ஆற்றல் பெருக பேரிச்சம்பழம்

Spread the love

நமது உடல் நலத்திற்கு இயற்கையாகவே தேவைப்படும் ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரிச்சைக்கு இணையான பழம் வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. இந்தச் சிறிய பழத்தில்  பலவிதமான உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முக்கியமாக பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமாகவும், தாராளமாகவும் உள்ளது. பேரிச்சம் பழத்தை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், ஆண்கள் மற்றும் பெண்களை தாக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை மற்றும் இரத்தசோகை போன்ற இதர பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.     எனவே நாம் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால்   நல்லதோர் மாற்றத்தை உணரலாம்.

ஊட்டச்சத்துக்கள்

பேரிச்சம் பழத்தில் கொழுப்பு குறைவாக உள்ளது. மேலும் பேரிச்சம் பழத்தில்  H 1,  H 2,  H 3,  H 5, ஏ1, சி போன்ற வைட்டமின்களும் புரோட்டீன், நார்ச்சத்து, இரும்புச்சத்துக்கள் போன்றவையும்  நிறைந்துள்ளது. இதில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் ஜீரணமண்டலத்தின்  செயல்பாடுகள் சீராகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

உடலாற்றல் பொலிவாகும் :

இது உடலாற்றலை மேம்படுத்துகிறது. ஏனெனில், இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவைகள் அதிகமாகயுள்ளன. தினமும் பேரிச்சம் பழத்தை  பாலுடன் சேர்த்து பருகி வந்தால், உடலில் ஏற்படும் ஒரு விதமான சோம்பேறித்தனம் நீங்கி,  உடலின் ஆற்றல் மேம்படும்.

நரம்பு மண்டலங்களின் ஆரோக்கியம்

இதில் சோடியத்தின் அளவு குறைவாகவும், பொட்டாசியத்தின் அளவு அதிகமாகவும் உள்ளதால்,  இதனை எடுத்துக்கொண்டால் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரித்து அதன் செயல்பாடுகளும் அதிகரிக்கும். இதில் உள்ள பொட்டாசியம் பக்கவாதம் வருவதாற்கான வாய்ப்புகளை தவிர்க்கும். மேலும், இது நம் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

இரத்த சோகை நீங்க :

இதில் உள்ள அபரிமிதமான இரும்புச்சத்து இரத்த சோகையை தடுக்கும். ஆற்றல் கொண்டது மேலும், மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், இதை இரவில் நீரில் ஊற வைத்து, அடுத்தநாள்  காலையில் ஊறவைத்த அந்த நீருடன் சேர்த்து பேரிச்சம் பழத்தையும் சாப்பிட்டு வந்தால்,  மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.

எடையை அதிகரிக்கும் திறனுடையது:

ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் பேரிச்சம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அவர்கள் குண்டாவது உறுதி. மேலும் மது அருந்துபவர்களின் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை  வெளியேற்றவும் இது உதவுகிறது.                 

நமக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த சுவையான பழத்தில் பேரீச்சையும் ஒன்றாகும். ஏனெனில் இதில் விவரிக்கமுடியாத அளவிற்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும்  உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த பொருளாகும். எளிதில் ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்தது. புத்துணர்ச்சி மற்றும் சக்தியை நாம் உடலுக்கு தருகிறது. நமது குடல் பகுதியில் உள்ள, தேவையற்ற கெட்ட கொழுப்புகளை அகற்றும் ஆற்றல் இதற்கு அதிகமாகவே உண்டு.                          நமது பெருங்குடல் பகுதிகளில் புற்றுநோயை உருவாக்கும் செல்களை நீக்குவதிலும் பேரீச்சைக்கு முக்கிய பங்கு உள்ளது. டேனின்ஸ் எனப்படும் ஒருவித நோய் எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் அதிகமாக வெளியேறுதல், உடல் சூடாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, இதில் மிகவும் அதிக அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல்களின் ஆரோக்கியத்திற்கும், நமது சருமத்திற்கும் மிகவும் அத்தியாவசியமானது. சிறந்த நோய் எதிர்ப்பொருட்களான லூட்டின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை இதில் நிறைந்துள்ளது. இவை உடலின் உள்ள செல்களை காப்பதோடு, தீங்கு ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல் செல்களை விரட்டுவதிலும் பங்காற்றுகிறது. இது, குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியதாகும்.  பேரீச்சை, இரும்புச் சத்தை ஏராளமாக வழங்குகிறது. நூறு கிராம் பேரீச்சையில் 0.90 மி.கிராம் இரும்புச் சத்து உள்ளது. இந்த, இரும்புச்சத்து நம் உடலில் உள்ள இரத்தத்திற்கு சிகப்பு நிறத்தை வழங்கும் ஹிமோகுளோபினை உருவாக்குவதிலும், ரத்தத்தில் ஆக்சிஜனை தீர்மானிப்பதிலும் சிறந்த பங்காற்றுகிறது.

