எலுமிச்சை

Spread the love

நம் வீட்டு சமையலறையில் கண்டிப்பாக இருக்கும் பொருட்களில் ஒன்று எலுமிச்சம் பழம். ஏன், உலகத்தின் எல்லாவித சமையல்களில் பங்கு வகிக்கும் பழமும் இது தான். ருசிக்கும், பழச்சாறாகவும், மருந்தாகவும், பூச்சி கொல்லியாகவும் பலவிதங்களில் பயன்படும் எலுமிச்சை ஊறுகாயாகவும் பரிமளிக்கிறது.

எலுமிச்சை பிறந்த இடம் மத்திய ஆசியா, வட இந்தியா மற்றும் ஈரான், புத்துணர்ச்சி ஊட்டும் பானமாகவும், விஷம் முறிக்கும் மருந்தாகவும், ஆசியர்கள் எலுமிச்சையை உபயோகித்தனர். பழைய காலத்து கிரேக்கர்கள் உணவை பதப்படுத்த இதை உபயோகித்தனர். தவிர, குடி தண்ணீரை சுத்தப்படுத்தவும். தொற்றுநோய்களை தடுக்கவும் கிரேக்கர்கள் எலுமிச்சையை உபயோகித்தனர்.

எகிப்தியர்கள் காயங்களை ஆற்ற, இந்த பழத்தை பயன்படுத்தினர். சமையலிலும், கம்பளி துணிகளான பாதுகாக்கவும். பூச்சிகளை விரட்டவும், ரோமானியங்கள் எலுமிச்சையை உபயோகித்தனர்.

இந்திய கலாசாரத்துடன் ஒன்றிய எலுமிச்சைபழம், நமது இறை வழிப்பாட்டுக்கு, மலர்கள் போல் உதவுகிறது. அம்மன் கோயில்களில் எலுமிச்சை பழங்களின் மாலையை துர்க்கைக்கு சார்த்துவது தொன்று தொற்று வந்து இன்றும் கடைபிடிக்கும் ஒர் வழக்கமாகும். தவிர நாள்தோறும் உணவாகவும், மருந்தாகவும், திருஷ்டி கழிக்கவும், மங்கல பொருளாகவும் எலுமிச்சை பயன்பட்டு வருவது இன்றும் தொடருகிறது.

எலுமிச்சை ஒரு கோள (Oval) வடிவில், கிட்டத்தட்ட 71/2 செ.மீ. நீளத்துடன் பொன்னிற மஞ்சள் வண்ணத்துடன் கூடிய அழகான மணமுள்ள பழம். அழகிய பெண்மணிகளின் மேனிவண்ணம் ‘எலுமிச்சம் பழம் போன்ற நிறம்’ என்று வர்ணிப்பது வழக்கம். எலுமிச்சை சாறு தான் உபயோகம் உள்ளது என்றால், எலுமிச்சை தோலும் சில வழிகளில் பயன்படுகிறது. எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் 5 சதவீதமாக இருக்கும். இதனால் புளிப்பு சுவை கூடி உள்ளது.

எலுமிச்சம் பழ வகைகளில் 47 வகைககள் பழையகாலத்திலிருந்து இன்று வரை பயிரிடப்படுவதாக தெரிகிறது. மிருதுவாகவும் பளபளக்கும் மெல்லிய தோலும் உடைய பழங்களே சிறந்தவை.

உபயோகங்கள்

எலுமிச்சம் பழம் நமக்கு அளித்த உன்னதபானம் ‘லெமனேட்’ எனப்படும் எலுமிச்சை ஜுஸ். புத்துணர்ச்சி ஊட்டும் இந்த பானம் தாகத்தை தணிக்கும் ‘டென்சனை’ (Tension) குறைக்கும்.

எலுமிச்சை சாறு ‘ஸ்கர்வி’ எனப்படும் விட்டமின் ‘ R ‘ குறைபாட்டு நோய்க்கு நல்ல மருந்து.

எலுமிச்சை ‘ஜுஸ்’ பசியை தூண்டும்.

சிறுநீரை பெருக்கும்.

ஜீரணத்தை மேம்படுத்தும்.

பித்தத்தை குறைத்து வாந்தி, தலைச்சுற்றலை தடுக்கும்.

சுடு தண்ணீருடன் எலுமிச்சை சாற்றை கலந்து பருகிட கல்லீரல் (Liver சுத்தமடைந்து சரிவர இயங்கும்.

‘ஷாம்பூ’ போல் உபயோகிக்க உகந்தது எலுமிச்சை சாறு. தலையை சுத்தம் செய்து தலை முடியை ஆரோக்கியமாக வைக்க உதவும். மனநோயாளிகளுக்கு தலையில் எலுமிச்சை பழத்தை தேய்த்து குளிப்பாட்டினால் மன அமைதி உண்டாகும் என்று பலர் நம்புகின்றனர்.

தேன் அல்லது சர்க்கரை சேர்ந்த, வேக வைத்த எலுமிச்சம் பழத்தின் சாறு இருமலை நிறுத்தும்.

ஆமவாத (Rheumatism) நோயாளிகளுக்கு எலுமிச்சை சாறு, தேனுடனும் சேர்த்து குடித்தால் நல்லது.

லாகிரி வஸ்துகளின் (கஞ்சா போன்ற) கெடுதலை முறிக்க எலுமிச்சை சாறு உதவும்.

