வீக்கத்தை விலக்கிடும் தொட்டால் சிணுங்கி

Spread the love

சில குழந்தைகள் பிறர் தொட்டாலே அழத் துவங்கி விடுவர், அத்தகைய குழந்தைகளை நாம் “தொட்டால் சிணுங்கி” என அழைப்பது வழக்கம். மூலிகைகளிலும் அவ்வாறு பிறர் தொடுவதையோ காலால் மிதிப்பதையே, விரும்பாத மூலிகைகள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது கரும் பச்சையும் சிவப்பு நிறமும் கொண்ட தொட்டால் சிணுங்கி எனும் மூலிகையாகும். இது சிறிய செடி போல படர்ந்து வளரக்கூடியது. சிறிய கூர்மையான முட்களை கொண்டது. ரோஸ் கலர் பூக்களை உடையது.

தொட்டால் சிணுங்கியின் தாவரவியல் பெயர் – Mimusa Pudica

Family – Leguminosae   சமஸ்கிருதத்தில் லாஜா எனவும், ஹிந்தியில் லாஜ்வாண்டிஸ் எனவும் அழைக்கப்படுகின்றது.

தொட்டால் சிணுங்கி பெரும்பாலும் வெப்பப் பிரதேசங்களில் வளரக்கூடியது. இது இந்தியாவில் மேற்கு கடலோரப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. இது ஆரம்ப காலத்தில் அமெரிக்காவில் தோன்றிருக்கலாம் எனவும் பின்னர் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

உபயோகமாகும் பாகம் – இலை, வேர்.

பொது குணங்கள் – டானிக்காக, இரத்த விருத்திக்கு பயன்படக்கூடியது, நரம்புத் தளர்ச்சியை போக்கி ஆண்களுக்கு வலுவூட்டக் கூடியது.

மருத்துவ பயன்கள்

இலையின் சாறு இரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடியது.

இவை பாக்டீரியாக்களை எதிர்க்கும். சக்தி கொண்டவை.

ஒரு பங்கு இலையுடன் பத்து பங்கு நீர் சேர்த்து அடுப்பிலிட்டு காய்ச்சி பாதியாக ஆனதும் இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு தினசரி காலையும் இரவும் உணவிற்கு முன்பாக 10 – 20 மி.லி. குடித்து வர கிட்னி செயல்பாடு தூண்டப்படும்.

செயல்பாடு குன்றிய கிட்னியையும் ஊக்கப்படுத்த உகந்தது.

மூலம் பவுத்திரம் போன்ற ஆசன வாய்க் கோளாறுகளுக்கு இலையையும் வேரையும் சேர்த்து நன்கு கழுவி வெயிலில் இட்டு உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு தினசரி காலை 3 – 5 கிராம் அளவு பவுடரை சிறிது பால் சேர்த்து குளப்பி சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் தெரியும். அளவில் பெரிய பவுத்திரமும் கூட எளிதாக சுருங்கிடும்.

விரை வீக்கத்திற்கு இதன் இலைகளை மை போல அரைத்து பற்றப் போட்டு வர வீக்கம் குறையும். கை கால்களில் உள்ள தசை வீக்கத்திற்கும் கூட இதன் இலைகளை சிறிது அரைத்து பற்று போல போட்டு வர வீக்கம் வற்றிடும்.

இடுப்பு வலி முதுகு வலி போன்ற பிரச்சனைகளுக்கு இரு கைபிடி அளவு இலைகளை எடுத்து ஒரு பெரிய வாளியில் வெந்நீர் வைத்து அதில் போட்டு சிறிது நேரம் உட்கார நல்ல பலன் தெரியும். தொட்டால் சிணுங்கி நீரிழிவிற்கும் ஒர் சிறந்த மருந்தாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் இலை மற்றும் வேர்களை நன்கு கழுவி உலர்த்தி பவுடராக்கி வைத்துக் கொண்டு தினசரி காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 4 – 8 கிராம் காலை சிறிது நீர் அல்லது பாலில் குளப்பி சாப்பிட்டு வர கட்டுப்படாத நீரிழிவும் கட்டுப்படும்.


Spread the love
error: Content is protected !!