நம்ம கலாச்சாரத்தில் எப்படி உணவே மருந்தா நம்ம சாப்பிடுற அன்றாட உணவே நமக்கு மருந்து பொருட்களாக பயன்பட்டதோ அதே மாதிரி நம்முடைய வாழ்வியல் முறையில் நிறைய நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க நம் முன்னோர்கள் நிறைய விதமான வாழ்வியல் முறைகளை கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். மருத்துவம் என்பது நோய் வந்த பின்பு கையாளும் முறை, வாழ்வியல் முறை என்பது நோய் வராமல் தற்காத்துக் கொள்ளும் முறை. அந்த மாதிரி வாழ்வியல் முறையில் சொல்லப்பட்ட ஒன்று தான் எண்ணெய் குளியல் அந்த எண்ணை குளியலால் நம் தோல் பளபளப்பாக்கும் உடம்பு குளிர்ச்சியாகும் ஆனால் அந்த எண்ணெய் குளியலே இப்ப பல வீடுகளில் காணாமல் போன ஒன்றாக ஆயிடுச்சு.
ஆனால் அதைவிட இன்னும் சிறந்த இரண்டு வகையான குளியல்கள் இருக்கு அதன் மூலமா நம்முடைய வெளி தோல் மட்டும் பயனடைவதோடு நம்முடைய உடம்புக்கு உள்ள இருக்கிற நச்சுத்தன்மைகளை கூட வெளியேற்ற முடியும் அதுதான் மண் குளியல் மற்றும் வாழை இலை குளியல் என்கிறார் தன்வந்திரி வைத்திய சாலையை சேர்ந்த டாக்டர் சரவணன்.
அவர் மேலும் கூறுகையில் நம்முடைய பாரம்பரிய கலாச்சாரத்தில் மருத்துவ முறைகள் கண்டு பிடிப்பதற்கு முன்னதாகவே நம் வாழ்வியல் முறைகளை பின்பற்றி வந்தனர் நம் முன்னோர்கள். அப்படியான வாழ்வியல் முறைகளை பின்பற்றும் பொழுது பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் முடிந்தது.
இயற்கையாகவே ஆரோக்கியமாக நாம் வாழ்வதற்கு அந்த வாழ்வியல் முறைகள் வழிவகுத்தது மேலும் நம் உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை வெளியேற்றவும் இந்த வாழ்வியல் முறைகள் நமக்கு உதவியது. சித்த வைத்தியத்திலும் இந்த முறைகள் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகத்தான மண்குளியல்
மண் குளியல் என்பது ஐந்து வகையான பொருட்களை ஒன்றாக கலந்து உடல் முழுவதும் பூசப்பட்டு மிதமான வெயிலில் காய விட்டு பின்பு சூடான மூலிகை தண்ணீரில் குளிப்பது ஆகும். அந்த ஐந்து பொருட்கள் என்னவென்றால் களிமண், கங்கையம்மன், புத்துமண், முல்தானிமட்டி மற்றும் சந்தனம் ஆகும்.
இவை ஐந்து பொருட்களுக்கும் இதில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு வகையான மூலிகை தன்மையும் உடலை குளிர்விக்க செய்யும் ஆற்றலும் உள்ளது. இந்த ஐந்து பொருட்களையும் தண்ணீரில் கலந்து உடல் முழுவதும் பூசப்படும் போது முதலில் உடல் குளிர்ச்சி அடையும் பின்பு அது காய்ந்ததும் உடலில் உள்ள வெப்பம் வெளியேறும் அப்படி வெளியேறும் போது மறுபடியும் உடல் சற்று சூடாகும் பின்பு சுடு தண்ணீரில் குளிக்கும் போது நம்முடைய உடலின் தட்பவெட்பம் மாறுபடும்.
