நூற்றில் 90 பேர் காலை குளியலை வழக்கமாக வைத்துள்ளனர். குளியல் குழிபெயர்தல் என மற்றொறு வார்த்தை உள்ளது.. காரணம், பொதுவாக நாம் குளிக்கும் போது முதலில் தலையில் தான் தண்ணீரை மொண்டு ஊற்றிக்கொள்வோம், இது அனைத்து குளியலுக்கும் பொருந்தும். ஆனால் அப்படி குளிப்பது மிகவும் கெடுதல். முதலில் கால் பாதத்தில் இருந்து ஆரம்பித்து கடைசியாகத்தான் தலைக்கு தண்ணீரை ஊற்றவேண்டும். இப்படி செய்வதனால் உடலில் இருக்கும் உஷ்ணம் பாதத்தில் இருந்து மேலேறி கடைசியாக உச்சந்தலையில் இருந்து வெளியேறும்… இதற்கு தான் குளிப்பெயர்தல் என சொல்வார்கள். ஆனால் வழக்கமான குளியலால் உஷ்ணம் உடலிலேயே தங்கிவிடும்….
குளியல்
முதலில் ஒரு விஷயம், மனிதர்கள் எப்போதும் பச்சைத் தண்ணீரில் மட்டுமே குளிக்கவேண்டும், இதில் விதிவிலக்குகள் என்பது, உடலுக்கு எண்ணை தேய்த்துக் குளிக்கும் காலங்களிலும், உடல் வாத பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே!
சிறுவயதில் குளிக்க மறுத்து அடம் பிடிப்போம். பாட்டியோ, அம்மாவோ ‘தாஜா’ செய்து நம்மை குளிப்பாட்டுவார்கள். வளர்ந்த பிறகு குளிக்காமல் இருக்க மாட்டோம். குளித்தல் என்பது ஒரு சுகானுபவம். அதனால் தான் அதை நீராடுதல் என்கிறார்கள். அருவியில், ஆருகளில், குளத்தில், கிணற்றில் ‘நீர் ஆடியவர்களுக்கு’ அந்த அற்புத சுகம் கிடைத்திருக்கும். நகரவாசிகள், ‘ஷவர்’ குளியலில் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
“நீராடுவதால் உடல் தூய்மை, ஆண்மை, நீண்ட ஆயுள் இவை ஏற்படுகின்றன. களைப்பு, அழுக்கு, வியர்வை இவை நீங்குகின்றன உடல் வலிவு, தேஜஸ் (ஒளி) இவை வளர்கின்றன” என்று சரகசம்ஹிதையில் சொல்லப்பட்டிருக்கிறது..
அழுக்கு வெளிப்புற தும்பு, தூசிகள், புழுதி இவற்றால் ஏற்படுகிறது. தவிர மனிதத்தோலும் உடல் கழிவுப்பொருட்களை வெளியேற்றும் ஒரு அவயம் தான். தோலின் அடியில் உள்ள மயிர்கால்களை சுற்றி, கொழுப்பு (ஷிமீதீuனீ) சுரப்பிகள் உள்ளன. இவை மயிர்கால் துவாரங்களின் மூலம் தோல் மேல் வருகிறது. இந்த சுரப்பினால் தான் தோல் வறண்டு போகாமல், மழுமழுப்பாக இருக்கிறது.
அதிக சீபம் சுரந்தால், அது தோலின் மேல் படிந்து விடுகிறது. தவிர தோலின் ‘இறந்த’ செல்களும் வியர்வை கசண்டுகளும் மேல் சேர்ந்து விடும் – இவற்றை நீக்க குளிப்பது அவசியம். மனிதனால் பாம்பு சட்டையை உரித்து விட்டு போவது போல், தோலை கழற்றி விட முடியாது. எனவே இருக்கும் தோலை சுத்தமாகவும், சுகாதாரமாக வைக்க குளியல் அவசியம். அதுவும் வெயில் காலத்தில் ஒரு முறை குளியல் போதாது. இரு முறையாவது குளிக்க வேண்டும். (தண்ணீர் பஞ்சத்தில் 2 முறை குளியலா.. என கேட்பவர்கள். ஒருமுறையாவது ஒழுங்காக குளியுங்கள்.) சரிவர குளிக்காவிட்டால் உடலில் துர்நாற்றம் ஏற்படும். ரோமங்கள் அதிகம் உள்ள இடங்களில் துர்நாற்றம் அதிகமிருக்கும்.
குளியலுக்கு ஏற்ற நீர்
பொதுவாக, வெதுவெதுப்பான, இதமான நீர் அனைவருக்கும் ஏற்றது. கோடையில் குளிர்ந்த நீரால் குளிப்பது. சுறுசுறுப்பை உண்டாக்கும். எனவே தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு தண்ணீரை விட வெந்நீர் உசிதமானது. சுடுநீர் மன இறுக்கத்தை குறைத்து தூக்கத்தை உண்டாக்கும். தலைக்கு மிதமான குறைவான சூடுடைய நீர் (அ) தண்ணீரும், கழுத்துக்கு கீழ் சுடுநீரையும் விட்டுக் கொள்வது நல்லது. இதற்காக தனித் தனி வாளி / பாத்திரத்தை உபயோகிக்கலாம்.
