எலுமிச்சைசிட்ரிக் வகையான பழம். மேலும் இது தலைமுடி தோல் மற்றும் உடல் ஆரோக்கியம் என பலவகைகளில் பயன்தரக்கூடிய பொருள். இதில் இருக்கும் முக்கிய பலனே விட்டமின் சி தான்.இதில் இருந்து தேவையான ஆண்டி-ஆக்சிடன்ட் மற்றும் ஆண்டி-பாக்டீரியல் உள்ளடக்கம் நமக்குகிடைக்கும்.
எலுமிச்சையுடன் சுடுநீர், சேர்த்து,.. எலுமிச்சையுடன் தேன் சேர்த்து.. போன்ற வகையில் அடுத்ததாக வருவது எலுமிச்சையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மற்ற பானம் மாதிரி இதையும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடலில் இருக்கும் டாக்சின் மற்றும் சிறுநீரகத்தில்இருக்கும் தொற்று இவையனைத்தும் உடலை விட்டு கழிவு மூலமாக அழிந்து வெளியேறும். அடுத்து டாக்சின் சுத்தமானதும், உணவுகள் செரிமானத்தில் எந்த சிக்கலும் இருக்காது.
மேலும் கொலஸ்ட்ராலை குறைத்து ஆரோக்கியமான உடல் எடையுடன் உடல் நலமாவதால், உடல் எடையை குறைப்பதற்கு இந்த காலை பானம் சரியானதாக இருக்கும். உடலில் ஏற்படும் அதிகபடியான நீரேற்றத்தை குறைத்துஉடலை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளலாம். சூடான தண்ணீர் 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்,ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் இம்மூன்று வித்தியாசமான காமினேஷன் நம்முடைய மெட்டாபாலிசத்தைஅதிகரிக்க செய்யும்
மேலும் தேங்காய் எண்ணெய் Ketones-ஆக உருவாக்கி அது மூலமாக மூளைக்கு தேவையான ஆற்றலைஉற்பத்தி செய்கிறது. இதை நல்ல கொழுப்புகள் என கூறலாம். மேலும் தேங்காய் எண்ணெயில்இருக்கும் கொழுப்பு அமிலம் மற்றும் லாரிக் ஆசிட் முடியுதிர்வு மற்றும் தலைமுடி உடைவுபோன்ற பிரட்சனையை தடுக்கும். அதோடு உடல் உஷ்ணத்தை குறைத்து, முடி சேதமடைவதிலிருந்துகாக்கும். மேலும் உடலில் சேரக்கூடிய தேவையில்லாத பாக்டீரியா மற்றும் வைரஸ்களைஅழிக்கும் ஆற்றல் தேங்காய் எண்ணெய்க்கு உள்ளது. இந்த பானத்தை காலையில் அருந்துவதுநிச்சயமாக மூன்று மடங்கு பலனை நமக்கு கொடுக்கும்.
https://www.youtube.com/embed/LUqb6zRn2bk