணீரில் கலந்து தடவ சரும பாதிப்புகள் குறையும்.
ஜாதிக்காயை உபயோகிக்க
ஒரிரு ஜாதிக்காயை பொடி செய்து சிறிய பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளலாம். இதனை சில உணவுகளில் கலந்து சாப்பிடலாம் அல்லது தனியாகவும் சாப்பிடலாம். சரும உபாதைகளுக்கும் வலிக்கும் மேல் பூச்சாக பால், தண்ணீர் போன்றவற்றில் கலந்து பூசலாம்.
சிறிது (ஒரு சிட்டிகை) அளவு ஜாதிக்காய் பொடியை தண்ணீரிலோ மோரிலோ கலந்து பருக ஜீரண சக்தி சீராகும். வயிற்றுப் போக்கு நீங்கும். வயிற்று வலி போகும். இதே அளவு ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும். துரித ஸ்கலிதம் மறையும். அதிக நேரம் உறவில் ஈடுபட முடியும்.
ஜாதிக்காய் ஒர் சிறந்த இயற்கை வலுவூட்டி உற்சாகத்தையும் வேகத்தையும் தரக் கூடியது. இருப்பினும் இரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோய் உடையவர்கள் இதனை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
சத்யா