நார்ச்சத்து

Spread the love

நார்ச்சத்து கர்ப்பக் காலத்தில் முக்கியமானதாகும்.

நார்ச்சத்து

நார்ச்சத்து என்ற வார்த்தை, தற்போது அடிக்கடி நாம் கேட்கும், படிக்கும் வார்த்தைகளில் ஒன்று.

நார்ச்சத்து என்றால் என்ன?

நார்ச்சத்து, தானியங்கள், காய்கறிகள் இவற்றில் உள்ள செரிக்க கடினமான பொருள். ஜீரணமண்டல உறுப்புகளால் இவை ஜீரணிக்க முடியாததால், நார்ச்சத்து “கிடைக்காத கார்போஹைடிரேட்ஸ்” என்றும் சொல்லப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் நார்ச்சத்து என்றால் உணவின் முழுமையாக ஜீரணிக்க முடியாத பகுதி. அப்படியானால் இதனால் என்ன பலன்? அதைச் சொல்லு முன், நார்ச்சத்தை பற்றிய சில விவரங்களை தெரிந்து கொள்வோம்.

நார்ச்சத்து இரண்டு வகைப்படும்

  1. நீரில் கரையக்கூடியது – திரவங்களில் கரையும் நார்ச்சத்து, கரைந்தவுடன், ‘ஜெல்’ போல் ஆகிவிடும். இந்த கரையும் நார்ச்சத்து பெரும்பாலும், ” Pectin ” உள்ளவை. ஓட்ஸ் உமி, ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி உமி, பார்லி, சாத்துக்குடி – ஆரஞ்ச் போன்ற ‘சிட்ரஸ்’ பழங்கள், ஆப்பிள் கோது, தானியம், பருப்பு இவை கரையும் நார்ச்சத்து உள்ளவை. கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
  • கரையாத நார்ச்சத்து – இது ‘roughage ‘ எனும் கூறப்படும் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், லிக்னின் உள்ளவை. இவை பல தானியங்களில், பழங்கள், காய்கறிகள் (ஆப்பிள் தோல், முட்டைகோஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், கேரட் போன்றவை) இவற்றில் உள்ளவை. கரையாத நார்ச்சத்து ஜீரணத்திற்கு உதவும். மலச்சிக்கலை போக்கும்.

நார்ச்சத்தின் பயன்கள்

  1. கரையாத நார்ச்சத்து நீரை உறிஞ்சி மலத்திற்கு அடர்த்தியையும், திடத்தன்மையையும் கொடுக்கிறது. மலம் மிருதுவாகிறது. சுலபமாக வெளியேறுகிறது. இதனால் மலச்சிக்கல் மறைகிறது. மலச்சிக்கல் இல்லாவிடில் வயிறு, குடல்களின் அழற்ச்சிகள் தடுக்கப்படுகின்றன. மூலம், குடல்களில் உண்டாகும் புற்றுநோய்கள் தடுக்கப்படுகின்றன.
  • நார்ச்சத்து மிகுந்த உணவுகள் அடிவயிற்று சங்கடம் (Inflammatory Bowel Disease)  மற்றும் எரிச்சலூட்டும் வயிற்று சங்கடம் (Irritable bowel syndrome), டைவர்டிகுலா (ஜீரணமண்டல பாகங்களில் அழற்சி), போன்ற வயிற்றுக் கோளாறுகளை குணமாக்குகின்றன.
  • கரையாத நார்ச்சத்தினால் வயிறு நிரம்பிய உணர்வை, திருப்தியை உண்டாக்குகிறது. அதிக நேரம் (4 – 6 மணி நேரம்) வயிற்றில் தங்குகிறது. பசியை தூண்டும் இன்சுலீனை கட்டுப்படுத்துகிறது. இந்த செயல்பாடுகளால் பசி எடுப்பதில்லை. இது உடல் எடையை அதிகமாக்காமல் பாதுகாப்பதால், குண்டானவர்களுக்கு எடை குறைய உதவுகிறது.

எவ்வளவு நார்ச்சத்து தேவை?

தினசரி 20-30 கிராம் நார்ச்சத்து தேவைப்படும். நார்ச்சத்து நன்கு பயனாக, அத்துடன் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் இல்லாவிட்டால், அதிக நார்ச்சத்து, குறைந்த நீர், மலச்சிக்கலை அதிகமாக்கும்.

நார்ச்சத்து உள்ள பொருட்கள்

  1. தானியங்கள் – அரிசி, ராகி, ஓட்ஸ், சோளம், பார்லி, முழு கோதுமை, கைக்குத்தல் அரிசி.
  • காய்கறி – முருங்கக்காய், பீன்ஸ், காலிஃப்ளவர், கறிவேப்பிலை, பட்டாணி, கீரைகள்.
  • பருப்புகள் – பச்சைபயறு, கடலைப்பருப்பு, சோயாபீன்ஸ், பாதாம், வாதாம்.
  • இதர உணவுகள் – தேங்காய், சூரிய காந்தி, விதைகள், எள், வேர்க்கடலை,
  • பழங்கள் – ஆப்பிள், பேரீட்சை, நெல்லி, வில்வம், திராட்சை, எலுமிச்சை,ஆரஞ்ச்.

Spread the love
error: Content is protected !!