வைட்டமின் சி அளவில்லாமல் நிறைந்திருப்பது நெல்லிக்காய், நமது உடலிற்கு ஆன்டி ஆக்சிடண்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புஆற்றலை பெருக்குவதோடு, தலை முடியில் இருந்துசருமத்தின் ஆரோக்கியத்தை ப்ரொமோட் பண்னும் வரைக்கும் பல மாயா ஜாலங்களை செய்து… அதைபற்றி பார்க்கலாம்…
நெல்லிக்காயில் இருக்கும் ellagitannins,flavonoids, kaempferol, மற்றும் gallic aacid நம்முடைய உடல்நலத்திற்கு நல்ல மருந்து என கூறவேண்டும்… கொடிய காய்ச்சல் மற்றும் சளிக்கு இரண்டு டீஸ்பூன் நெல்லி சாற்றோடு, அதே அளவிற்கு தேன் கலந்து குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்… அதே இரண்டு டீஸ்பூன் நெல்லிசாற்றை, அரை தம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டுமுறை குடித்து வந்தால் வாய்ப்புண் மறையும்…
உலகத்தில் இருக்கும் அதி சிறந்த கார்ப்பரேட் சிகிச்சையில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க தினமும் நெல்லி சாறு குடித்துவர வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது… சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நெல்லிசாறு மிகவும் உதவியாக இருக்கின்றது.. சர்க்கரை நோயாளிகள் நெல்லிசாற்றோடு சிறிது மஞ்சத்தூள்மற்றும் தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.. பண்டைய காலத்தில் இருந்தே ஆஸ்துமா நோயாளிகளுக்கு தினமும் நெல்லிக்காய் ஜூஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது.காரணம், இது சுவாச திறனை மேம்படுத்தவும், சுவாச குழாயில் இருக்கும்நச்சுகளை விரட்டி தொற்றுகளில் இருந்து காக்கவும் செய்கிறது.
நெல்லிக்காயில் இருக்க கூடியநார்சத்து, செரிமான மண்டலத்தைசீராக இயக்கி, அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது… மனித உடலில் கல்லீரல்செயல்பாடு மிகவும் அவசியம்.. நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வரும்போது, கல்லீரலில் ஏற்படும் தொற்றை வெளியேற்றி, கல்லீரல் மேம்பாட்டின் செயல்திறனை உற்பத்தி செய்கிறது. நெல்லிக்காய்சாற்றில் இருக்கும். ellagicacid, gallic acid, மற்றும் flavonoids போன்ற ஆன்டிஆக்சிடன்ட் கேன்சர் செல்களை வளர விடாமல் ஆரம்பத்திலேயேஅதை அழிக்கவும் செய்கிறது… புதிதான நெல்லிக்காய் சாற்றோடு தேன் கலந்து தினமும்குடித்து வர, இரத்தம் சுத்தமாகும்.. இதனால் உடல் சோர்வு இல்லாமல் செயல்படவும் முடியும்…
நெல்லி சாற்றில் பொதுவாக அலோரிஸ் குறைவு, அதுமட்டுமின்றி இதில்இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் உணவுகளை எளிதில் செரிக்க வைக்கின்றது.. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள், உங்களின் உணவுபட்டியலில் நெல்லிசாற்றை தாராளமாக எடுத்து கொள்ளலாம்… இதனால் கெட்ட கொலஸ்ட்ரால் உருவாகாமல், கொழுப்பு குறைந்துவிடும்..
நெல்லிக்காய் சாற்றை, தயார் செய்வதுமிகவும் எளிது.. ரன்னிங் தண்ணீரில் நெல்லிக்காய்களை சுத்தம் செய்து, நெல்லிக்காயை இரண்டாக வெட்டி அதில் இருக்கும் கொட்டையை எடுத்து மிக்சியில் அடர்த்தியாக அரைக்கவும். அதை உங்கள் சுவைக்கு ஏற்ற மாதிரி உப்பு அல்லது சர்க்கரை, தேன் கலந்தோ குடித்து வரலாம்… குறிப்பாக, நெல்லிக்காயில் இருக்கும்.மொத்த சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்றால் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது தான் நல்லது.. இதை குடித்து வருவதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உங்களின் தோல் மற்றும்கூந்தலை ஆரோக்கியமாகவும் வைக்கலாம்.