உடல் குளிர்ச்சி அடைய செய்வதாலும் மறுபடியும் உடலை வெப்பமடைய செய்வதாலும் அது உடலுக்குக் பலவிதமான நன்மைகளை தரும். இப்படி உடலின் தட்ப வெப்பம் மாறி மாறி மாறுபடும்போது அது நமக்கு உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாகும். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும். நம் சருமமும் பட்டுப் போன்று மென்மையாகும். உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
சருமம் தன்னை தானே புதுபித்துக் கொள்ளும். நம் சருமத்திற்கு இயற்கையிலேயே அந்த ஆற்றல் உள்ளது ஏனென்றால் நம் சருமம் ஒவ்வொரு தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. இந்த மூலிகை தண்ணீரில் எலுமிச்சை இலை, நெல்லி இலை, யூகலிப்டஸ் இலை போன்றவைகள் சேர்த்து கொதிக்க வைத்து குளியலுக்கு பயன்படுத்துகின்றனர் இதனால் சருமமும் உடலும் மேலும் புத்துணர்ச்சி பெறுகிறது.
மருத்துவ குணம் நிறைந்த வாழையிலை குளியல்
பொதுவாகவே வாழையிலையில் சில பிரத்யேக மருத்துவ குணங்கள் உள்ளது antibiotic properties மற்றும் diuretic properties. Antibiotic properties நம் தோலில் உள்ள கிருமிகளை அகற்றும் மேலும் diuretic properties நம் உடம்பிலுள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்றும்.
வாழைத்தண்டில் கூட diuretic properties உள்ளது அதனால் தான் வாழைத்தண்டு சாறு குடிக்கிறார்கள் சிறுநீரகத்தில் கல் உருவாகும் போது, அது நம் உடம்பில் உள்ள தேவையற்ற அளவுக்கு அதிகமாக உள்ள கால்சியம் மினரல்ஸ் போன்றவற்றை வெளியேற்றும். வாழைத்தண்டு சூப் கூட உடல் எடை குறைவதற்கு குடிக்கிறார்கள். இயற்கையிலேயே வாழை இலையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.
மேலும் இந்த வாழை இலை குளியலில் 10 வகையான மூலிகைகள் சேர்த்து காய்ச்சி தயாரித்த மூலிகை எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி அதன் பின் வாழை இலையில் படுக்க வைத்து வாழை இலையால் உடல் முழுவதையும் மூடி குறைந்தது அரை மணி நேரம் மிதமான வெயிலில் படுத்து இருக்க வேண்டும்.
இப்படி செய்யும்போது உடலில் உள்ள தேவையற்ற நச்சுகள் அளவுக்கு அதிகமாக உடலில் தேங்கி உள்ள கால்சியம் மினரல்ஸ் மற்றும் toxins களை உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேற்றும். இந்த வாழை இலை குளியலுக்குப் பிறகு நீராவிக் குளியல் எடுத்துக் கொண்டால் மேலும் அது நம் தோலில் உள்ள துவாரங்களை திறக்க செய்து அதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
பிறகு மண் குளியலுக்கு பயன்படுத்தியது போல அதே போன்ற சூடான மூலிகை தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுத்தபடும் அது உடலுக்கு மிகுந்த புத்துணர்ச்சி கொடுக்கும்.
இந்த மண் குளியல் மற்றும் வாழை இலை குளியல் எங்கள் தேனியில் உள்ள தன்வந்திரி வைத்திய சாலா வின் புத்துணர்ச்சி முகாமில் பலரும் வந்து எடுத்துக்கொள்கிறார்கள். இதை தன்வந்திரி வைத்திய சாலா மருத்துவமனையிலும் எடுத்துக்கொள்ளலாம், சென்னையில் உள்ள தன்வந்திரி வைத்திய சாலா மருத்துவமனையிலும் இந்தக் குளியல் எடுத்துக் கொள்ளலாம். வருடத்துக்கு ஒருமுறையாவது தீபாவளிக்காவது எண்ணை தேய்த்துக் குளி என்று பெரியவர்கள் சொல்வது போல் இந்த மண் குளியல் மற்றும் வாழை இலை குளியல் வருடத்திற்கு ஒருமுறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கூறுகிறார் டாக்டர் சரவணன்.
எஸ். விஜயஷாலினி