வயிற்றுப் புழு நீங்குவதற்கு
வேப்பங்ககொழுந்து 50 கிராம் அளவு எடுத்து நிழலில் காய வைத்துக் கொள்ளவும். சுண்டை வற்றல் 50 கிராம் எண்ணெய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், ஓமம் பொருட்களையும் தேவையான அளவு எடுத்து வறுத்து உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய அனைத்துப் பொருட்களின் பொடியையும் ஒன்றாகக் கலந்து ஒரு காற்று புகாத கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் அளவு
தினசரி மதிய உணவில் இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்துப் பிசைந்து ஒரு வாரம் வரை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
ஒல்லியாக இருப்பவர்கள் உடல் பருமன் பெற
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஒவ்வொன்றும் 50 கிராம், மிளகு 10 கிராம், எள் 100 கிராம், உப்பு தேவையான அளவு பொடித்து வைத்துக் கொள்ளவும். உப்பைத் தவிர மற்ற அனைத்தையும் வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இதனுடன் பொடித்து வைத்த உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் அளவு
தினசரி மதிய உணவான சூடான சாதத்தில் இப்பொடி ஒரு மேசைக் கரண்டி அளவு எடுத்து நெய் சேர்த்து உண்டு வர வேண்டும்.
குண்டாக இருப்பவர்கள் உடல் எடை குறைய
ஒல்லியாக இருப்பவர்கள் இடல் பருமன் பெற பயன்படுத்தும் பொடி செயல்முறையில் எள்ளுக்குப் பதிலாக கொள்ளு தானியத்தை பயன்படுத்த வேண்டும். மற்றபடி அளவும், செய்முறையும் ஒன்று போலவே அமைகிறது.
உட்கொள்ளும் அளவு
தினசரி மதிய உணவு, இரண்டு தேக்கரண்டி அளவு பொடியை நல்லெண்ணெய் விட்டு முதல் பிடி சாதத்தில் மட்டும் சேர்த்து சாப்பிட வேண்டும். நீரிழிவு, இதயம் சார்ந்த நோய்களுக்குரிய எள்ளுப் பொடி பயன்படுத்தி வர குணம் பெறலாம்.
மசக்கை காரணமாகவும், பொதுவான காரணமாகவும் ஏற்படும் சுவையின்மை, வாய்க்கசப்பு போன்றவை நீங்க
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை, நாரத்தை இலை, சீரகம், பூண்டு, இவைகள் தலா 10 கிராம் அளவு,
காய்ந்த மிளகாய் 5கிராம்,
பெருங்காயம் 2 கிராம்,
உளுத்தம் பருப்பு 50 கிராம்,
புளி பெரிய நெல்லிக்காய் அளவு,
தேவையான அளவு உப்பு
செய்முறை
உப்பு ஒன்றைத் தவிர, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் வறுத்துக் கொள்ளவும். அதன் பின்பு, அவை பொடியாகச் செய்து, உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி, காற்றுப் புகாத கண்ணாடி, பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உட்கொள்ளும் அளவு
தினசரி மதிய வேளை உணவான, சாதத்தில் இரண்டு தேக்கரண்டி அளவு போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
நீரிழிவு நோய் குணமாக உதவும் பாகற்காய் பொடி
தேவையான பொருட்கள்
பாகற்காய் காய வைத்து தயார் செய்த பொடி 100 கிராம்
சீரகம், மிளகு, கறிவேப்பிலை, கடுக்காய் ஆகியவை ஒவ்வொன்றும் தலா 10 கிராம்
வெந்தயம் 20 கிராம்
மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் எண்ணெய் விடாமல் வறுத்து பொடியாக செய்து கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் அளவு
மதிய உணவான சாதத்தின் முதல் பிடியில் மட்டும் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும்.
ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ளவர்கள், கை, கால், எரிச்சல் காணும் நீரிழிவு நோயாளிகளுக்கு
பொட்டுக் கடலை எனக் கூறப்படும் பொரிகடலை 100 கிராமுடன் சீரகம், மிளகு தலா 20 கிராம் அளவு எடுத்து, மூன்றையும் வறுத்து பொடியாக செய்து கொள்ள வேண்டும். பின்னர் இத்துடன் உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் அளவு
தினசரி மதிய உணவான சூடான முதல் பிடி சாதத்தில் 2 தேக்கரண்டி அளவு மேற்கூறிய பொடியை நெய் சேர்த்துக் கலந்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
பசி உணர்வு இன்மை, உணவு ருசியின்மை உணர்வு நீங்க
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் ஒரு மூடி
நாரத்தை இலை 10
புளி – எலுமிச்சை அளவு
பூண்டு 50 கிராம்
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
சீரகம், கொத்தமல்லி தலா 20 கிராம்
காய்ந்த மிளகாய் 5 கிராம்
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு தலா 50 கிராம்
செய்முறை
தேங்காய் துருவலை சிவக்க வறுக்கவும். புளியை எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள மற்ற சரக்குகளையும் வறுத்துப் பொடியாக செய்து கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து, காற்றுப் புகாத கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.
உட்கொள்ளும் அளவு
தினசரி மதிய வேளை அரிசி சாத உணவில் 2 தேக்கரண்டி மேற்கூறிய பொடியை நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வரலாம். நல்லெண்ணெய் சேர்க்கவில்லையெனினும் பிரச்சனை இல்லை.
இரத்த அழுத்தம், இதயம் சார்ந்த, சர்க்கரை நோயுள்ளவர்களுக்குரிய மருத்துவ பொடி, வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும் உகந்தது
தேவையான பொருட்கள்
மிளகு, சீரகம் தலா 10 கிராம்
பூண்டு 30 கிராம்
உளுத்தம் பருப்பு 50 கிராம்
உப்பு தேவையான அளவு
செய்முறை
மேற்கூறிய மூன்று பொருட்களையும், உப்பு தவிர்த்து, வறுத்து பொடி செய்து, அனைத்தையும் கலந்து கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் அளவு
சுடு சோறாக மதியம் மட்டும் சாப்பிட வேண்டும். சூடான சாதத்துடன் மேற்கூறிய தயாரித்த பொடியில் 2 தேக்கரண்டி சாப்பிடவும்.
வயிற்றுக் கடுப்பா? சீத பேதியா? வயிற்றுப் புண்ணா? பயம் வேண்டாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெயில் வறுத்த சுண்ட வற்றல்
காய வைத்து, பொடியாக்கிய மாங்காய்க் கொட்டைப் பருப்பு
நிழலில் உலர்த்திப் பொடி செய்த மாதுளம் பழத் தோல் 50 கிராம்
உலர்ந்த கறிவேப்பிலை 10 கிராம்
பெருங்காயம் ஒரு கிராம்
வெந்தயம் 10 கிராம்
செய்முறை
பெருங்காயம், வெங்காயம் இரண்டையும் வறுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிடி குழைய வேக வைத்து சூடான சோற்றில் சுடுநீரில் கலந்து சாப்பிட வேண்டும்.