அளவில்லா பயன்களை தரும் ஆப்பிள் சீடர் வினிகர்.. உறுதிசெய்யப்பட்ட தகவல்…

Spread the love

ஆப்பிள் சீடர் வினிகர், மனித உடலிற்கு ஆர்வமில்லாத மருத்துவ பலனாக இருந்து வருகிறது… இதை குடித்தாலோ, இல்லை அது தெரியாமல் நமது தலை முடியில் பட்டாலோ, முகத்தில் பூசினாலோ மூன்று விதமான ஆரோக்கியத்தை நமக்கு தரும்… அதுமட்டுமில்லாமல், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கும் ஒரு நல்ல டயட் என்று தான் சொல்ல வேண்டும்.

அதிகப்படியான உணவுகளை எடுக்கும்போது நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கையும், கொழுப்புகளும் சேர்ந்துவிடும்… இதனால் உடல் பருமன் ஏற்பட்டு, ஹார்ட் டிசீஸ் வரைக்கும் கொண்டு போய்டும்.. ஆப்பிள் சீடர் வினிகரில்,  நிறைந்திருக்கின்றது.. இது எப்படிப்பட்ட கடினமான உணவையும் எளிதில் செரிமானம் அடைய செய்யும்… டயட்டில் இருப்பவர்களும் சரி,  இல்லை அதிக மீல்ஸ் எடுப்பவர்களும், சாப்பிடுவதற்கு முன்னால் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடித்து வருவது நல்லது… செரிமானத்திற்கு அசிட்டிக் ஆசிட் நல்லது என்றாலும், இதை அதிகமாக எடுக்கும் போது தொண்டை பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. அதனால் தான் வினிகரை அப்படியே எடுக்காமல் தண்ணீரில் கலந்து குடிக்க சொல்கிறார்கள். உறுதி செய்யப்பட்ட விஷயம் என்னவென்றால்? வினிகரில் இருக்கும் என்சைம், அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கிறதாகவும், கல்லீரலில் கொழுப்புகளை சேர விடாது. எனவும் சொல்லப்படுகிறது…

வினிகரில் இருக்கும் anti-glycolic effects இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது… இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கான சிகிச்சையில் கூட, ஆப்பிள் சீடர் வினிகர் பரிந்துரைக்கப்படுகிறது…   வினிகரில் இருக்கும் anti-hypertensive properties இரத்த அழுத்தத்தை குறைக்கும்.. தினமும் போதுமான அளவில் வினிகரை எடுத்து வந்தால் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்… கொழுப்பை கட்டுப்படுத்தக்கூடிய பெக்டின் என்ற Faber ஆப்பிள் வினிகரில் உள்ளது… இது கொழுப்பை கட்டுப்படுத்துவதனால் இதய நோய் ஏற்படாமலும் பாதுகாக்கின்றது. வினிகரில் இருக்கும் chlorogenic acid மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் தனி ஒரு மனிதனுக்கு  இதய நோய் வராமல் பாதுகாக்கின்றது என்றும்,   உடல் பருமன் கொண்ட பெண்கள் தினமும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு இதயநோய் வராது எனவும் சொல்லப்படுகின்றது..

இதையும் தாண்டி ஆப்பிள் சீடர் வினிகர்,  உணவு குழாயில் ஏற்படும்  கேன்சரை குணப்படுத்துகிறதாகவும் தகவல் வெளிவந்துள்ளது… வினிகரில் இருக்கும் மாலிக் ஆசிட், மனிதர்களின் செரிமான மண்டலத்தை பாதுகாத்து antimicrobial properties ஊக்குவித்து, செரிமான அழற்சியை குணப்படுத்தவும் செய்கிறது.. Antimicrobial properties அசிடிட்டியால் ஏற்படுகின்ற நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று கோளாறை சரி செய்வதாகவும் சொல்லப்படுகிறது… வினிகரில் அமிலங்கள் மிகவும் அதிகம்.. அதை நேரடியாக எடுக்காமல் டீஸ்பூன் அளவில் அதை விட இரண்டு மடங்கு தண்ணீரில் சேர்த்து குடித்து வருவது மிகவும் முக்கியம்…  பற்கள் ஆரோக்கியத்திற்கு ஆப்பிள் சீடர் வினிகர் நல்ல பலனை கொடுக்கின்றது… இதில் இருக்கும் மினரல்ஸ் நம்முடைய உடல் நலத்திற்கு உதவியாக இருப்பதோடு, பற்கள் இடுக்குகளில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, வாயில் ஏற்படும் கெட்ட நாற்றத்தை நீக்க உதவியாக இருக்கின்றது..

தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் நச்சுக்கள் நீங்குவதோடு பற்கள் பொலிவாகி, ஈறு நோயும் வராது…  வினிகரில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் இரத்த செல்களின் நுண்கிருமிகள் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கின்றது…  வினிகரில் தேன் சேர்த்து சாப்பிட்டால் ஆஸ்டியோபோரசிஸ் என சொல்லக்கூடிய எலும்பு பிரச்சனை குணமாகும்…  ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவை படுவதே ஆற்றல் தான்… ஆப்பிள் வினிகர் அது நமக்கு அதிகளவில் கொடுக்கும்… காலையில் ஒரு சொம்பு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் வினிகரை கலந்து குடித்து வந்தால், அந்த நாள் முழுவதும் களைப்பாக இல்லாமல் புத்துணர்ச்சியோடு இயங்க முடியும்…


Spread the love
error: Content is protected !!