பாதாம் பாதகமானதா

Spread the love

பாதாம் ஒரு உயர்தர சூப்பர் உணவு. அனைவருக்கும் பிடித்தது. சத்து நிறைந்தது. பாதாம் நமது தேசத்தில் பஞ்சாபிலும், காஷ்மீரிலும் விளைகின்றது.

மிகச் சிறந்த பாதாம் பருப்புகள் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் விளைகின்றன. அங்கு பாதாம் பயிரிடுபவர்கள் இணைந்து “கலிஃபோர்னியா பாதாம் போர்டு” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, உலகெங்கும் பாதாமை விற்பனை செய்கின்றன.

பாதாம் உடலுக்கு வலிமை, வீரியம் இவற்றை தருகின்றது. பாதாமில் இரண்டு வகை உண்டு. ஒன்று இனிப்பு பாதாம் – இதன் பூக்கள் மென்மையாக இருக்கும்.

இரண்டாவது வகை கசப்பு பாதாம் – இதன் இலைகள் சிவப்பு கலரில் இருக்கும். இனிப்பு பாதாமிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. உடலை மசாஜ் செய்ய பெரும்பாலும் இனிப்பு பாதாம் எண்ணெய்யே பயன்படுத்தப்படுகின்றனது.

பாதாமில் உள்ள சத்துக்கள்

பாதாமில் உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது. பாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில் 3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது.

கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.

பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் பூரித கொழுப்பு குறைவு.

பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸும் உள்ளன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் H6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும், பாஸ்பரஸும் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் H6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது. உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின் இ தேவை.

ஓட்ஸ், சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை ஏற்றாது. இதை பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.

பாதாமின் பயன்கள்

பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில்  நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது.  உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம்.

பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.

பாதாம் பால் தோலுரித்த பாதாமுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்த கலவை. பாலுடன் சேர்த்து பருக ஒரு சிறந்த பானம். ஆரோக்கியத்திற்கு நல்லது. பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது. பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.

ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கப்படுகின்றன.

பாதாம் அல்வா செய்முறை

தேவையான பொருட்கள்

பாதாம் பருப்பு – 200 கிராம்

சர்க்கரை       – 200 கிராம்

நெய்          100 கிராம்

செய்முறை 

பாதாம் பருப்புகளை சுடுநீரில் இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு தோலை உரிக்க வேண்டும். பாதாம் பருப்பை மெல்லிய விழுதாக பால் அல்லது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த பாதாம் விழுதை போட்டு சர்க்கரை சேர்த்து நெய்யில் பாதியளவை சேர்த்து சமைக்கவும். மீதியுள்ள நெய்யை சேர்த்துக் கொண்டே வரவும். நன்றாக கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்பொழுது அடுப்பிலிருந்து இறக்கவும்.

தேவைப்பட்டால் கேசரி பவுடர் அல்லது குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

உணவு நலம் ஜுலை 2010

பாதாம், பாதகமானதா, சத்து, பாதாம் பருப்புகள், வீரியம், சருமம், மசாஜ், புரதம், ஜீரணமண்டலம், கொலஸ்ட்ரால், இதயம், எலும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், மேங்கனீஸ், விட்டமின், பி, கார்போஹைட்ரேட், வைட்டமின், ஹேமோசைடிசின், உடல் எடை, நீரிழிவு நோயாளிகள், அரிப்பு, அழற்சி, அழகு சாதனங்கள், சோரியாசிஸ், எக்சிமா, சரும வியாதிகள், சிறுநீரக பாதைகள், நுரையீரல், ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகள், சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள், புற்றுநோய்,

பாதாம், அல்வா, செய்முறை, பாதாம் பருப்பு, சர்க்கரை, நெய்,


Spread the love
error: Content is protected !!