சர்வ ரோக நிவாரணி- தேங்காய்

Spread the love

இளநீர், தேங்காய் தண்ணீர், தேங்காய்ப் பால் மனிதனுக்கு இயற்கை வழங்கிய அற்புத மருந்து. உடல் உஷ்ணம் காரணமாக ஏற்படும் காய்ச்சல், நீர் இழப்பு, வயிற்றுப் போக்கு எந்த உடல் பிரச்சனைகள் எனினும் நாம் தேடுவது இளநீரைத்தானே. எளிதில் எங்கும் கிடைக்கும் ஒரு பொருள் இளநீர். தேங்காய்த் தண்ணீரும், தேங்காய்ப் பாலும் மருத்துவ குணங்கள் ஏராளம் உள்ளன என்பது பெரும்பாலனோர்க்கு இன்னமும் தெரியவில்லை. இளநீரில் சிகப்பு, மஞ்சள், பச்சை என பல வகைகள் உள்ளன. இளநீராக உள்ள ஒரு காயில் 500மி.லி. முதல் 750 மி.லி. வரை இளநீர் இருக்கும்.

இளநீர் நமது உடம்பிற்குள் செல்லும் போது சிறுநீரகம் சுறுசுறுப்பாக செயல்பட்டு அதிகளவு சிறுநீர் வெளியாகும். அப்போது கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகள் குணமாகும். சிறுநீரகத்தில் தோன்றும் கல் கரைவதுடன், கல் உற்பத்தியாவதையும் தடுக்கும். இதன் மூலம் சிறுநீரக வீக்கம் குணமாகும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து இளநீராகும்.

கோடைகால வியாதிகளான வயிற்றுக் கடுப்பு, நீர்க் கடுப்பு, மஞ்சள் காமாலை, அம்மை, சரும நோய்கள் இவற்றை இளநீர் குணப்படுத்துகிறது. கோடைகாலத்தில் வாரத்திற்கு இருமுறை இளநீர் குடிப்பது நல்லது.

இளநீர் எவ்வாறு தோன்றுகிறது?

தென்னை மரங்களில் பாளை விரிந்து 15 நாட்களில் ஆண் பூக்கள் கொட்டி விடுகிறது. 3 வாரத்தில் இருந்து பெண் பூக்கள் கருவுற்று பிஞ்சாகி பெருக்கத் துவங்கும். 150 நாட்களில் நல்ல இளநீர் கிடைக்கும். 6 மாதங்கள் வரை நல்ல இளநீராக குடிக்கலாம். இளநீரில் 5.5 சதவீதம் வரை சர்க்கரை சத்து உள்ளது. சோடியம், பொட்டாசியம் சத்துக்களும் அதிகம் உள்ளது. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா நாடுகளுக்கு அடுத்து தென்னை உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 55 சதவீதம் இளநீருக்காகவும், 45 சதவீதம் தேங்காய் பவுடர், கொப்பரை எண்ணெய் மற்றும் ஒரு சில பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

11, 12 மாதங்கள் ஆன பின்பு இளநீரின் ஓரத்தில் ஒட்டியிருக்கும் வழுக்கை வளர்ந்து தேங்காய் உருமாற்றம் அடைகிறது. தேங்காயாக மாறின பின்பு ஓட்டிற்குள் உள்ள தண்ணீரைத்தான் நாம் தேங்காய்த் தண்ணீர் என்கிறோம். தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். தேங்காய் தண்ணீர் மூலம் நாம் சில உடல் நலன்களைப் பெறலாம் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தொடர்ச்சியாக தேங்காய் தண்ணீர் அருந்தி வர, தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள விஷப் பொருட்களை வெளியேற்றி விடும். உடல் எடை குறிப்பிட்ட அளவு குறையும். தேங்காயத் தண்ணீர் ஒரு சிறந்த நீர் சிகிச்சை மற்றும் உணவு எனவும் கூறலாம். தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும் உடலில் கொழுப்புகள் சேராது. இதனை தொடர்ந்து அருந்தி வர பசி உணர்வு குறையும். பசியைக் கட்டுப்படுத்தும். இதன் மூலம் உடல் எடை குறைவதைக் காணலாம்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகள் சுறுசுறுப்படையும். வலிமை பெறும். எளிதில் நோய் வராது. காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்கள், சிறுநீர்க்குழாய் தொற்றுகள், பல், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டிரியாக்களை தேங்காய் தண்ணீர் அழித்து விடும். உடலில் உள்ள விஷப் பொருட்களை அழித்து விடும். சிறுநீரகக் கற்களை கரைக்கும் ஆற்றல் உண்டு. சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள், நோய்களைக் கட்டுப்படுத்த தேங்காய்த் தண்ணீரை அருந்தி வரலாம்.

ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக இரவில் மது அருந்தி இருந்தால் மறுநாள் காலை எழும் பொழுது கடுமையான தலைவலி ஏற்படும். அச்சமயம், தேங்காய்த் தண்ணீர் அருந்தினால் தலைவலி நீங்கும். மதுவின் மூலம் ஏற்படும் உடல் வறட்சி தடுக்கப்பட்டு தலைவலி கட்டுப்படும். செரிமானக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து ஓரிரு வாரங்கள் வரை தேங்காய் தண்ணீரை அருந்தி வர குணம் பெறலாம். இதற்கு காரணம், தேங்காய் தண்ணீரில் அதிகளவு நார்ச்சத்துக் காணப்படுவதால் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து தினசரி குடித்து வர வாய்வுப் பிரச்சனையும் மறைந்து விடும். தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வர அவை உடலின் எலெக்ட்ரோலைட்டுகளை சீராக்கி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அது மட்டுமின்றி உடலில் வறட்சி ஏற்படுவது தவிர்க்கப்பட்டு நாள் முழுவதும் சுறுசுறுப்பும் போதிய ஆற்றலும் கிடைத்து அன்றாட பணிகளை எளிதாக செய்யலாம்.

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீர் குடித்து வரலாம். இதன் மூலம் கர்ப்ப காலத்தில் பல உடல் உபாதைகளிலிருந்து தப்பிக்கலாம். தைராய்டு பிரச்சனை காரணமாக உடல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு தேங்காய்த் தண்ணீர் மிகச் சிறந்த மருந்தாகும். தேங்காய் தண்ணீரை அவர்கள் தினமும் தொடர்ந்து குடித்து வர உடலின் ஆற்றலை அதிகரிக்கும் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பி சீராக இயங்க உதவும்.

தேங்காய்ப் பால்

தேங்காய்ப் பால் வயிற்று வலியைக் குணப்படுத்தும். தேங்காய்ப் பால் உணவாகவும், மருந்தாகவும் பல விதங்களில் பயன்படுகிறது. இந்தியில் நாரியல்காது£த் எனவும் தெலுங்கில் கொப்பரைபாலு என்றும் கன்னட மொழியில் தெங்கின ஹாலு என்றும் தேங்காய்ப்பால் அழைக்கப்படுகிறது. வழுவழுப்புத் தன்மையும், வெண்ணெய் போன்று சுவையும் இதில் காணப்படுவதைக் கண்டு பெரும்பாலான மக்கள் தேங்காய்ப் பாலைத் தினசரி அருந்தினால் உடல் பருமனாகி விடும் என்று தவறாக எண்ணுகின்றனர். நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தேங்காய்ப்பாலை உடல் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை நாம் மறக்கக் கூடாது. தேங்காய்ப்பாலையும், தேங்காய் எண்ணெயையும் நாம் சமையலில் பயன்படுத்தி வருகின்றோம்.

100 கிராம் தேங்காய் பாலில்230 கலோரி ஆற்றல் மதிப்பும், 263 மி.கி. பொட்டாசியம், 2.3 கிராம் புரதம், 1 மி.கி. கால்சியம் 6 கிராம் கார்போஹைட்ரேட், 37 மி.கி. மெக்னீசியம், 2.8 மி.லி. வைட்டமின் சி, 1.6 மி.கி. இரும்புச் சத்தும் உள்ளன. மேலும் தேங்காய் பாலில் செம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சத்தும் அதிகளவு உள்ளது.

தேங்காய்ப் பால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

புத்தம் புதிய தேங்காய் ஒன்றை உடைத்து அதில் உள்ள கெட்டியான சதைப் பகுதியை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நடுத்தரமாக அரைத்துக் அதனை மெல்லிய பருத்தித் துணி ஒன்றின் மூலம் வடிகட்டி எடுக்கப்படுவது தான் தேங்காய் பால் ஆகும்.

இதயம் காக்கும் தேங்காய்ப் பால்

தேங்காய்ப் பாலில் சாச்சுரேடட் கொழுப்பு இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள லாரிக் அமிலம் வகை கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது.

வலிமையான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது

தேங்காய்ப் பாலில் போதுமான அளவு கால்சியம் சத்து இல்லை எனினும் தேங்காய்ப் பாலில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. வலிமையான எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சத்துடன் பாஸ்பரஸ் சத்தும் நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. கால் கோப்பை தேங்காய்ப் பாலில் 60மி.லி. பாஸ்பரஸ் சத்துள்ளது. பாஸ்பரஸை கால்சியம் சத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது, உடலில் பாஸ்பேட்டும் கலப்பதால் எலும்பு உருக்குதலை அது தடுக்கிறது.

