கேரள மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாகவே சமையலில், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த பூமியின் மிக ஆரோக்கியமான எண்ணெய் என, தேங்காய் எண்ணெயை கூறலாம். தேங்காய் எண்ணெய் தனித்துவம் மிக்கதாகவும், இதர கொழுப்புகளில் இருந்து மாறுபட்டதாகவும் இருக்கிறது. நமது உணவு முறையில் பெரும்பாலான கொழுப்பு மற்றும் எண்ணெய்கள் உள்ளன. சுவை பூரணத்துவம் நிறைந்த அல்லது பூரணத்துவம் அல்லாதவையாக உள்ளன. நாம் எடுத்துக் கொள்ளும் 98 -& 100 சதவீத கொழுப்பு அமிலங்கள் நீள் சங்கிலி கொழுப்பு அமிலங்கள் (எல் சி எப் ஏ) ஆகும். கொழுப்பு அமிலத்தின் அளவு மிக முக்கியமானது. ஏனெனில் நமது உடம்பு, ஒவ்வொரு கொழுப்பு அமில அளவுடன் இருக்கும் போது, அதற்கு ஏற்ப பதிலளிப்பதுடன், வளர்சிதை மாற்ற நிகழ்வையும் மேற்கொள்கிறது.
தேங்காய் எண்ணெயில் மத்திய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் (எம்சிஎப்ஏ) உள்ளன. இவை, இதர நமது எண்ணெய் உணவு அமிலங்களில் இருந்து மாறுபட்டு இருக்கின்றன. தேங்காய் எண்ணெயில் இருக்கும் பூரணத்துவ கொழுப்பு அமிலங்கள் பெரிதும், மத்திய சங்கிலி அமிலங்களாகவே (எம்சிஎப்ஏ) உள்ளன.
தேங்காயில் நார்சத்தும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளது. எல்சிஎப்ஏ அமிலத்தைக் காட்டிலும் எம்சிஎப்ஏ வேறுபட்டது. இதயநோய் வராமல் தடுக்க எம்சிஎப்ஏ உதவுகிறது. தேங்காய் எண்ணெய் குறிப்பிடத்தக்க உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளது. இது உடல் நலனுக்கு மிகச் சிறந்ததாக உள்ளது. தாய்ப்பாலின் பூரணத்துவ கொழுப்பில் லாரிக் அமிலம் உள்ளது. இதனால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் தொற்றுகள் வருவதில்லை. நோய் எதிர்ப்புச் சத்தும் நன்றாக ஏற்படுகிறது.
இதில் உள்ள மோனோ கிளிசரைடு பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. எச்ஐபி இன்ப்ளூயன்சா மற்றும் பல்வேறு நோய்த் தன்மை கொண்ட பாக்டீரியாக்களை அழிப்பதில் உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் எச்ஐவி நோயாளிகளுக்கு பரவும் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துகிறது. புத்தம் புதிய தேங்காய் எண்ணெய் இயற்கை முறையிலான ஆன்டிபயாடிக் ஆகும்.
அதில் மோனோலாரின் போன்ற கூட்டுப் பொருட்கள் இருக்கின்றன. தேங்காய் எண்ணெயில் கொழுப்புச்சத்து உடலுக்கு கெடுதல் என்ற தவறான எண்ணம் உள்ளது. அனைத்து கொழுப்புகளும் தீங்கானவை என்ற கருத்து இருக்கிறது. அது தவறானது. சில கொழுப்புகள் நன்மை பயக்கக் கூடியவையாக உள்ளன.
உடலுக்கு தேவையான சக்திக்கு கொழுப்புச்சத்து அவசியமாகும். சரியான கொழுப்பை சரியான அளவில் ஏற்கும் போது மிகுந்த பலன் அளிப்பதாக இருக்கும். நபர்களின் வளர்சிதை மாற்றம் அடிப்படையில் ஒரு நபர் ஏற்கும் கொழுப்பு அளவு இருக்க வேண்டும். தேங்காய் சர்க்கரை, புதிதாக பறிக்கப்பட்ட தேங்காயின் தண்ணீரில் இருந்து பெறப்படுகிறது. இந்தத் தண்ணீர் காய்ச்சப்பட்டு சர்க்கரையாக மாற்றப்படுகிறது. இந்தச் சர்க்கரை செயற்கை மணம் இல்லாதது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், குளோரின், மக்னீஷியம், கந்தகம் நூண்ணூட்ட சத்துகள் உள்ளன. தேங்காய் சர்க்கரை டயாபடிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு பாதுகாப்பான உணவுப்பொருளாகும். இதில் கிளைசெமிக் பட்டியல் மிக குறைந்த அளவே உள்ளது. க்ளைசெமிக் உள்ளடக்கம், உணவு எவ்வாறு ரத்த குளுக்கோஸை பாதிக்கிறது என்பதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=952lnT7Yycc&t=1s