5 ரூபாய்க்கு சீதாபழம் வாங்கி சாப்பிட்ட காலம் போய், இன்றைக்கு இந்த பழம் எங்கே விற்கிறது என ஏங்கும் நிலையில் இருக்கிறார்கள் சிலர். அந்த சில பேரும் இதன் மருத்துவ பலனை தெரிந்தவர்கள் தான். சீதாபழத்தில் கால்சியம், இரும்புசத்து, காப்பர், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, ஏ, புரதம், மற்றும் நார்சத்து, தாதுஉப்பு போன்றவை ஏராளமாக இருக்கும்.
இந்த பழத்தை சாப்பிட்டால் இதய வால்வுகளில் இருக்கும் கொழுப்புகள் கரைந்து, இதயநோய், இரத்த அழுத்தம் போன்ற பிரட்சனைகள் வராமல் தடுக்கும். சீதாபழத்தில் இருக்கும் தாமிரசத்து, குடலிற்கு மிகவும் நல்லது. எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தன்மையை சீராக்கும். மேலும் இது பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரட்சனைகளை தடுத்து, புற்றுநோய் செல்களை அழிக்கிற சிறந்த ஆற்றல் கொண்டிருக்கிறது.
இந்த பழத்தின் தோல், பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் மலசிக்கல் பிரட்சனைகளையும் தடுக்க உதவுகிறது. சீதாபழத்தில் மற்றொரு வகைதான் முள் சீதா, இந்த பழம் சர்க்கரை நோயாளிக்கு நல்ல மருந்து, இதை சாப்பிட்டால் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராகவும், கட்டுப்பாட்டுடனும் இருக்கும். இந்த முள் சீதாவின் இலையை சுடுதண்ணீரில் போட்டு, தேன் கலந்து டீ மாதிரி குடித்து வந்தால் முதுகுவலி, வயதான தோற்றம், உடல் வலிமை குறைவு போன்ற பிரட்சனைகள் நீங்குவதோடு இரத்த ஓட்டமும் சீராகும்.