முசலி – வயாகராவுக்கு மாற்று மூலிகை?

Spread the love

ஆண்மை சக்தியை பெருக்கி, நீண்ட காலம் இல்லற சுகத்தை அனுபவிக்க விரும்பாத மனிதர்கள் அபூர்வம். அதற்கான மருந்துகளை மனிதன் தோன்றியதிலிருந்து தேடிக் கொண்டேயிருக்கிறான். அந்த முயற்சிகளின் முத்தாய்ப்பு ‘வயாகரா’.

ஆனால் இந்திய மருத்துவத்தில் தொன்று தொற்று பல மூலிகைகள் ஆண்மை குறைவை போக்க பயன்பட்டு வந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று முசலி. பல சக்தியூட்டும் ஆயுர்வேத டானிக்குகளிலும், ஆண்மை பெருக்கும் மருந்துகளிலும், ‘சியவனப்ராச’ லேகியத்திலும், முசலி சேர்க்கப்படுகிறது. அலோபதி மற்றும் யுனானி மருத்துவத்திலும், பல மருந்துகளில் முசலி பயனாகிறது. முசலி பிரிவில் இரண்டு மூலிகைகள் சொல்லப்படுகின்றன. ஒன்று, வெள்ளை (ஸ்வேத (அ) சஃபேத்) முசலி. மற்றொன்று கறுப்பு முசலி. பொதுவாக முசலி என்றால் வெள்ளை முசலியும், தாலமூலி என்றால் கறுப்பு முசலியும் குறிப்பிடப்படும். இரண்டு வகை முசலிகளுமே ஆண்மை பெருக்கியாக பயன்படுத்தப்படுகின்றன.

வெள்ளை முசலி:

தாவரவியல் பெயர் – Chlorophytum borivilianum

குடும்பம் – Asparagaceae

வெள்ளை முசலி, சதவாரி (Asparagus racemosus) போன்றது. பல கிளைகளுடைய முள் செடி. செடி முழுவதும் ஒரு அங்குல நீட்ட முட்களிருக்கும். இதன் கிழங்கு (Rhiuome) வெண்மை நிறமாக 20 செ.மீ. நீளமிருக்கும்.

கறுப்பு முசலி (தாலமூலி):-

முசலியின் தாவரவியல் பெயர் – Curculigo Orchioides

குடும்பம் – Amaryllidacea

சமஸ்கிருதம் – முஸலி, தாலமூலி, சவகா, ஹேம புஷ்பா

ஹிந்தி – முஸலி, காலி முசலி,

தமிழ் – நிலப்பனை, தாலமூலி

தாலமூலி சிறு செடி. நீட்டமான வேர் கிழங்கு உடையது. இலைகள் 15 லிருந்து 45 செ.மீ. நீளமும், 1.5 லிருந்து 2.5 செ.மீ. அகலமும் உடையது. பூக்கள் மஞ்சள் நிறமானவை. பழம் நான்கு விதைகளுடன் கூடியது. விதைகள் நீண்ட செவ்வகமாக, கறுப்பாக, பிரகாசமாக இருக்கும்.

முன்பு சொன்னபடி இரண்டு வகை முசலிகளும் ஆண்மையை பெருக்கும். விந்தணுக்களை அதிகரிக்கும். வெள்ளை முசலி (Safed Musli) வயாகராவுக்கு நிகரானது. இது கேரளாவில் அதிக அளவில் பயிரிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெள்ளை முசலிக்கு எப்போதுமே அதிக “டிமான்ட்” இருப்பதாக கூறப்படுகிறது.

பயிரிடப்படும் இடங்கள்:

முசலி, வெட்ப மண்டலங்களில் நன்கு விளையும். 1500 மீட்டர் உயரமான இடங்களிலும் விளையும். உத்திரபிரதேசம், வங்காளம், அஸ்ஸாம், கொங்கன், மேற்கிந்தியா, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பயிரிடப்படுகிறது.

ரசாயனம்:

முசலியில் (தண்டு கிழங்கில்) சர்க்கரை சத்து 7.5%, பசை (Mucilage) 8.12%, ஹெமி – செல்லுலோஸ் 20.15% மற்றும் இதர பாலி – சாக்ரைட்ஸ் (Poly sacchroids) 17.01% உள்ளது. முசலியில் க்ளைகோசைடும் (Glycosides) உள்ளது.

பயன்படும் பாகம் – தண்டுக்கிழங்கு (Root stock, Rhizome)

பொதுக்குணங்கள் – டானிக், சிறுநீர் பெருக்கி, ஆண்மை பெருக்கி

உபயோகங்கள்:

1. முசலி பலவித ஆயுர்வேத மருந்துகளில், முக்கியமாக வலிமையூட்டும் ஆண்மை பெருக்கிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. பாலியல் குறைபாடுகளுக்கு முசலி ஒரு நல்ல மருந்தாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதில் கிளைக்கோசைட் (Glycoside) இருப்பதால் ஆண்மைக் குறைவுக்கு நல்ல மருந்தாகும். விந்து அளவு, விந்தணுவின் எண்ணிக்கை இவற்றை பெருக்குகிறது. இரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவையும், சீரம் புரத அளவையும் அதிகரிக்கிறது.

2. சிறுநீர் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து. நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது.

3. பிலிப்பைன்ஸ் தேசத்தில் முசலி சரும வியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

4. சரக சம்ஹிதா சரகர், சுஸ்ருதர், வாகபட்டர் – ஆயுர்வேத குருக்கள் சொல்வது – முசலி உடல் எடையை கூட்டும். இளமையை திரும்பி வரச் செய்யும்.

5. பாலியல் நோய்களுக்கும், மூலத்திற்கும் மருந்தாகும்.

6. வெண்குஷ்டம் போன்ற சரும வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

7. ஆர்த்ரைட்டீஸ், ருமாட்டிஸம் இவற்றிற்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.


Spread the love
error: Content is protected !!