நீண்ட நாட்களாக முட்டை ஓர் புறக்கணிக்கப்பட்ட உணவாகவே இருந்து வந்துள்ளது. இதற்கு ஒரே காரணம் அதன் கொழுப்புச்சத்து ஆகும். கொலஸ்ட்ரால், கொழுப்பு அதிகமாக உள்ளதால் முட்டை சில பிரச்சனைகளையும், கொலஸ்ட்ரால் அளவையும் அதிகப்படுத்தி விடும் என்ற பயமே இதற்குக் காரணம்.
ஆனால், தற்பொழுது ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். கொழுப்பு சத்து கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உடையவர்கள், உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள், கொலஸ்ட்ராலுக்காக மருந்துகள் உட்கொள்ளும் யாருக்கும் இவை எந்த பெரிய ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது. இதனை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
பரம்பரை பரம்பரையாக வரும் நோய்களான இதய தாக்கு, போன்றவைக்கு கொலஸ்ட்ரால் அளவு கூடுவது என்பது ஒரு பிரச்சனை அல்ல இருப்பினும் அவற்றை கட்டுப்பாட்டில் வைப்பது மிக நல்லது முட்டை ஒர் சிறந்த உணவாகும் அதில் உயர் தரமான சிறந்த புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. வைட்டமின் ஏ போன்ற உயர்ந்த வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளன. பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், கால்ஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம் போன்றவை அதிகம் காணப்படுகின்றது. எனவே முட்டை மிகவும் சிறந்த ஒர் ஒப்பற்ற உணவாகும்.
முட்டையை அதிகமாக வேக வைக்கக் கூடாது, அப்படி செய்தால் முட்டையில் அடங்கியுள்ள அனைத்து சத்துக்களும் அழிந்து விடும். வேக வைக்கும் பொழுது அதிகம் வெந்து விட்டால் முட்டையில் சில சமயம் பச்சை நிறமான வளையும் போன்று தோன்றும். இது இரும்புச் சத்து கெட்டுவிடுவதற்கான அறிகுறியாகும். முட்டை உண்பதால் நமக்கு தசைகளை நன்கு பராமரிக்க புரதம் கிடைக்கின்றது. கண்களைப் பாதுகாக்க வைட்டமின் ஏ கிடைக்கின்றது.
செரிமானத்தை முழுமையாக நடத்த H காம்ப்ளக்ஸ் கிடைக்கின்றது. பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவையான பாஸ்பரஸ் மற்றும் கால்ஷியம் கிடைக்கின்றது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான துத்தநாகம் கிடைக்கின்றது. நல்ல இரத்தம் உற்பத்தியாவதற்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கின்றது.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தன்னுள்ளே அடக்கியுள்ள 50 கிராம் எடை கொண்ட முட்டையை, ‘ஒர் உன்னத உணவு‘ என்று அழைக்க வேண்டும்.
எக் ட்ராப் சூப்
தேவையான பொருட்கள்
முட்டை –2
ஸ்பிரிங் ஆனியன் –2
அஜினமோட்டோ –1சிட்டிகை
கார்ன் ஃப்ளார் –1டே.ஸ்பூன்
வெண்ணெய் –1டே.ஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு -தேவையான அளவு
சோயா சாஸ் -சில துளிகள்
செய்முறை
முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெண்ணெயை சூடாக்கி ஸ்பிரிங் ஆனியனைப் போட்டு வதக்கவும். பின் கார்ன் ஃப்ளாரையும் போட்டு வதக்கவும். 1 நிமிடம் கழித்து 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். பின் அஜினமோட்டோ சேர்க்கவும். கடைசியாக அடுப்பைக் குறைத்து அடித்து வைத்துள்ள முட்டையை சொட்டு சொட்டாக கொதிக்கும் சூப்பில் விடவும். கடைசியாக உப்பு, மிளகுத்தூள், சில துளி சோயா சாஸ் சேர்த்து பரிமாறவும்.
