சோம்பு

Spread the love

சோம்புச் செடி ஒரு நல்ல மூலிகைச் செடி. இந்தச்செடி ஐரோப்பா முழுவதும் காணப்பட்டாலும், மத்திய தரைக்கடல் ஓரங்களிலிருந்து இந்தியாவிற்கு பரவியது. நதி ஒரங்களிலும், கடற்கரை அருகிலுள்ள காய்ந்த மண்களிலும் காட்டுச்செடியாக சோம்புச்செடி வளரும். இத்தாலியர்களுக்கு பிடித்தமானது இந்தச் செடி. இந்தச்செடிக்கு ஃபோனிகுலம் என்ற பெயரைக் கொடுத்தவர்கள் ரோமானியர்கள். இலத்தீன் பாஷையில் ஃபோனம் என்றால் வைக்கோல் நான்கு முதல் ஐந்தடி வளரும் இந்த அழகான செடியின் பூக்கள் தங்கத்தின் மஞ்சள் நிறமுடையவை. பல கிளைகளுடன் அழகான பிளவுகளுக்கான இலைகள், கவர்ச்சியான பூக்களுடன் கூடிய செடி பார்ப்பவர்களுக்கு பரவசமூட்டும்.

இதன் வேர்கள் விதைகள் மற்றும் இலைகள் மருத்துவ உபேயாகம் உள்ளவை. ஆனால், சோம்பின் பழங்களே வைத்தியத்திற்கு உகந்தவை சோம்பு விதைகள் நறுமணமுடையவை. சுவைப்பதற்கு ஏற்றவை சுடு தண்ணீர் அல்லது ஆல்கஹாலுடன் கலக்கும் போது அதன் சுவை கூடுகிறது. இந்த விதைகளிலிருந்து எண்ணை வடித்து எடுக்கப்படுகிறது.

சோம்பின் நறுமணமும், மாந்தத்தை போக்கும் குணத்தாலும் குழந்தைகளின் கிரைப் வாட்டர் களில் உபயோகிக்கப்படுகிறது. சோம்புத் தண்ணீர் ஒமத் தண்ணீரின் குணங்களுடையது. குழந்தைகளின் வயிற்று வலிக்கும். வாய்வுத் தொல்லைக்கும் சோம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணையை 1 தேக்கரண்டி கொடுத்தால் சரியாகும். சோம்பு அல்லது சோம்பின் இலைகளால் தயாரிக்கப்பட்ட கஷாயம் அஜீரணத்தையும் வயிற்று வலியையும் குறைக்கும். இந்த கஷாயம் நசுக்கப்பட்ட ஒரு தேக்கரண்டி சோம்புடன், 300 மில்லி சூடான தண்ணீரைச் சேர்த்து தயாரிக்கலாம். சோம்பு ஜூஸ் தொடர் இருமலை கட்டுப்படுத்தும்.

சோம்பு வாய்வை பிரிக்கும் சிக்கலில்லாமல் சிறுநீர் கழிய உதவும். கல்லீரல், மண்ணீரல், கணையம் இவற்றில் ஏற்படும் தடைகளையும், கற்களையும் போக்கிடும். மஞ்சள் காமாலைக்கு சோம்பு ஒரு மருந்து விக்கல் வாந்தி இவற்றுக்கு சோம்பு (அ) இலைகளின் சூடான கஷாயம் நல்ல மருந்து. பெருமூச்சுக்கும், கணை, நுரையீரல் கபத்திற்கும் சோம்பை உபயோகிக்கலாம். கல்லீரலுக்கும் இரத்த சுத்திக்கு சோம்பு பயன்படுத்தப்படுகிறது. சாம்புக்கஷாயம் உடல் எடை குறைக்க உதவும். சோம்புக்கஷாயம் பாம்பின் விஷம், காளான் விஷம் இவற்றை முறிக்கும் சோம்பின் இலைகளை பார்லி கலந்த தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க, தாய்ப்பால் பெருகும். குழந்தைகளின் மருந்துகளில் சோம்பு ஒரு அவசியமான பொருள்.

இதன் கஷாயம் கண்களை கழுவ, கண் எரிச்சல் குறையும். வயிற்றுக்கோளாறுகள், குடலிறக்கம் அஜீரணம், வயிற்று வலி, கபம், இவற்றுக்கெல்லாம் உபயோகப்படுத்தும் மூலிகை மருந்துகளின் சோம்பு சேர்க்கப்படுகிறது. உடல் கழிவுகளை வெளியேற்றும் பேதி மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஐரோப்பாவில் இத்தர பேதி மருந்துகளான ஐந்து மூலிகைகளில் சோம்பும் ஒன்று. ஜுரம், பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கும் சிறுநீர் பிரச்சனைகளுக்கும் மருந்தாகும் சோம்பு. சோம்பை, வாய் துர்நாற்றத்தை போக்க உபயோகிக்கலாம். சாப்பிட்டவுடன் சோம்பை மெல்லுவது, இந்தியர்களின் தொன்று தொட்ட பழக்கம்.

அஜீரணத்திற்கும் வாந்திக்கு திரிகாட்டு பவுடர் சேர்ந்த சோம்பு பயனிக்கும் 1 தேக்கரண்டி சோம்பு. 2 டேபிள் ஸ்பூன் 11/2 தேக்கரண்டி தேன் – இவற்றை கலந்து 3 நாட்கள் ஊற வைக்கவும். வடிகட்டி 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் (தேவைப்பட்டால்) சேர்த்து, பஞ்சினால் முகத்தில் தேய்த்து வர, பருக்களும், மருக்களும் மறையும்.

சோம்பில் உள்ளவை

ஈரம்       6.3%

கொழுப்பு  10%

நார்ச்சத்து-18.5%

புரதம்      9.5%

தாதுப்பொருட்கள்-13.4%

மாவுச்சத்து-42.3%

கலோரிகள்-370%

சோம்பு சர்பத்

தேவையான பொருட்கள்

சோம்பு  –1/2கப்

சீனி     –1/2கப்

செய்முறை

சோம்பை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். சோம்புடன், சீனி, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும் சமயம் 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீர் மற்றும் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.

உணவு நலம் ஜுன் 2011

சோம்பு, மூலிகை, ஃபோனிகுலம், ஃபோனம், மருத்துவ உபேயாகம், சோம்பு விதைகள், கிரைப் வாட்டர், வயிற்றுவலி, வாய்வுத் தொல்லை, அஜீரணம், கல்லீரல், மண்ணீரல், கணையம், மஞ்சள் காமாலை, மருந்து, பெருமூச்சுக்கும், கணை, நுரையீரல், மருந்துகள், கண் எரிச்சல், வயிற்றுக்கோளாறுகள், குடலிறக்கம் அஜீரணம், வயிற்று வலி, கபம், மூலிகை மருந்து, மாதவிடாய் கோளாறு, சோம்பில் உள்ளவை, ஈரம், கொழுப்பு, நார்ச்சத்து, புரதம், தாதுப்பொருட்கள், மாவுச்சத்து, கலோரிகள், சோம்பு சர்பத், செய்முறை, சோம்பு, சீனி,


Spread the love