கல்ப விருட்சம் – தென்னை

Spread the love

இளநீரும், தேங்காயும் உடலுக்குச் சக்தியும் தெம்பும் தருவதுடன் மன இறுக்கத்தைப் போக்கி அமைதியையும் நீண்ட ஆயுளையும் தருகிறது என்று காலங்காலமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய வேதங்களில், தென்னையை கல்பவிருட்சம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

முற்றாத இளந் தேங்காயின் நீரும் அதன் உள்ளிருக்கும் தோசை போன்ற வழுக்கையும் கார்போஹைட்ரேட்டும், கொழுப்புச் சத்துமுள்ள சிறந்த உணவாகும். இளந்தேங்காயும் அதன் நீரும் குடற்புண், இரைப்பை அழற்சி, வயிற்றுக் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்குச் சிறந்த நிவாரணமாகிறது. இளந்தேங்காயின் நீர் சிறந்ததொரு குடிநீர் ஆகும்.

காலரா, மஞ்சள் காமாலை, சிறுநீர்த்தாரை எரிச்சல், சிறுநீரகக் கல் போன்ற நோய்களின் போது வேண்டிய அளவு இளநீர் கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிற்றுப் போக்கினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு 5 நிமிடத்திற்கு, ஒரு டேபிள் ஸ்பூன் வீதம் இளநீர் கொடுக்க விரைந்து குணம் தெரியும்.

இளநீர் காணப்படும் சர்க்கரை மிக எளிதில் செரிமானமாகக் கூடியது. ஒரு மனிதன் ஒரு நாள் தேவையான விட்டமின்-சி ஒரு இளநீரில் இருக்கிறது.

 மகோதரம்  எனப்படும் அடி வயிறு, கை கால் வீக்கம், நீர்க்கட்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 கப் இளநீர் கொடுக்க சிறுநீர் நன்கு கழியும். வீக்கம் கட்டுப்படும். மாசுபடாத புதிய இளநீரில் இருந்து பெறப்பட்ட நீரை அவசர காலங்களில் நோயாளிகளுக்கு டிரிப்பாக கூட ஏற்றலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதை பார்த்திருப்பீர்கள்.

தேங்காயைப் பச்சையாகப் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பான முறையாகும். தேங்காய் பாலினாலும், இளநீரினாலும் குணமாகும் நோய்கள் ஏராளம். இதனால் இயற்கை உணவு வகைகளில் தேங்காயும், இளநீரும் ஒரு சிறந்த இடத்தைப் பெறுகின்றன. இயற்கை உணவு முறையைப் பின்பற்றுபவர்களும், உணவு குறைவாக உண்பவர்களும் இளநீரையும் பச்சைத் தேங்காயையும் அளவோடு சேர்த்துக் கொள்வதில் தவறில்லை. உடலுக்கு வேண்டிய உயிர்ச்சத்துக்களுடன் நார்ச்சத்தையும் தருகின்ற தேங்காய் இரைப்பைப் புண்ணுக்கு மிகவும் இதமானது.அரைக் கப் தேங்காய் பாலுடன் ஒரு டீஸ்பூன் கசகசாவை ஊறவைத்து ஒரு டீஸ்பூன் தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லுமுன் சாப்பிட்டு வந்தால் இரண்டு, மூன்று நாட்களில் வறட்டு இருமல் தொண்டை கமறல் போன்றவை நீங்கும்


Spread the love
error: Content is protected !!