சைஸ் சிறுசு மேட்டர் பெருசு

Spread the love

கடுகு

கடுகு ஓராண்டு மட்டுமே உயிர் வாழும் செடி வகையைச் சேர்ந்த தாவரம். ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். பூக்கள் நுனியில் கொத்தாக அமைந்தவை, மஞ்சள் நிறமானவை.                                    கருப்புக் கடுகு அல்லது உண்மையான கடுகு தாவரவியலில் இது ‘பிராஸிக்கா நிக்ரா’ எனப்படுகிறது.       வெள்ளைக் கடுகு, இதன் தாவரவியல் பெயர் ‘பிராஸிக்கா ஆல்பா’ என்பதாகும்.                             இந்தியக் கடுகு அல்லது பிரவுன் கடுகு இதன் தாவரவியல் பெயர் ‘பிராஸிக்கா ஜன்சியே’ என்பதாகும்.

தமிழ் பெயர்கள்

ஆய்சூரி, இசிகர், இரேசக்குணா, கசவம், நத்தை, சூக்கும்பத்திரம், தந்துகம், உரோசனி, கடிப்பகை, விசித்தி.       ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிருந்தேகடுகின் பயன்பாடு இருந்துள்ளது.                               கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடிவகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண் கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல் தோல் கறுப்பாக இருக்கும்.                                                                      கடுகில் இருந்து பெறப்படுவது கடுகு எண்ணை ஆகும்.

கடுகு பெருமளவில், உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்குப் பயிர் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் பெரும்பாலும் துணைப் பயிராகவும், தரிசு நிலங்களிலும், சமவெளி பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது.                                       கடுகு காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. குன்மம், வாதநோய் ஆகியவைகளைக் குணமாக்கும்; ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்தும்; வாந்தி உண்டாக்கும்; சிறுநீர் பெருக்கும்; விஷத்தை முறிக்கும்.         கடுகு பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகளை அழிக்கும் மருத்துவக் குணம் உடையது, எனவே கடுகை ஊறுகாய், தொக்கு போன்றவற்றிலும் சேர்க்கிறார்கள். இதனால், இவை கெட்டுப் போகாமல் பாதுகாக்கப்படும். கடுகு எண்ணை நெடியும் விறுவிறுப்பும் கொண்டதாகும். தோல் நோய்களைக் குணமாக்கும். பொதுவாக கடுகு எனக் குறிப்பிடப்படுவது கடுகுச் செடியிலிருந்து பெறப்படும் விதைகளையே குறிக்கும்.                  சமையல் கடுகு மளிகைக் கடைகளில் சாதாரணமாகக் கிடைப்பதாகும். கடுகு எண்ணை மற்றும் வெள்ளைக் கடுகு ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.                                   தேவையான அளவு கடுகை, தேனுடன் சேர்த்து அரைத்து, பசையாகச் செய்து, கட்டிகளின் மீது பூச கட்டிகள் உடையும். கிரந்திப்புண், தோல் நோய்கள் குணமாக கடுகு எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் மேல் பூச்சாகப்பூசி வர வேண்டும்.

                                                                   ஒரு தேக்கரண்டி கடுகை, நீர் சேர்த்து அரைத்து, குடிக்கக் கொடுத்தால் வாந்தியுண்டாகும்; குடிபோதை மாறும்.    வெள்ளைக் கடுகு காரச்சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டவை. குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்களைப் போக்கும்; முடக்கு வாத நோயைக் கட்டப்படுத்தும்.                                              வெள்ளைக்கடுகு பூச்சிக்கடி விஷத்தைக் குறைக்கும். விஷத்தை உட்கொண்டவர்களுக்கு வெள்ளைக் கடுகை நீரில் ஊறவைத்து, நெல்லிக்காய் அளவு அரைத்துக் கொடுக்க, குமட்டல் இன்றி வாந்தியை உண்டாக்கி நஞ்சை வெளியேற்றும். வைட்டமின்களும், ஆன்டி-ஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகில் உள்ள சல்பர், அப்லோடாக்ஸின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்குகிறது.                                      ருதேக்கரண்டி அளவு வெள்ளைக் கடுகைத் தூளாக்கி, தேனில் குழைத்து உள்ளுக்குள் சாப்பிட இரைப்பு, இருமல், சுவாச நோய்கள் குணமாகும்.                                                            வெள்ளைக் கடுகை அரைத்து, பருத்தித் துணியில் தடவி, கீல்வாயு, இரத்தக் கட்டு உள்ள இடங்களில் பற்றாகப் போட அவை குணமாகும்.                                                              “கடுகு சிறுத்தாலும் காரம் போகாது” என்று ஒரு சொலவடை உள்ளது. அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்ற மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச்சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. போலேட்ஸ், நியாசின், தையமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோதெனிக் அமிலம் போன்ற, பிகாம்ப்ளக்ஸ் விட்ட மின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில், இவை பங்கெடுக்கக் கூடியதாகும். நியாசின் (விட்டமின்H-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம், மற்றும் ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதிலும் முக்கிய பங்குவகிக்கிறது. கொழுப்புசத்து அதிக மில்லாத இந்த எண்ணை இதய நோயை தடுக்கும். கருப்பைக் கட்டியைச் சுருக்குவதில் கடுகு எண்ணை பெரும் பங்குவகிக்கிறது.

கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொண்ட. பின்னர் ஒரு கோப்பை வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். மூட்டுவலி நீங்கும் அடிபட்டு ரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்று போட ரத்தக்கட்டு மறையும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்றுபோட வெப்பம் உண்டாக்கி இயல்பு நிலையை அடைந்து விடலாம்.

கடுகு, உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். சமையலில் கடுகைப் பயன்படுத்தும் போது வெடிக்கும். கடுகு வெடித்தால் தான், அதில் உள்ள நறுமண எண்ணைகள் வெளியே வந்து, உணவை வாசனையாகவும், சுவையுள்ளதாகவும் மாற்றும். கடுகு எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால், உடல் வலி நீங்கும். குறிப்பாக, தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும்.

உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து, எண்ணெயில் காய்ச்சி, வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும். அடிபட்டு ரத்தம் வந்த இடத்தில் கடுகை அரைத்து பற்று போட ரத்தக்கட்டு மறையும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும்.ஆஸ்துமா, தலைவலி நீங்கும் தேனில் கடுகை அரைத்து கொடுக்க                                                            ஆஸ்துமா, கபம் குணமடையும்.

கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.

ரத்த அழுத்தம் கட்டுப்படும்

கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணை கொழுப்பை கட்டுப் படுத்துகிறது. இதனால் உயர்ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

கடுகு மருத்துவ குணங்கள்

கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக் கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

மணத்துக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் கடுகை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் சிறிது தேன் விட்டு, இதனுடன் லேசாக வறுத்து பொடி செய்த கடுகை சேர்த்து சூடுபடுத்தினால் இளகிய பதத்தில் வரும். இது ஆறியவுடன் சுண்டைக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டால் இருமல் கட்டுக்குள் வரும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

கடுகை பயன்படுத்தி தொடர் விக்கலுக்கான மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். கடுகு பொடியில் நீர் விட்டு குழைத்து, அதை மெல்லிய துணியில் வைத்து தொண்டைக்கு அருகே வைத்தால் விக்கல் சரியாகும். கடுகு ஒற்றை தலைவலிக்கு மருந்தாகிறது. ஜீரண கோளாறுகளை சரி செய்யும் தன்மை உடையது. கடுகை குறைந்த அளவுக்கே உபயோகப்படுத்த வேண்டும். பூச்சி, வண்டு கடி விஷத்தை முறிக்கும் தன்மை கடுகுக்கு உண்டு.

புளி ஏப்பம், வயிறு உப்பு சத்துக்கான மருந்து தயாரிக்கலாம்

தேவையானபொருட்கள்:

கடுகுபொடி,                                                                              சீரகப்பொடி,                                                                                          பூண்டு,                                                                                           இஞ்சி,                                                                                          பெருங்காயப்பொடி,                                                                         உப்பு. 

பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விடவும். இதில் 2 பல் பூண்டு தட்டி போடவும். சிறிதளவு இஞ்சி, ரு டீஸ்பூன் சீரகப்பொடி, சிறிது பெருங்காயம். சிறிதளவு கடுகுப்பொடி, 2 சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்து வர புளி ஏப்பம் சரியாகும். அஜீரணம் கோளாறு, வயிறு உப்புசம் குணமாகும்.

கடுகு செடியை பயன்படுத்தி ஒற்றை தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

கடுகு செடியை சிறு துண்டுகளாக வெட்டவும். இதில் போதுமான அளவு நீர் விட்டு கொதிக்க வைத்து நீராவி பிடித்தால் ஒற்றை தலைவலி, தலைபாரம், இருமல், நெஞ்சகசளி, மூக்கடைப்பு சரியாகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கடுகு ரத்தத்தை சுத்தப்படுத்தும். வலி நிவாரணியாக பயன்படுகிறது. வலியை குறைக்கும். மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கிறது.

கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேனீர் தயாரிக்கலாம்.

¼ டீஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்னைகள் இல்லாமல் போகும். இந்த தேனீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்.                                                                   கடுகில் அதிகம் உள்ள ஐசோதி யோசயனேட் புற்றுநோய் உருவாக்கும் பொருட்களில் உள்ள நஞ்சை நீக்குகிறது. அது புற்றுநோய் செல்களைத் தடுத்து, குடல் -இரைப்பையையும், குடல் வாலையும் பாதுகாத்துப் புற்றுநோய்க்கு முட்டுக்கட்டை போடுகிறது. கடுகு விதைகள் புற்றுநோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் பிரிவதை அதிகரிக்கும், உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தரும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் செய்யும். ஆயுர்வேதத்தில் வெள்ளைப் பூண்டு, மஞ்சளுடன் கடுகு எண்ணை சேர்த்துக் காய்ச்சப்பட்டு, எலும்பு மூட்டுகள், தசைவலிகளைக் குறைக்கும் மசாஜ் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.

கடுகுக் கீரையில் (சர்சோன்டாசாக்) பெரும்பாலான பைட்டோ வேதிப் பொருட்கள் இருக்கின்றன. சளி, மூட்டுவலி, மன அழுத்தம் போன்றவற்றுக்கெல்லாம் இந்தக் கீரை நல்ல மருந்து. அதனால் தான் வட இந்தியாவில் குளிர் காலத்தில் கடுகுக்கீரை அதிகம் விரும்பப்படுகிறது.

கடுகு – மருத்துவப் பயன்கள்..!

‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ அந்த அளவிற்கு எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது.

கடுகு செடியில் உள்ள ஹோமோ பிராசினோலைட் என்ற மூலப் பொருள் தசைகளுக்கு வலு சேர்ப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது. பசியை தூண்டி செரிமானத்துக்கு உதவுகிறது. முக்கியமாக மூப்படையும் வயதில் தசைகள் அதிகம் சேதமடையாமல் பாதுகாப்பு அளிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உடலில் புரதத்தின் அளவை சீராக வைக்கிறது. கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.                             கடுகானது மைக்ரேன் தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. அதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தடீஸ், குறைந்தரத்த அழுத்தம் போன்றவைகளை குணமாக்குகிறது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.  ஜீரணக் கோளாறினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கடுகு சிறந்த மருந்தாகும். ஜீரணத்தை தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகுபொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு டீஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.

உணவு உண்பதற்கு முன்பு கருப்பு கடுகினை 20 நிமிடம் ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து குடித்து வர ஜீரண சக்தி கிடைக்கும். அஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்றுவலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். கடுகானது பெண்களின் மெனோபாஸ் காலசிக்கலை நீக்குகிறது. நல்ல உறக்கத்தை தருகிறது.                  ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன், தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர்வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.

சிலர் தெரிந்தோ தெரியாமலோ விஷம் சாப்பிட நேரிட்டால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் விஷமானது வெளியேறும். சில வகையான காணாக் கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.        கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப்போடலாம்.                                                     கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும். அஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்ற மடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் இந்த வயிற்றுவலி நீங்கும்.

கடுகுத் தூளை நீரில் குழைத்து இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் நாளடைவில் இருமல் நீங்கும். கடுகெண்ணை மூட்டுவலிக்கு நல்ல மருந்து. சூடாக்கி பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் தடவி ஒத்தடம் கொடுக்க வலி குறையும்..

பொருளாதாரப் பயன்கள்

இது உணவில் மணமூட்டப் பயன்படுகிறது.                                                        கடுகிலிருந்து எண்ணை எடுக்கப்படுகிறது.                                                          கடுகுப்பொடி தயாரிக்கப்பட்டு மணமூட்டப் பயன்படுகிறது.                                               ஊறுகாய் பொடி தயாரிக்கப்படுகிறது.                                                                        கடுகு எண்ணை மருத்துவத்திலும், சோப்பு தயாரிக்கவும் பயன்படுகிறது.                                      புண்ணாக்கு கால்நடை உணவாகப் பயன்படுகிறது.                                                      கடுகு தழைகளும் உணவாகப் பயன்படுகிறது?                                                         கடுகானது சில பொருட்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பானாகப் பயன்படுகிறது.                               ஒயின் தயாரிப்புத் தொழிலில் நுரைத்தல் முறையில் கடுகு பயன்படுகிறது.                                     அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் கடுகு எண்ணை பயன்படுகிறது.


Spread the love