கொஞ்சம் உணவு கொஞ்சம் உடற்பயிற்சி

Spread the love

என்ன தொழிலில் இருந்தாலும், உடல் நலம் தொடர்பான செயல்களிலும் கவனம் செலுத்த வேண்டும். எதில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும்? சில குறிப்புகள்.

காலை உணவை எப்போதும் தவிர்க்காதீர்கள். அந்த நாள் முழுவதும் நமக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் சத்துகள் மிகுந்ததாய் இருக்க வேண்டும் காலை உணவு.

3 வேளை உண்ணுதல் என்பதை மாற்றி சிறிய இடைவேளைகளில் ஐந்து வேளை மிதமாக உண்பது உடல்நலத்திற்கு மிக நன்மை பயக்கும் என்று தற்போது உணவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சத்துமிகுந்த காய்கறிகளும் மது,புகை, ஃபாஸ்ட் ஃபுட், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக ஹெர்பல் டீ, உலர் பழங்கள், இயற்கை பானங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

நிறைய தண்ணீர் அருந்துதல் நல்லது. உடலில் தண்ணீர் குறைவதால் செரிமானம் சரிவர நடப்பதில்லை. மலச்சிக்கல், தோல் சுருக்கம், மயக்கம் போன்ற நோய்கள் தலைகாட்டும்.

இரவு உணவு மிதமாக உட்கொள்ள வேண்டும்.

அளவான உணவும் மிதமான உடற்பயிற்சியும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். அத்துடன் போதுமான தூக்கமும் அவசியம்.

7 முதல் 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். தூக்கத்தில் தான் உடல் உறுப்புகளின் செல்கள் தங்களை புதுப்பித்துக் கொள்கின்றன.

உடல் எடைஅதிகம் இருப்பவர்கள் அதனைக் குறைக்க மருந்து மாத்திரைகள் போன்றவற்றை தகுந்த மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ளக் கூடாது. இப்போது உடல் எடையைக் குறைக்கிறோம் என்று இதையே ஒரு தொழிலாகச் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

உடல் நலமும் மனநலமும் ஒன்றையொன்று சார்ந்தவை. மனம் நலமுடன் இல்லையெனில் உடலில் சில நோய்களை உண்டாக்கும். எனவே, உடலுக்கு நோய் வரும்போது எப்படி ஒரு டாக்டரை பார்க்கின்றோமோ அதுபோல மனம் நலமாக இல்லையென்றால் ஒரு மனநல ஆலோசகரை அணுகுவது அவசியமாகும்.


Spread the love