ஆயுர்வேத ஆசான்களில் ஒருவரான வாகபட்டர் கூறுவது – “வெந்நீரால் கழுத்துக்கு கீழ் ஸ்நானம் செய்வது பலத்தைத் தரும். வெந்நீரை தலைக்கு ஊற்றிக் கொள்வது கண்களுக்கும் கேசத்திற்கும் இதமல்ல”.
மிகவும் குளிர்ந்த நீர், மிகவும் சூடான நீர் இரண்டும் கூடாது. பருவ காலத்திற்கேற்ப, உடலுக்கு ஏற்ற, சரியான சூடு / குளிர்ச்சி உள்ள நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். குளிர்காலத்தில் அதிக சூடான நீர் சுகமாக இருக்கலாம். ஆனால் அது உடலின் தாதுப் பொருட்களை அகற்றி விடும். தலையில் நீர்க்கோவை, உடல் வலி உள்ளவர்கள், குளிர் தாங்க முடியாதவர்கள், வெந்நீரில் குளிப்பதே நல்லது. கடுமையான கோடைகாலத்தில் வெந்நீரில் குளித்தால் பித்தம் அதிகமாகும். சருமத்தில் சினைப்பு, தடிப்பு ஏற்படும்.
தவிர வெந்நீரை பாத்திரத்தில் பிடித்து வைத்து அதை நமக்கு ஏற்ற சூட்டுக்கு ஆறவைத்து குளிப்பது நல்லது. சூடான நீரில், தண்ணீரை ஊற்றி “விளாவுவதை” தவிர்க்கவும்.
தினமும் இரு வேளை குளிப்பவர்கள் காலையில் தண்ணீரிலும் இரவில் வெந்நீரிலும் குளிப்பது நல்லது. தண்ணீர் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். இரவில் வெந்நீர் தூக்கத்தை தரும்.
தினமும் குளிக்கும் போது சிறிது எண்ணெயை உச்சந்தலையில் வைத்து குளிப்பது நல்லது. சைனஸ், ஜலதோஷம், காதுவலி, தலைவலி, கண்வலி சிறுவயதில் குளிக்க
நீராடுதலின் நியமங்கள்
உணவுக்கு முன்பு தான் குளிக்க வேண்டும். உணவு உண்டவுடனே குளிப்பதால், தோலின் தட்பவெப்ப நிலை மாறும். ஜீரணம் பாதிக்கப்படும். எனவே குளிக்கும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.
குளித்த பின் தூய்மையான ஆடைகளை அணியவும். குளிக்கும் முன் போட்டிருந்த ஆடைகளை திரும்பி அணிய வேண்டாம்.
ஜலதோஷம், பீநசம், நெஞ்சில் கபம் கட்டியிருப்பது, பேதி, கண் மற்றும் காது நோய் இருக்கும் போதும், குளிப்பதை தவிர்க்கவும். தேவைப்பட்டால், கழுத்துக் கீழே ‘ஸ்பான்ஜ்’ குளியல் எடுத்துக் கொள்ளலாம்.
குளித்த பின் ஈர ஆடைகளுடன் அதிக நேரம் இருக்க வேண்டாம்.
ஈரமான தலையில் எண்ணெய் தடவுவது, சீப்பால் வாருவது கூடாது. முடிகள் ‘உடைந்து’ விடும்.
குளித்த பின் உடல், தலை ஈரம் போக நன்றாக துவாலையால் துடைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் குளியலின் பயன்கள் – சரகசம்ஹிதை சொல்வது எண்ணெய் பூசிய (ஊறிய) குடம், எண்ணெயில் ஊறிய தோல், எண்ணெய் ஊற்றிய வண்டிச் சக்கரம் இவை பலம் உள்ளவைகளாகவும், சுமை சுமப்பதற்குத் தகுதியுள்ளவைகளாகவும் ஆவது போல் உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு உறுதியையும், தோலுக்கு மழமழப்பையும் அளிக்கிறது. வாத தோஷத்தினால் தோன்றுகின்ற வேதனைகளைத் தணியச் செய்து, துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையையும், உடற்பயிற்சிக்குத் தேவையான சக்தியையும் அளிக்கிறது.
தொடு உணர்ச்சியில் வாயு அதிகமாக இருக்கிறது. தொடு உணர்ச்சிக்குத் தோல் இருப்பிடமாகும். எண்ணெய் வாத தோஷத்தை நீக்குவதில் சிறந்தது. உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு நன்மையை அளிக்கிறது. ஆகையால் நாள்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
நாள்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பவனுடைய உடலில் காயம் ஏற்பட்டிருந்தாலும், கடுமையான உழைப்பிலும் அவனுடைய தோலில் மாறுபாடு ஏற்படுவதில்லை. நாள்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பவனுடைய சருமம் மிருதுவாகவும், பார்ப்பதற்கு அழகுள்ளதாகவும் ஆகிறது. வலிவு உள்ளதாகவும், முதுமையினும் அதன் இலக்கணம் முழுவதும் வெளிப்படாமல் சிறிதளவே தென்படுகிறது.
முருகன்