நமது அன்றாட உணவில் நாம் குறிப்பாக பெண்கள், ஒஸ்டியோ பேபிராசிஸ், ஆர்த்தரைடிஸ் போன்ற எலும்பு சார்ந்த (மூட்டு வலி, எலும்பு மூட்டுத் தேய்மானம்) சிக்கல்கள் வராமல் தடுக்க எலும்பு வளர்ச்சிக்கு வலிமைக்கு தேங்காய்ப்பாலை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது

பதப்படுத்தப்பட்ட  தேங்காய்ப்பாலில் சாச்சுரேடட் கொழுப்பு அமிலம் காணப்படும். மேற்கூறிய கொழுப்பு அமிலம் அதிக அளவு சக்தியை வெளிப்படுத்தும். இதனால் உடல் அசதி, களைப்பு தடுக்கப்பட்டு, உடலின் பல்வேறு இயக்கங்களும் எளிதாக, சீராக அமைகிறது. தேங்காய்ப் பாலை வெகு விரைவிலேயே பசியை, பசி உணர்வை அடங்கச் செய்கிறது. நார்ச்சத்து அதிக அளவு இருப்பதுவே இதற்குக் காரணமாகும். இதன் மூலம் உடல் பருமன் கணிசமான அளவு குறைகிறது.

மன அமைதியைத் தரும் தேங்காய்ப்பால்

மன அழுத்தம், இறுக்கத்தைக் குறைத்து மனதை சாந்தப்படுத்தும் ஆற்றல் தேங்காய்ப் பாலில் உள்ளது. பொதுவாக உடலில் மெக்னீசியம் சத்துக் குறைபாடு காணப்பட்டால், து£க்கமின்மை, எப்பொழுதும் தோன்றும் எரிச்சல் உணர்வு, உடல் தளர்ச்சி, கை, கால் பிடிப்பு, ஞாபகச் சக்தி இழத்தல் போன்ற குறைபாடுகள் தோன்றும். தேங்காய்ப்பாலில் மெக்னீசியம் சத்து போதுமான அளவு காணப்படுவதால் மேற்கூறிய உடல் கோளாறுகள் குணமாகும்.

நமது அன்றாட உணவில் தினசரி கால் கோப்பை தேங்காய்ப்பாலை அருந்தி வந்தால், நமக்கு 22 மி.கி. மெக்னீசியம் சத்து கிடைக்கும். இதன் மூலம் நாம் மேற்கூறிய குறைபாடுகளை சரி செய்து கொள்ள முடியும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க தேங்காய்ப்பால்

தேங்காய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்து இருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி, இருமலைத் தடுக்கும் வைட்டமின் சி சத்து அதிகமிருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். தேங்காய்ப்பாலில் உள்ள லாரிக் அமிலம் பாக்டிரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்புரியும் பண்புகள் உடையது. உடலில் மாங்கனீசு சத்து குறைந்தால் நீரிழிவு நோய் ஏற்படும். தேங்காய்ப்பாலில் மாங்கனீசு சத்து அதிகம் உள்ளது. அவரை, பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றில் மாங்கனீசு சத்து அதிக அளவு உள்ளது.

இரத்த சோகையை குணப்படுத்தும்

பலருக்கு போதுமான அளவு இரும்புச் சத்து உடலில் காணப்படாததால் இரத்தசோகை நோய் ஏற்படுகிறது. உடலானது ஹீமோகுளோரின் அதிகரிப்பதை இரும்புச் சத்துக் குறைவின் காரணமாக தடுத்து நிறுத்தி விடுவதால், இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் இரத்த சோகையை உண்டாக்கிவிடும். ஒரு கோப்பை தேங்காய்ப் பாலில் அன்றாடம் உடலுக்குத் தேவையான 25 சதவீத இரும்புச் சத்து கிடைக்கிறது.

தசைகளை, நரம்புகளை வலுவாக்க தேங்காய்ப்பால்

தசை பிடிப்பு, தசை வலி ஏற்படும் போதெல்லாம் கொஞ்சம் உணவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து அருந்தினால் குணம் பெறலாம். தேங்காய்ப்பாலில் அதிக அளவு மெக்னீசியம் சத்து தசை வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. மெக்னீசியமானது ஒவ்வொரு நரம்பு அணுக்களுக்கும் வலித் தடுப்பானாக விளங்குகிறது. நமது உடலில் மெக்னீசியம் இல்லையெனில், கால்சியம் நரம்புகளை ஊக்குவிக்கும். அதனால் நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக செயல்படும் அளவுக்கு அதிகமாக நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக இருப்பதால் தசைகள் அளவுக்கு அதிகமாக சுருங்குவதற்கு காரணமாகிறது. தசைகளை நடுநிலைப் படுத்தி சீராக இயங்குவதற்கு மெக்னீசியம அவசியம் என்பதை இதன் மூலம் நாம் உணரலாம்.

வயிற்றுப் புண் குணம் பெற தேங்காய்ப்பால்

மணத்தக்காளி கீரையை தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வர வயிற்றுப் புண் குணமாகும்.


Spread the love
error: Content is protected !!