உடலை குளிர்ச்சியாக்கும் சப்ஜா!

Spread the love

திருநீற்றுப்பச்சை என்பது எல்லோரும் அறிந்த செடி வகை. இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா.

திருநீற்றுப்பச்சை செடியில் சிறு பூக்கள் வெண்மை நிறத்தில் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இதன் இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது மருத்துவ குணம் நிறைந்தது. உலகமெங்கும் ‘பேசில்’ என்று அழைக்கப்படும் மூலிகை பிரபலம். திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசில் என்று அழைக்கிறோம்.

சப்ஜா இலைக்கு நம்உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி உள்ளது.

தேவையற்றநீரைஅதுவியர்வையாகவெளியேற்றும்.ஆகையால்மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம். இந்தத்பிரச்சனைகள் உள்ளபோது திருநீற்றுப்பச்சை இலையைஒரு கைப்பிடி அளவு எடுத்துஇருநூறு மி.லி. நீரில் போட்டுகொதிக்க வைத்து பருக. மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும். இது பூச்சிகளை கொல்லும் சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

படர்தாமரை என்றநோய்த்தொற்றால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து படர்தாமரைஉள்ளஇடத்தில் பூசி வரலாம், மேலும். அனைத்துவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாற்றைபயன்படுத்தலாம்.இச்சாறை உடலில் பூசிக்கொண்டால், பூச்சிகள் எதுவும் நெருங்காது. விஷ பூச்சிகள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட இடத்தில் இந்த சாற்றைத் தேய்க்கவும்இச்சாறுபயன்படுகிறது.

ஒருசிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும்.அப்படியிருந்தால், ஒரு கைப்பிடி அளவு இந்தஇலையை எடுத்து ஒரு லிட்டர் நீரில் சேர்த்து, கொதித்து, ஆற வைத்து, அந்த நீரை தொடர்ந்து பருகிவரவேண்டும். காதுவலி மற்றும் காதுசம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.

பருவவயதிலுள்ள பெண்கள்மற்றும்ஆண்கள்பெரும்பாலும்முகப்பருவால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் இந்த பச்சிலை சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்துவந்தால் முகப்பரு நீங்கி முகம்இயல்பாக இருக்கும்,பருவந்ததழும்புகளும் மறையும்.

சப்ஜாவின் விதைகளிலும்பல மருத்துவ குணங்கள் உள்ளன. அவை உடலில்உள்ளபித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டை போக்கும். இவ் விதைகளை நீரில் ஊறவைத்து உபயோகப்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் குணம்உள்ளது.

ஒரு தேக்கரண்டி விதைகளை நீரில் சேர்த்தால்ஊறிய பின் பல மடங்காக அதிகரிக்கும். இவ் விதைகளில் நார்ச்சத்தானது அதிகம் உள்ளது.

சர்க்கரை நோயால்அவதிப்படுகவர்கள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில்சர்க்கரையின் அளவு குறையும்,மேலும்உடல்எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தினமும் இவ்விதையைஒரு தேக்கரண்டி எடுத்துநீரில் ஊறவைத்துச் சாப்பிடலாம்.

ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும்சக்தியும்இதற்குஉண்டு.  மேலும்இது. நெஞ்செரிச்சலைப் போக்கும், மலச்சிக்கலை நீக்குவதற்கு இது ஒருசிறந்த மருந்தாகும்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து அருந்திவரமலச்சிக்கல்குணமாகும். கர்ப்ப காலத்தில்பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.

சிறுநீர் பாதைகளில் ஏற்படும் புண், அதிகசூட்டினால்ஏற்படும்நீர் எரிச்சல்,மற்றும்பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடலின் சூட்டை குறைத்து, உடல்வெப்பத்தைசீரான சீதோஷ்ண நிலையில்வைத்திருக்கும் இயல்புகொண்டது. இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலஇரத்தத்தில்த்திலும் பயன்படுத்தலாம்.

கோடை காலத்தில் வெய்யிலின்தாக்கத்திலிருந்துதப்பிக்கஇதை நன்னாரி சர்பத்தில் கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதைகள்எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.


Spread the love