கனிகளிலே மாங்கனி

Spread the love

தெய்வீக சுவையுடன் கூடிய மாம்பழத்தை தரும் மாமரம், இந்தியாவின் தனி ஒரு சொத்து என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உஷ்ண மண்டல பிரதேசங்களில் விளையும் மாம்பழம் உலகில் புகழ் பெற்ற பழம். தற்போது இந்தியாவில் பரவலாக, பல வகைகளில், ரகங்களில், பயிரிடப்படும் மாம்பழம் தான் இந்தியர்களுக்கு பிடித்த பழங்களில் முதன்மையானது. 600 வகைகள் இருக்கும் மாம்பழத்தில், முக்கியமான 40 ரகங்கள் இந்தியாவில் விளைகின்றன. “மேங்னிஃபெரா”  (Mangi fera) இனத்தை சேர்ந்த மாம்பழம் “அனா கார்டியாசே” ( Anacardiaceae) குடும்பத்துடன் சேர்ந்தது.

இந்தியாவின் தேசிய பழமான மாங்கனி, வேதங்களில் கடவுளின் கனி என்று குறிப்பிடப்படுகிறது. மாமரத்தின் விஞ்ஞான பெயர் – Mangi fera Indica.

தாவர விவரங்கள்:

மாமரம் சாதாரணமாக 35 – 40 மீட்டர் உயரம் வளரும். அடர்த்தியான பசும் பச்சைநிற இலைகளுடன் மாமரம் 10 மீட்டர் ( தலையை சுற்றிய விட்டம்) விஸ்தீரணத்தை ஆக்ரமித்துக் கொள்ளும். நல்ல நிழல் தரும் மாமரம் கொசுக்களுக்கும் புகலிடம் தருகிறது! மாம்பூக்கள் சிறியதாக, வெண்ணிறமாக, குறைந்த நறுமணத்துடன் இருக்கும். பூக்கள் போன பின், காய்கள் கனிய 3 – 6 மாதங்கள் ஆகலாம். பழுத்த கனி மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிகப்பு நிறங்களுடன் மிளிரும். பறித்த மாங்காய்/ கனி காம்பிலிருந்தும், கனியின் மேல் சிந்தியிருக்கும் மாம்பால் வாசனை தூக்கலாக இருக்கும். பழத்தின் நடுவில் புதைந்து இருக்கும் மாங்கொட்டை பல ” சைசில்” ( Size)  இருக்கும். மாங்கொட்டைக்கும் கதுப்புக்கும் இடையே மெல்லிய தோல் கொட்டையை மூடியிருக்கும். மரம் நட்டவுடன், பழ விளைச்சல் 6 வருடங்களில் தொடங்கலாம். 40 வருடங்களுக்கு பின் விளைச்சல் குறையும்.

வேளாண்மை

சில மாமர ரகங்கள் கொட்டையை பயன்படுத்தி பயிரிடப்படுகின்றன. ‘ஒட்டு’ முறையில் பயிரிடப்படும் மரங்களே சிறந்த பழங்களை தருகின்றன. புகழ் பெற்ற ரகங்கள் “அல்ஃபான்ஸோ” மற்றும் “மல்கோவா”.

மருத்துவ பயன்கள்:

மாம்பழம் சத்துக்கள் செறிந்த பழம். பல வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், என்ஸைம்கள்  (Magneferin, Lactase) அடங்கியவை. இவை சீரணத்துக்கு உதவும். தவிர மாம்பழம் ஆண்மையை பெருக்கும்.

மாங்காயில் “Urushiol ” என்ற வேதிப்பொருள் உள்ளது. இதனால் மாங்காய் தோலினால் சிலருக்கு ‘அலர்ஜி’ உண்டாகலாம். தோலை சாப்பிடுவது அவ்வளவு பழக்கத்தில் இல்லை. அதை உண்ணுவது சில உபத்திரங்களை உண்டாக்கும். உடலில் கொப்புளங்கள், எரிச்சல், நமைச்சல் உண்டாகலாம். மாமரத்தை எரித்தால் வரும் புகையும் நுகர்வதற்கு உகந்ததல்ல. இந்த புகை அபாயகரமானது.

மாங்காய் தோலில் பல ஆன்டி – ஆக்ஸிடாண்ட் பொருட்கள் இருப்பதாக சமீபத்தில் தெரிய வந்துள்ளதால், தோலை “பதனிட்டு” Anti – Oxidant  உணவுகளுடன் சேர்த்து தயாரிக்கலாம்.

மாங்காயின் உபயோகம்

மாங்காயில் மாவுச்சத்து அதிகம். தவிர, சிட்ரிக், ஆக்ஸாலிக் போன்ற இன்னும் சில அமிலங்களும் உள்ளன. இதனால் பித்த நீர் சுரக்கவும் வயிற்றை கிருமிகளிலிருந்து பாதுகாக்கவும் பயன்படும். மிருதுவான முற்றாத மாங்காய் பேதியை குறைக்கும். காரணம் அதில் உள்ள ‘பெக்டின்’.

வெய்யில் காலத்தில் Sun – Stroke ஏற்பட்டால், அபாயகரமானது. இதை தவிர்க்க மாங்காய் பெரிதும் உதவுகிறது. மாங்காய் நெருப்பில் வாட்டி, அதன் உள் சதையை எடுத்து, சர்க்கரை, தண்ணீருடன் சேர்க்கவும். Sun – Stroke பாதிப்பை குறைக்கும். மாங்காயில் உள்ள வைட்டமின் ‘சி’ 5 அல்லது 6 எலுமிச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் சி அளவுக்கு நிகரானது. பல தொற்று நோய் வராமல் மாங்காய் உடல் தடுப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால் ஆயுர்வேதம், மாங்காயை அளவுக்கு மீறி உபயோகிக்கலாகாது என்று எச்சரிக்கிறது.

மாங்காய் அளவுக்கு மீறினால் தொண்டை எரிச்சல், அரிப்பு, வயிற்றுவலி, அஜீரணம், பேதி இவற்றை உண்டாக்கலாம். தவிர மாங்காய் சாப்பிட உடன் குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம் என்கிறது ஆயுர்வேதம்.

வெய்யில் தாக்கத்திற்கு, மாங்காய்களை, ப்ரஷர் குக்கரில் (Pressure Cooker) வேக வைக்கவும். தோல், கொட்டைகளை நீக்கி, கதுப்பை எடுத்து, புதினா இலைகள், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இதை பருக சூடு குறையும். கதுப்புடன் வெந்தயம், மிளகு, வெல்லம், சிறிது உப்பு, இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.


Spread the love
error: Content is protected !!