ஏராள பயனளிக்கும் ஏபிசி ஜூஸ்
ஆப்பிள். பீட்ரூட், காரட் ஜூஸ் பல நோய்கள் தீர்க்கும் பாரு
ஆப்பிள். பீட்ரூட், காரட் என்று ஒவ்வொன்றிலும் ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் இட்டு பழரசமாகச் செய்து கொள்ளவும். இப்பழரசத்தில் சிறிதளவு எலுமிச்சை சாறையும் சேர்த்துக் கொள்ளவும். தினசரி காலை, மாலை வெறும் வயிற்றில் இரு வேளை என தொடர்ந்து அருந்தி வாருங்கள். ஒரு மணி நேரம் கழித்து காலை உணவை உட்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் இச்சாறை புத்தம் புதியதாகச் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நீங்கள் பெறும் உடல் ஆரோக்கியம் கணக்கிலடங்காதது.
புற்று நோயை உருவாக்கும் கெட்ட செல்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது. சிறு குடல், பெருங்குடல், சிறுநீரகம், கணையம் சார்ந்த பலவித நோய்களை தடுக்கிறது. குடல் புண்ணை குணப்படுத்துகிறது. நுரையீரலை வலுப்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு இயக்கத்தை சீராகவும், அதிகரிக்கவும் உதவுகிறது.
பார்வைத் திறனை மேம்படுத்துகிறது. கண் சிவத்தல், களைப்புற்ற கண்கள், ஈரப்பசையின்றி உலர்ந்து போன கண்களை பாதுகாக்கிறது. உடற்பயிற்சியின் காரணமாக ஏற்படும் உடல் வலி, தசை வலிகளை நீக்குகிறது. உடலில் உள்ள விஷப் பொருட்களை மலக்குடல் செயல்பாடுகளைத் து£ண்டி வெளியேற்றுகிறது. சருமப் பொலிவு, பாதுகாப்பு ஆரோக்கியம் பெற உதவுகிறது. செரிமானக் கோளாறு, தொண்டை தொற்றினால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. மாத விலக்கு சமயம் ஏற்படும் வலியைக் குறைக்கிறது. பக்க விளைவுகள் ஏதுமில்லாத ஒரு அற்புத பானம் இது. உடல் எடையைக் குறைத்து உடல் பலம் ஏறி சுறுசுறுப்பாக உள்ளது என்பதை இரண்டு வாரம் தொடர்ந்து பருகி வந்த பின்பு நீங்களே உணர்வீர்கள். நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகரித்து காணப்படுவதை உணர்வீர்கள்.
ஆயுர்வேதம்.காம்