பொட்டாசியம் என்ற தாது உப்பும் குறிப்பிட்ட அளவு இதில் உள்ளது. இது நமது உடலுக்குத்  தேவையான மின்னாற்றலை ஏற்படுத்துகிறது. நமது உடல் செல்களும், உடலும் வழ வழப்பு தன்மையுடன் இருப்பதற்கு பொட்டாசியம் மிகவும் அவசியமானதாகும். மேலும், இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை நுண்மையாகக் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்திலிருந்தும் பாதுகாக்கிறது.

இதில் உள்ள கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீஸியம் போன்ற தாதுக்கள் உள்ளது. இதில் கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு மிகவும் முக்கியமானது. நமது நாடித் துடிப்பை சீராக்குவது மற்றும் ரத்தக்கட்டி ஏற்படுவதைத் தடுத்தல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் தாமிரத்தின் பங்கு மிகவும் அவசியமாகும். மேலும் இதில் உள்ள மக்னீஸியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையாகிறது.  பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பேரீச்சம் பழத்தில் மிகுதியாக உள்ளது.

100 கிராம் பேரீச்சம் பழத்தில் உள்ள ஊட்டச் சத்துக்கள்.

ஆற்றல்         –  280 kcal  1180 kJ                                                  மாவுப்பொருள்   –  75.03 g                                                                சர்க்கரை        –  63.35 g                                                             நார்ப்பொருள்    –  8 g                                                              கொழுப்பு           –  0.39 g                                                                புரதச்சத்து           –  2.45                                                                           நீர்                 –  20.53 g                                                                               தையமின்       –  0.052 mg 4%                                                  ரிபோஃபிளோவின்   – 0.066 mg 4%                                                                      நியாசின்          – 1.274 mg 8%                                                           பான்டோதெனிக் அமிலம் – 0.589 mg  12%                                           உயிர்ச்சத்து H 6 – 0.165 mg 13%                                                       உயிர்ச்சத்து H 9 – 19 μg 5%                                                                                                  உயிர்ச்சத்து சி  –  0.4 mg 1%                                                        உயிர்ச்சத்து ஈ   – 0.05 mg 0%                                                                         உயிர்ச்சத்து கே  – 2.7 μg 3%                                                                    கால்சியம்      – 39 mg 4%                                                                                   இரும்பு          – 1.02 mg 8%                                                          மக்னீஸியம்     – 43 mg 12%                                                          பாஸ்பரஸ்         – 62 mg 9%                                                                                      பொட்டாசியம்    – 656 mg 14%                                                           சோடியம்        – 2 mg 0%                                                              துத்தநாகம்       – 0.29 mg 3%

இவ்வளவு அபரிமிதமான சத்துக்கள் உள்ள இயற்கையின் மிகப்பெரிய கொடையான பேரீச்சம் பழத்தை ரசித்து, சுவைத்து நம் உடல் நலம் காப்போமாக. 

ர. கோபால்

பேரிச்சம் பழ அல்வா

தேவையான பொருட்கள்:

பேரிச்சம்பழ   -2 கப்                                                                          (விதை இல்லாதது)                                                                                    சூடானபால்   – 2 கப்                                                                                                                                   சர்க்கரை     – 1 1/2 கப்                                                                                                                                                   நெய்         – 1/2 கப்                                                                                                                                                     ஏலக்காய் பொடி — 1 டீஸ்பூன்                                                                                                                              பாதாம்         – 5-6 (நறுக்கியது)

செய்முறை:                                

முதலில் சூடான பாலில் பேரிச்சம் பழத்தை போட்டு, 3 மணிநேரம் ஊற வைத்து, ஊறிய பின்பு அதை நன்கு கெட்டியான பசை போல் அரைத்து, பின்னர் ஒரு தட்டில், 1 டீஸ்பூன் நெய் ஊற்றி தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள பேரிச்சம் பழத்தைப் போட்டு, பின் சர்க்கரை சேர்த்து, தீயை குறைத்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அத்துடன் இன்னும் சிறிது பால் சேர்த்து, 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் ஏலக்காய் பொடி மற்றும் பாதாம் சேர்த்து 5 நிமிடம் கிளறி, அதை அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் ஊற்றி, குளிர வைத்து, துண்டுகளாக, சுவையான பேரிச்சம் பழ அல்வா ரெடி!!

ஏ ஆர் எஸ்


Spread the love
error: Content is protected !!