பாம்பே டோஸ்ட் ஸ்வீட்
தேவையான பொருட்கள்
ப்ரெட் சிலைஸ் –6
முட்டை –2
பால் –4டே.ஸ்பூன்
சீனி –6டீஸ்பூன்
நெய் –6டீஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் முட்டை, பால், சீனி முன்றையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு பெரிய ப்ளேட்டில் ஊற்றி ப்ரெட் சிலைஸ்களை ஒவ்வொன்றாக இரு புறமும் நனைத்து எடுத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் நெய்யை சூடாக்கி அதில் முட்டையில் முக்கி எடுத்த ப்ரெட் ஸ்லைஸ்களை ஒவ்வொன்றாகப் போட்டு முன்னும் பின்னும் வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: இனிப்பு பிடிக்காதவர்கள் சீனிக்கு பதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து டோஸ்ட் செய்யலாம்.
மார்பிள் முட்டை
தேவையான பொருட்கள்
முட்டை –6
பட்டை பொடி –1டீஸ்பூன்
டீத்தூள் –2டீஸ்பூன்
அன்னாசிப்பூ –2
சோயா சாஸ் –2டீஸ்பூன்
செய்முறை
முட்டையை தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து வேக வைக்கவும். வேக வைத்த முட்டையின் ஒட்டை ஒரு ஸ்பூனால் கிரேக் (சிக்ஷீணீநீளீ) விழுமாறு லேசாக எல்லாப் பக்கமும் தட்டவும். பின்னர் இந்த முட்டைகளை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போடவும். பட்டைபொடி, டீத்தூள், அன்னாசிப்பூ, சோயா சாஸ் எல்லாவற்றையும் தண்ணீரில் போட்டு அடுப்பைக் குறைத்து 1/2 மணி நேரம் வேக வைக்கவும். ஆறியவுடன் முட்டையின் ஒட்டை உரித்தெடுக்கவும். இப்போது முட்டை மார்பிள் கல் போல தோற்றமளிக்கும். முட்டைகளை சில்லி சாஸீடன் பரிமாறவும்.
பாம்பே டோஸ்ட் காரம்
தேவையான பொருட்கள்
பிரெட் ஸ்லைஸ் –10
முட்டை –3
உப்பு, நெய் -தேவையான அளவு
பால் –1/2கப்
மிளகுத்தூள் –1/2டீஸ்பூன்
பச்சைமிளகாய் –2
வெங்காயம் –1
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/4டீஸ்பூன்
கொத்தமல்லி -சிறிது
செய்முறை
பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். முட்டையுடன், உப்பு, பால், மிளகுத்தூள், பச்சைமிளகாய், வெங்காயம் அரைத்தது, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு ஸ்பூனால் நன்கு அடித்துக் கொள்ளவும். ப்ரெட் ஸ்லைஸ்களை ஒன்று ஒன்றாக இக்கலவையில் முக்கி எடுத்து தோசைக்கல்லில் நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து கொத்தமல்லி தூவவும். தக்காளி சாஸீடன் பரிமாறவும்.
உணவு நலம் மார்ச் 2011
முட்டை, உன்னத, உணவு, கொழுப்புச்சத்து, கொலஸ்ட்ரால், கொழுப்பு, உணவு, இதய தாக்கு, வைட்டமின், ஏ, பி, காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள், கால்ஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், இரும்புச் சத்து, துத்தநாகம், இரத்தம், இரும்புச்சத்து, உடல் ஆரோக்கியம், எக் ட்ராப் சூப், செய்முறை, முட்டை, ஸ்பிரிங் ஆனியன், அஜினமோட்டோ, கார்ன் ஃப்ளார், வெண்ணெய், மிளகுத்தூள், சோயா சாஸ்,
பாம்பே டோஸ்ட் ஸ்வீட், செய்முறை, ப்ரெட் சிலைஸ், முட்டை, பால், சீனி, நெய்,
மார்பிள் முட்டை, செய்முறை, முட்டை, பட்டை பொடி, டீத்தூள், அன்னாசிப்பூ,
பாம்பே டோஸ்ட் காரம், செய்முறை, பிரெட் ஸ்லைஸ், முட்டை, மிளகுத்தூள், பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி,