கேரட் எண்ணெய்

Spread the love

கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் காய்களில் ஒன்றான கேரட்டில் நிறைந்துள்ள நன்மைகள்  பற்றி அறிந்து கொள்ளலாம்.

கேரட்டில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

நார்ச்சத்து, பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கேரட்டில் அதிக அளவில் அடங்கியுள்ளது. அதிக அளவு கொழுப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு கேரட் உண்டு வர நல்ல பலனைக் காணலாம்.

கேரட்டின் நன்மைகள்

தினம் ஒரு கேரட் உண்டு வருவதால் வயிற்றில் ஏற்படும் செரிமான கோளாறுகள், வாயுத் தொல்லைகள், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.

இது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கண் குறைபாடுகளை நீக்கி நல்ல கூர்மையான பார்வையை அளித்து, கண் ஆரோக்கியத்தை  மேம்படுத்துகிறது.

இதனை தினமும் இரவு உணவு உண்ட பின் ஜூஸாக குடிக்கலாம். இதில் உள்ள வைட்டமின் சி எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.

பக்கவாதம் உள்ளவர்கள் தினமும் உணவில் கேரட் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் நீண்ட காலத்தில் பக்கவாதம் நீங்கும்.

மரபணு பாதிப்புகள், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

நம் உடலில் ஏற்படும் வீக்கம், வலி போன்றவற்றிற்கு கேரட்டை அரைத்து பற்றுப் போடலாம்.

சரும அழகு மேம்பட

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. இது நம் உடலில் உள்ள செல்களை புதுபித்து வயதான தோற்றத்தை தாமதப்படுத்துகிறது. ஆலிவ் எண்ணெயுடன் கேரட் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பளபளப்பாகும்.

ஆண்களுக்கு

ஆண்கள் இரத்தத்தை சுத்தப்படுத்துவது அவசியமாகும். இதற்கு கேரட் ஜூஸ் அல்லது தினம் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம். இது இரத்தத்தை சுத்திகரிக்க பெரிதும் உதவுகிறது.

குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவர்கள் தினமும் ஒரு கேரட் தவறாமல் உண்டு வரலாம். இது ஆண்களின் விந்தணுக்களின் அளவையும், அதன் தரத்தையும் அதிகரிக்கிறது.

பல் ஆரோக்கியம் மேம்பட

கேரட் வாய் துர்நாற்றம், பல் ஈறுகளில் பாதிப்பு போன்ற பல் சார்ந்த தொற்றுகளுக்கு நல்ல பலனைத் தருகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

தினம் ஒரு கேரட்டை ஜூஸாக அருந்துவதால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து இதய வால்வுகளில் கொழுப்பு அடைப்பது தடுக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு முதலான இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

கேரட் எண்ணெய் தயாரிப்பு

தேவையான பொருட்கள்

கேரட்                                               –     1

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்   –     அரை லிட்டர்

செய்முறை

முதலில் கேரட்டை துருவியோ அல்லது சிறு துண்டுகளாக நறுக்கியோ எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கேரட் சேர்த்து மிதமான வெப்பத்தில் சில நிமிடம் வேகவிடவும். எண்ணெய் கேரட் நிறத்திற்கு  மாறியதும் இறக்கவும்.

பின் ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்து, மறுநாள் வடிகட்டி பாட்டிலில் சேகரித்து வைக்கவும். தேவைப்படும் போது இதனை சருமம் மற்றும் முடிக்கு உபயோகிக்கலாம்.

கேரட் எண்ணெய் பயன்கள்

கேரட்டை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தயாரிக்கும் கேரட் எண்ணெய் சரும ஆரோக்கியம், சருமத்தில் ஏற்படும் சுருக்கம். கருவளையம் மற்றும் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது பொலிவான, மென்மையான சருமத்தை பெற உதவுகிறது.

இது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் நல்ல பலனைத் தருகிறது. இதனை தேவைப்படும் போது சருமம் மற்றும் முடியில் தடவி உபயோகிக்கலாம்.

முக அழகு மேம்பட

கேரட் எண்ணெயை இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி மசாஜ் செய்து மறுநாள் காலையில் முகத்தை கழுவி வரலாம். இதனை தினமும் செய்து வர முக அழகு மேம்படும்.

இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. தேவையான அளவு கேரட்டை எடுத்து நன்கு அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவவும். இதனை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவலாம். இது சருமத்தை ஈரப்பதமாக்கி சருமத்திற்கு பொலிவைத் தருகிறது.

இதிலுள்ள வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் உண்டாகும் வெடிப்பு மற்றும் புண்களுக்கு நல்ல மருந்தாகிறது.

எண்ணெய் பசை  சருமத்திற்கு

ஒரு கப் கேரட் ஜூஸ், ஒரு தேக்கரண்டி தயிர், 1 கிராம்பு மற்றும் எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். பின் சாதாரண நீரில் கழுவவும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி சருமம் புத்துணர்வுடன் காணப்படும்.

கூந்தல் ஆரோக்கியத்திற்கு

கேரட் எண்ணெய்  தலை முடியில் காணப்படும் பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்க உதவுகிறது.

இது  மயிர்கால்கள் அமைப்பை தூண்டி முடி அடர்த்தியாக வளர உதவுகிறது. நுனி முடி பிளவு, முடி பலவீனம் போன்றவற்றை தடுத்து முடிக்கு வலுவூட்டுகிறது.

முடி உதிர்வு ஏற்படும் சமயத்தில் கேரட் எண்ணெய் கொண்டு தலையில் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊற வைத்து  குளிக்கலாம். இவ்வாறாக வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம்.

இதனை தினமும் நாம் தேய்க்கும் சாதாரண எண்ணெய்க்கு பதிலாக உபயோகிக்கலாம். இதனால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்க உதவுகிறது.

இது பிசுபிசுப்பின்றி,  நறுமணமுடன் காணப்படும். இதனை வாரத்திற்கு மூன்று முறை தலையில் மசாஜ் செய்து குளித்து வரலாம். எண்ணற்ற நன்மைகள் நிறைந்த கேரட்டை தினமும் ஒன்று முழுமையாகவோ அல்லது ஜீஸாகவோ உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love