ஃபோலிக் அமிலம்

Spread the love

ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். குழந்தையின் மூளைவளர்ச்சிக்கு நல்லது. அது பச்சைக் காய்கறிகளில்தான் கிடைக்கும். சமைத்த உணவில் கிடைக்காது. நாம் சாப்பாட்டில் அதைக் கொண்டுவர முடியாததால் மருத்துவர்கள் மாத்திரையாகக் கொடுப்பார்கள். பொதுவாக நல்ல பலன் ஏற்பட வேண்டும் என்று, திருமணம் ஆனவுடன் கர்ப்பமாகும் முன்பே மருத்துவர்கள் இந்த மாத்திரைகளைப் பரிந்துரை செய்வார்கள்.

நுரையீரலும் புற்றுநோயும்

உடலின் பல உறுப்புகளையும் புற்று நோய் பாதிக்க கூடுமென்றாலும், குறிப்பாகப் புகை பிடிப்பவர்களையும், வயது முதிர்ந்தவர்களையும்

பொதுவாகப் புற்றுநோய் 60 வயதுக்குமேற்பட்டவர்களையும், நீண்ட நாட்கள் -ஆஸ்த்துமாவினால் பாதிக்கபட்டவர்களையும், உடல் பலவீனமாக உள்ளவர்களையுமே மிகுதியாய்த் தாக்குகின்ற வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம். புகைப்பழக்கம் இல்லாதவர்களைவிட புகைப் பழக்கமுள்ளவர்களுள் சுமார் 40% இந்நோயால் இறக்கின்றனர். புகைப்பதை நிறுத்தினாலும் பல ஆண்டுகள் கழித்து, நுரையீரலில் ‘புற்றுநோய்’ வர வாய்ப்பு மிகுதியாய் உண்டு. புகைபிடிப்போர் அருகில் இருந்தாலும் அப்புகையின் கொடுமை புகை பிடிக்காதவரையும் தாக்கும். சிற்று£ர்களில் வாழ்வோரை விட, நகரத்தில் வாழ்வோரிடையே இந்நோய் சற்று மிகுதியாய்க் காணப்படும். இதற்கு தீயதூய்மையில்லாத காற்றும் ஒரு காரணமாகும்.

      நுரையீரல் புற்றுநோய் தோன்றினால், அதன் முதல் அறிகுறி இருமலாகும். அது தொடர்ந்து இருக்கும். சாதாரண மருந்துக்குக் கட்டுபடாது. சிறிது இரத்தமும் வெளிப்படும். சளி அடிக்கடி வரும். நடந்தால் சற்று மூச்சுத் திணறலும் ஏற்படும். புற்றுநோய் மார்பு எலும்பிற்கோ, நரம்பிற்கோ பரவினால் அவ்விடத்தில் தொடர்ந்து கடுமையான வலி உண்டாகும். குரலும் மாறலாம். உணவு உட்கொள்ளும் பொழுது அடைப்பும் தோன்றலாம்.

      முதுமையில் நோய் அறிகுறி ஏதுமின்றியும் நுரையீரல் புற்றுநோய் இருக்க வாய்ப்புண்டு. இதனை ‘எக்ஸ்ரே’ முலமே கண்டறிய முடியும். மேற் குறிபிட்ட நோய் அறிகுறிகள் முதியவர்களுக்கு ஏற்படும் பொழுது ‘மிகுதியாய் அந்நோய் முற்றிய நிலையை அடைந்திருக்கும்-‘ அதாவது சிகிச்சை செய்ய முடியாத நிலையை அடைந்திருக்கும் எனக் கருதலாம். முதுமையில் நுரையீரலில் தோன்றும் புற்றுநோயினைத் தொடக்க நிலையிலேயே கண்டறிதலும் மிகக் கடினம். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் (அண்மைக் காலத்தில் அப்பழகத்தை கைவிட்டிருந்தாலும் கூட) தொடர்ந்து இருமல் ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அவருக்கு ‘புற்றுநோய் உள்ளது’ என்று முடிவு செய்யப்பட்டால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அதற்கு பதிலாக மருந்து மற்றும் ரேடியம் சிகிச்சை முறையினையும் மேற்கொள்ளலாம். தற்போது புற்றுநோய்க்குச் சிறந்த பல மருந்துகளும் மருத்துவ முறைகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எனவே புற்றுநோய் என்றதுமே மனம் தளர்ந்து விட வேண்டாம்.      


Spread the love