முருங்கை கீரையா? பவுடரா?

Spread the love

ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை பிறப்பிடமாகக் கொண்ட முருங்கை உலகிலேயே மிக அதிக அளவு சத்துகளைக் கொண்ட தாவர வகையாகும்.

முருங்கை இலையை சுத்தம் செய்து இயற்கை முறையிலேயே உலரச் செய்து பொடியாக்கப்படுகிறது. பசுமை மற்றும் சுவை தரும் ஒன்றாக முருங்கை இலைப்பொடி அமைந்துள்ளது.

9 வகைகளில், நமக்குத் தேவையான அமிலோ அமிலங்களுடன் 25 சதவீத தாவர புரதச் சத்துகளைக் கொண்டுள்ளது. 24 சதவீதம் நார்ச் சத்தும், இரும்பு, வைட்டமின் கே மற்றும் இ உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் சத்துகளைக் கொண்டுள்ளது. அதிக அளவு ஆன்டி ——– ஆக்சிடண்ட் பொருட்கள் அடங்கியுள்ளன. முருங்கை இலைப் பவுடர் இயற்கையிலேயே மேற்கூறிய சத்துகளைப் பெற்றிருப்பதால் நமது உடல் எளிதாக (செயற்கை முறை தயாரிப்பில் உட்கொள்ளக் கூடிய சத்துகளை உட்கொள்வதை விட) உட்கிரகிக்க இயலுகிறது.

முருங்கை இலைப் பொடியின் பல வித மருத்துவப் பயன்கள்

களைப்பு மற்றும் சோர்வினைக் குறைக்கிறது

பொதுவாக நடைமுறை வாழ்க்கையில் 5ல் ஒருவர் வழக்கத்திற்கு மாறாக சோர்வுற்றவராகவும், 10ல் ஒருவர் அதிக களைப்புள்ளவராகவும் உள்ளனர் என்று இங்கிலாந்தில் உள்ள இராயல் மன நலக் கல்லூரியின் மருத்துவ ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.

ஒரு முறை உட்கொள்ளும் முருங்கை இலை பவுடரானது (10 கிராம் அல்லது இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அளவு) உங்கள் தினசரி தேவையான இரும்புச் சத்தில் 32.2 சதவீதத்தை வழங்குகிறது. வைட்டமின் ஏ சத்தில் 18 ——– 19 சதவீத அளவை வழங்குகிறது. மனித உடலில் ஏற்படும் சோர்வு, அதிகக் களைப்பினை குறைப்பதற்கு இரும்புச் சத்து தேவையான ஒன்றாகும். உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு திறமையாகச் செயல்பட வைட்டமின் ஏ சத்து அதிக அளவு உடலில் இருக்க வேண்டும். முருங்கை இலைப் பவுடரை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் சோர்வு, களைப்பு ஏற்படுவது இயற்கையாகவே தடுக்கப்படுகிறது. இது புத்துணர்ச்சி அதிகரிக்கவும் உதவுகிறது. இயற்கை உணவு, சைவ உணவு உட்கொள்பவர்களுக்கும், இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முருங்கை இலைப் பவுடரில் உள்ள அதிக அளவு இரும்புச் சத்து மிகவும் ஏற்றதாகும்.

சருமத்தை மினுமினுக்கச் செய்யும்

ஆரோக்கியமான, பிரகாசிக்கும் சருமத்திற்கு வைட்டமின் ஏ சத்து உடலுக்கு அவசியமான ஒன்று. வைட்டமின் ஏ சத்தானது சரும செல்கள் சேதமடைவதைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகும். இதன் மூலம் முதுமைத் தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. அனைத்து வகையான உணவுப் பொருட்களில் மிக அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் உள்ள உணவுகளில் முருங்கையும் ஒன்று.

ஆண்டி ஆக்ஸிடண்டுகள், செல்கள் சேதம் அடைவதை தடுக்கவும், அதனை சரி செய்திடவும், பாதுகாக்கவும் அவசியமன ஒன்று. சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதை தடுக்கிறது. ப்ரிரேடிக்கல்ஸ்களுக்கு எதிராக வேலை செய்கிறது. சருமம் உலர்தல், முகச் சுருக்கங்கள், இளம் வயதில் முதுமைத் தோற்றம் போன்றவைகள் பிரிராடிக்கல்கள் காரணமாக ஏற்படுகிறது.

நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது

முருங்கையின் தனித் தன்மையான சிறப்பு, இதில் அதிகளவு நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கும் சத்துப் பொருள்கள் உள்ளன என்பதே! நமது உடல் தொற்றுக்கள் மற்றும் நோய்த் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க உதவும் நோய் எதிர்ப்புச் சக்தி செயல்பாடுகளினால் மட்டுமே ஆரோக்கியமான உடலை நாம் பெற இயலும். முருங்கை இலையில் நோய் எதிர்ப்புச் சக்திக்கு உதவும் வைட்டமின் ஏ 18.9 சதவீதமும், இரும்புச் சத்து 32.2 சதவீதமும் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மேற்கூறிய இரண்டு சத்துக்களும் மிக அவசியமன ஒன்றாகும். முருங்கை இலை புற்று நோய் வராமல் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மார்பகம் மற்றும் குடல் புற்று நோய் செல்களுக்கு எதிராக வினைபுரியும் ஆற்றலைக் கொண்டது.

தசை வலிமையும் வளர்ச்சியும் பெற உதவுகிறது

முருங்கை இலையில், தாவர வகைகளிலேயே அதிசயத்தக்க வகையில் மிக அதிகமாக அதாவது 25 சதவீத அளவுக்கு புரதம் அடங்கியுள்ளது. முருங்கை இலை பவுடரில் 9 வகையான அவசியமான அமினோ அமிலங்கள் புரதத்தின் முழு ஆதாரமாக, உடல் தசைகளின் அடர்த்தியை பராமரிக்கவும் வளர்ச்சி பெறவும் உதவுகிறது. சைவம் மற்றும் இயற்கை உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் புரதச் சத்துப் பற்றாக்குறையை முழுமையாகத் தீர்த்து வைக்கிறது. உடற்பயிற்சிக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ இதனை பானமாக அருந்தலாம். அல்லது வறுக்கப்பட்ட காய்கறிகளின் மேலே சிறிதளவு தூவி விடுவதால் புரதத்தின் அளவை நீங்கள் எளிதாக அதிகரித்துக் கொள்ளலாம்.

மனச் சோர்வைப் போக்க உதவுகிறது. மனதில் ஒரு ஆயாசம், வெறுப்பு என்று ஏற்படும் நேரங்களில் முருங்கை இலை பவுடரை ஒரு பானமாக காப்பிக்குப் பதிலாக அருந்தி வரலாம். காபி தரும் உற்சாகத்தை விட பல மடங்கு உற்சாகம் பெறலாம். இதற்கு முருங்கை இலையில் இயற்கையாகவே உள்ள அடாப்டோஜென்ஸ் என்ற வேதிப் பொருளே காரணம். பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் முருங்கை இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனச் சோர்வு, களைப்பு போக்குவது மட்டுமல்லாமல் பொதுவான உடல் ஆரோக்கியத்தை, வலுவான உடல் செயல்பாடுகளுக்கு துணை புரிகிறது.

செரிமானப் பிரச்சனையை எளிதாக்குகிறது

முருங்கை இலைப் பவுடரில் அதிக அளவு அதாவது 24.7 சதவீதம் கால்சியம் உள்ளது. இந்த கால்சிய சத்தானது, செரிமான இயக்கத்தில் உள்ள என்சைம்கள் சீராக வழக்கம் போல செயல்பட உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான சீரான இயக்கம் நடைபெறவும், குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த துணைபுரியும் நார்ச்சத்தானது முருங்கை இலையில் 24 சதவீதம் அளவு உள்ளது.

நார்ச் சத்தானது அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வினை வழங்குவதால், அதிக உணவு சாப்பிடுவதை குறைத்து உடல் எடை பருமன் விஷயத்தில் துணை புரிவதுடன் வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமாக நடைபெறவும் உதவுகிறது. கீரை வகை உணவுகள் உட்கொள்வதால் செரிமானச் சக்தி அதிகரிக்கிறது. மலத்தை இளக்கும் சக்தி அதிகரிப்பதால், மலம் கழிப்பது சிக்கலின்றி எளிதாகிறது. வயிறு சுத்தமாவதுடன், குடல் சார்ந்த தொந்தரவுகள், மற்றும் மூலம் போன்றவை ஏற்படுவதில்லை.

நாம் எந்தக் கீரையைப் பயன்படுத்துவதாக இருப்பினும் அதை நன்றாக நிரால் சுத்தம் செய்வது முக்கியம். வென்னீரில் கீரையை ஒருமுறை அலசி எடுத்துக் கொள்வதும் நல்லது.


Spread the love