இப்போது மசாஜ் சென்டர்கள் அதிகரித்து விட்டன. எங்கு பார்த்தாலும் மசாஜ் சென்டர்களின் விளம்பரங்கள் தான் கண்களில் தென்படுகின்றன. இந்த மசாஜ் என்பது மூலிகை எண்ணையை இளஞ்சூட்டில் உடலில் தடவி மேலும் கீழுமாகவும், சில இடங்களில் கீழ் மேலாகவும் உருவி தேய்ப்பது. நல்ல அனுபவம் பெற்றவர் செய்தால் நல்லது. இதனால் உடலிலுள்ள தசைவலிகள் நீங்குவதுடன் சுகமாகவும் இருக்கும்.
ஒரு சிலருக்கு, தசைகளில் குடிகொண்ட வாதத்தால் வலிதோன்றும். அதிகளவிலான சோர்வு ஏற்படும். இதனால், கைகளோ அல்லது கால்களோ உணர்வற்ற தன்மையுடையதாக இருக்கும். இது தவிர தசையும் இருக்கமாக இருக்கும். இப்படி வாதப்பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், மசாஜ் செய்து கொண்டால் இக் குறைகள் நீங்கி, தங்களை புத்துணர்ச்சியாக மாற்றிக் கொள்ள முடியும்.
தசை நார்கள் இறுகியிருந்தால் தளர்வடையும். கழிவுப் பொருள்கள் வெளியேறும். நல்ல தூக்கம் நம்மை ஆட்கொள்ளும் தசைகள் நம் உடலில் பல தரப்பட்ட அமைப்பைக் கொண்டதாக இருக்கும். ஆகையால் தசைகளின் இருப்பிடம், அமைப்பு, தன்மையைப் பொருத்து மசாஜ் செய்யப்படும். விரல்களால் நீவிவிடுதல், உருட்டித் தேய்ப்பது போன்ற மசாஜ் வகைகள் நல்ல பலனைக் கொடுக்கும்.
உடல்வலியாக இருந்தாலும் சரி, உடல்பாகங்களில் ஏற்பட்ட சுளுக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் நலப்பிரச்னைகளின் போதும், உடனடியாக மசாஜ் செய்து கொள்வது நல்லது. தசைப்பிடிப்பு, சுளுக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட பின்னர், அதை சரிசெய்யாமல் விட்டால், அதனால், வேறு பல விளைவுகளை ஏற்படக்கூடும். இதனால், முறையாக மசாஜ் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.