ஒரு தம்ளர் சுடு தண்ணீரில் சிறிது வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று, ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இப்படி வெல்லமும் எலுமிச்சை சாறும் கலந்த தண்ணீரை குடிப்பதனால் என்னென்ன நன்மைகள் வரும் என்பதை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் வெல்லமும், எலுமிச்சை சாறும் கலந்து தண்ணீர் குடித்து வந்தால், வயிறு பிரச்சனைகளை சரிசெய்யலாம். அதுமட்டுமின்றி குடல் அசைவுகளும் சீராகும்.
சுடு தண்ணீரில் வெல்லமும், எலுமிச்சை சாறும் சேர்க்கும் பொழுது பொட்டாசிய உள்ளடக்கம் அதிகமாகும். இது இருதய பிரச்சனையையும், உயர் இரத்த அழுத்தத்தையும் சரி செய்வதற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி தலை வலி, மயக்கம், வாந்தி அனைத்திற்கும் இந்த வெல்லமும் எலுமிச்சை சாறும் சேர்த்து கலந்த தண்ணீர் மிகவும் நல்லது.
வெல்லமும் எலுமிச்சை சாறும் கலந்து சாப்பிடுவது ஒரு நல்ல anti septic மருந்தாகும். இந்த தண்ணீரை குடித்தால் internal bleeding கூட நின்றுவிடும் என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர்.
கெட்ட மூச்சுக்காற்று, பல் சிதைவு, பல் இழப்பு, பசை பிரச்சனை, பல்முனைத் தகடு மற்றும் டார்ட்டர், வாய்ப்புண், குழிவுகள் என அனைத்து தனிப்பட்ட பிரச்சனைக்கும் இந்த வெல்லமும் எலுமிச்சை சாறும் கலந்த தண்ணீர் மிகவும் நல்லது.