நுரையீரல், மூளை, உயிரணு, இதற்கு நல்லது செய்யும் பச்சை பட்டாணி…!

Spread the love


பச்சைபட்டாணியில் நீர்சத்து, கொழுப்புசத்து, புரதம், கால்சியம், நார்சத்து, கார்போஹைட்ரேட்,பாஸ்பரஸ், இரும்புசத்து, சோடியம், பொட்டாசியம், பீட்டாகரோட்டின் என அதிகமான உயிர்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.
ஓய்வு நேரத்தில் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் கெட்ட கொழுப்புகளை உடலில் சேர்த்துக் கொள்வதற்கு பதிலாக பச்சை பட்டாணியை வேக வைத்து 1௦௦ கிராம் சாப்பிட்டு வாருங்கள்.இதில் இருக்கும் 
பைட்டோனுயூட்ரியின் வயிற்று புற்றுநோயை தடுக்கும். பெண்களுக்கு குறைந்தபட்ச கருத்தடை தன்மையை கொண்டிருப்பதினால் கருவுற்ற பெண்கள் இதை தவிர்ப்பது நல்லது. ஆனால் ஆண்களின் உயிரணுக்களை  உற்பத்தி செய்யவும், மலட்டு தன்மையை நீக்கவும் பச்சைபட்டாணி ஆண்களுக்கு சிறந்த ஆயுதமாக இருக்கும். இரும்புசத்தும் இதில் அளவில்லாமல் நமக்கு கிடைக்கும். 

இரத்த அணுக்களை அதிகரித்து இரத்த சோகையை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டவும் பச்சைபட்டாணியை சாப்பிட்டு வருவது நல்லது. இதில் இருக்கும் கரையாத நார்சத்து, ஊள சதையை குறைத்து இதய நோய் வராமலும் தடுக்கும். உடல் எடை அதிகரிக்கவே இல்லை என கவலை படுகிறவர்கள், தினமும் பச்சை பட்டாணியை சாப்பிட்டு வந்தால் உடல் சதை பிடிப்பதோடு, உடல் பலமும் பெறும். 

நுரையீரலுக்கு பலத்தை கொடுக்க கூடியதுதான் பச்சைபட்டாணி, சமைக்கும் போது மற்ற காய்கறிகளோடு சிறிது பச்சைபட்டாணியையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், இதயம், நுரையீரல் சம்மந்தமான எந்த நோயும் நெருங்காது.  பச்சைபட்டாணியில் இருக்கும் பாஸ்பரஸ், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த பலன் தரும் மற்றும் இதில் இருக்கும் கால்சியம், எலும்புகள் பலம் பெற உதவுகிறது.

பச்சைபட்டாணியில் நார்சத்தும், புரதமும் இருப்பதினால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். மேலும் இந்த நார்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கும். உயிர் சத்தாக இருக்க கூடிய வைட்டமின் சி, நுரையீரல் புற்றுநோய், இரத்த புற்றுநோய்,ஆசனவாய் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.Spread the love