பொதுவாக இந்தியாவில் அரிசியென்றால் வெள்ளை அரிசியை மட்டும் தான் சாப்பிட்டு வருகிறோம். அரிசி நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியமான உணவு. நாம் ஆரோக்கியமாக வாழவும் அரிசி முக்கியமானதாக இருக்கின்றது. இவையெல்லாம் ஒரு 2௦ வருடத்திற்கு முன்னால் தான். இப்பொழுது வெள்ளை அரிசியின் பாதிப்பை தெரிந்து பலபேர், பழுப்பு அரிசிக்கு மாறி வருகிறார்கள்.
அரிசியில் விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருந்தாலும் அது வெள்ளை அரிசியில் மிகவும் குறைவு தான். அதுமட்டுமன்றி வெள்ளை அரிசியில் இருக்கும் கிளைசெமின் இன்டக்ஸ்தான், சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம். எனவே தான் சர்க்கரை நோயாளிகள் மூன்று வேலையும் சாப்பாடு எடுக்க கூடாது என கூருகின்றனர். அரிசியில் கவுனி அரிசி, பழுப்பு அரிசி, கருப்பு அரிசி, வெள்ளை அரிசி என பல வகைகள் உள்ளது. இபோழுது நாம் இந்த வெள்ளை அரிசிக்கும், பழுப்பு அரிசி என்று சொல்லக்கூடிய பிரவுன் அரிசிக்கும் இருக்கும் ஊட்டசத்துகளின் வேறுபாட்டை பார்க்கலாம்.
ஆய்வுகளின் படி ஒரு கப் வேக வைத்த வெள்ளை அரிசியில் 2௦5 கலோரிகள் உள்ளது. அதுவே பழுப்பு அரிசியில் 248 கலோரிகள் உள்ளது. புரோட்டீன் அளவு 4.25கி, கொழுப்பின் அளவு ௦.44கி உள்ளது. ஆனால் பழுப்பு அரிசியில் 5.53கி புரோட்டீன், 1.96கி கொழுப்பும் அடங்கியுள்ளது. வெள்ளை அரிசியில் 44.51கி கார்போஹைட்ரேட் மட்டும் உள்ளது. அதுவே பிரவுன் அரிசியில் 51.67கி இருக்கின்றது. நார்சத்தை பொறுத்தவரை வெறும் ௦.6கி அளவு தான் வெள்ளை அரிசியில் உள்ளது. பழுப்பு அரிசியில் 3.2கி நார்சத்து உள்ளது. ஒரு நாளைக்கு நமக்கு கிடைக்க கூடிய நியுட்ரிசன் மதிப்பை பார்க்கும்போது இரும்பு மற்றும் போலட் மட்டும்தான் பழுப்பு அரிசியை விட வெள்ளை அரிசியில் அதிகமாக உள்ளது. மற்றபடி தைமின், நியாசின், வைட்டமின் B6, பாஸ்பரஸ், மெக்னீசியம், காப்பர், செலீனியம், காப்பர் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டசத்து, மினரல்ஸ் பழுப்பு அரிசியில் மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் இப்படி அளவிற்கு அதிகமாக கிடைக்க கூடிய ஊட்டசத்துகளால் நமக்கு என்ன பயன் என பார்க்கலாம்.
பழுப்பு அரிசியில் கிடைக்ககூடிய பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தடுக்கும். பழுப்பு அரிசியில் இருக்கும் அதிகமான நார்சத்து உடலிற்கு ஆரோக்கியமான கொழுப்புகளை ஊக்குவிக்கிறது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நல்ல உடல் எடையை வழங்கும். போதுமான ஊட்டசத்து, மினரல்ஸ் பழுப்பு அரிசியில் இருப்பதினால் நம்முடைய ஓரல் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது. இந்தியாவில் 2-ம் வகை டயாபெட்ஸ்-ஆல் பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்து பார்க்கும்போது, வெள்ளை அரிசி முக்கிய காரணமாக இருக்கின்றது. அதனால் பழுப்பு அரிசியை சாப்பிடவில்லையென்றாலும், மூன்று வேலையும், வெள்ளை அரிசி உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.