தோலின் பாதுகாப்புக்கு அதுவும் முகத்திற்கு எலுமிச்சை சாறு மிக நல்லது. பாலுடன் கலந்தோ, அல்லது தனியாகவோ முகத்திலும் கழுத்திலும் தடவி பின் குளித்தால் முகம் பொலிவடையும் பருக்கள் மறையும்.

உடல் எடை குறைய ‘எலுமிச்சை’ சாற்றுடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் காலையில் குடித்து வரவும். ‘செல்லூலைட்’ (Cellulite) டை குறைக்கும் தன்மை உடையது எலுமிச்சம் பழம்.

எலுமிச்சை ஒரு இயற்கை கிருமி நாசினி. பொருட்களை சுத்திகரிக்கும் குணமுடையது. பெரிய ஹோட்டல்களில், சாப்பிட்டவுடன் கை கழுவ, கிண்ணத்தில், எலுமிச்சை சாறு, துண்டுகளுடன் தருவார்கள். சோப்பை போல் கையை சுத்தம் செய்து விடும். பாத்திரங்களை கழுவும் பொடியில், எலுமிச்சை சாறு சேர்த்தால் கழுவுவது சுலபமாகும். எண்ணெய் கறையை எலுமிச்சை எடுத்து விடும்.

எலுமிச்சை சாறு கலந்த நீரினால் வாய் கொப்புளிக்க துர்நாற்றம் விலகும்.

நிணநீர் சுரப்பிகளின் செயல்பாட்டை அதிகரிக்கும். கறைகளை போக்க எலுமிச்சை சாறு உதவுகிறது. இரண்டாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்தால், ஃபிரிட்ஜில் வைத்தால், ஃபிரிட்ஜின் துர்நாற்றம் போக்கும், வாய்துர்நாற்றம் போகவும் உதவும்.

இரத்த கசிவுகளை கட்டுப்படுத்த எலுமிச்சை உதவுகிறது. மூலநோய் இரத்தக் கசிவு ‘எலுமிச்சை சாதம்’ 2,3 நாள் சாப்பிட மூல இரத்தக் கசிவு குறையும்.

வெய்யிலின் தாக்கத்தை குறைக்க, எலுமிச்சை சாறுடன் மோர், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து தாளித்து பருகிப் பாருங்கள். உடல் குளிர்ச்சி அடையும்.

எலுமிச்சை எண்ணை

எலுமிச்சை தோல் சமையலிலும், மருத்துவத்திலும், ஆரஞ்சுத் தோல் போல ஓரளவு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதன் முக்கிய உபயோகம் எலுமிச்சை எண்ணை தயாரிப்பதில் தான். புதிய தோல்களிலிருந்து Distination அல்லது அழித்தி பிசையும் முறையில், தோலிலிருந்து எண்ணை தயாரிக்கப்படுகிறது. எண்ணையில் சிட்ரால் (Citral), லிமோநீன் (Limonene) லினாலூல் (Linalool), லினலில் அசிடேட் (Linalyl acetate) மற்றும் ஸீமீன் (Cymene) என்ற வேதிப்பொருள்கள் உள்ளன. 675 லிருந்து 1400 எலுமிச்சை பழங்களிலிருந்து 1/2 கிலோ எண்ணை கிடைக்கும. எண்ணை மஞ்சள் – பச்சை நிறத்துடன், நல்ல நறுமணத்துடன் இருக்கும். எலுமிச்சை எண்ணை சோப்புகள் தயாரிப்பு, அழகு சாதனங்கள், வாசனை திரவியங்கள் இவற்றில் பயன்படுகிறது. எலுமிச்சை எண்ணை சேர்த்துக் குளிக்கலாம். எலுமிச்சை எண்ணை தோல் சுருக்கங்களை குறைக்கும். கிளிசரின் (Glycerine) சேர்ந்த எலுமிச்ச எண்ணை முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மறைய உதவும்.

எலுமிச்சையில் உள்ள பொருட்கள்

100 கிராம் எலுமிச்சையில் உள்ளவை

1.         ஈரம்

2.         புரதம்

3.         தாதுப் பொருட்கள்

4.         கொழுப்பு

5.         கார்போஹைட்ரேட்

6.         கால்சியம்

7.         பாஸ்பரஸ்

8.         அயச்சத்து

9.         விட்டமின் சி

10.       சிட்ரிக் அமிலம்

தோலில்லாத எலுமிச்சை

84.6 கி

1.5 கி

1.8 கி

1.0       கி

10.9 கி

90 மி.கி

20 மி.கி

3 கி

63 மி.கி

5 கி

எலுமிச்சை தோல்

66.5 கி

1.8 கி

1.8 கி

0.5 கி

29.4 கி

710 மி.கி

60 மி.கி

2.7 மி.கி

சமையலில் எலுமிச்சை பல உணவுகளுக்கு சுவை கூட்ட உதவும். உதாரணம் உப்புமா, பாவு பாஜி, எலுமிச்சை தோல் ‘மர்மலேட்’ (Marmalade) செய்வதில் சேர்க்கப்படுகிறது. எலுமிச்சம்பழம், தேன், இஞ்சி இவற்றுடன் சேர்த்து, வீட்டு வைத்தியத்தில் பல உபாதைகளுக்கு கைமருந்தாக உதவுகிறது.


Spread the love