குறைகளை நீக்கும்: நிறைகளை அதிகரிக்கும்

Spread the love

மேக்அப் மூலம் உடல் உறுப்புகளின் குறைகளை மறைக்கலாம்!

ஒப்பனை (Make-up) என்பது பெண்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப் பிரசாதங்களில் ஒன்று. அதை சரியான முறையில் பயன்படுத்தக் கற்றுக் கொண்டால் சாதாரணத் தோற்றம் கொண்ட ஒரு பெண்ணையும் பேரழகியாகக் காட்ட முடியும். மேக்அப்பின் மூலம் இயற்கையாக உள்ள குறைகளை மறைக்கவும், நிறைகளை மேலும் அதிகரித்தும் காட்டலாம். இதற்கென ஒரு சில உத்திகள், தந்திரங்கள், செயல்முறை நுட்பங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

உள்ளடங்கிய நாடி (Receding Chin):

ஒரு சில பெண்களுக்கு தாடை உள்ளடங்கி இருக்கும். இதனால் முகத்தின் தோற்றம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க முகத்தில் தடவி இருக்கும் பவுண்டேஷன் நிறத்தை விட, ஒரு ஷேடு லைட்டான பவுண்டேஷனை கீழ் உதட்டின் அடியிலுள்ள உட்குழிந்த பகுதியில் தடவி நன்கு இழைத்து விடவும். முகத்திற்கு இட்டிருக்கும் பவுடரை விட ஒரு «னூடுகுறைவான பவுடரை அந்த இடத்தில் இட்டு, முகத்தின் நிறத்தோடு இணையும் படி மெலிதாகப் பூசி மெழுகி விட வேண்டும். நாடி முன் வந்தது போல் தோற்றம் இதன் மூலம் கிடைக்கும்.

உள்ளடங்கிய தாடையை எவ்வாறு கண்டறிந்து கொள்ளலாம்?

ஒரு தட்டையான ஸ்கேலை எடுத்துக் கொண்டு, மூக்கின் நுனியும், தாடையும் அதில் படும்படி செங்குத்தாகப் பிடிக்கவும். ஸ்கேலில் உங்கள் உதடுகள் படுமானால் உள்ளடங்கிய தாடை என்று அர்த்தம் செய்து கொள்ளலாம்.

இரட்டை நாடி (Double Chin):

தாடையின் கீழ்த் தொங்குகின்ற தசை இரண்டாவது நாடி போலதோன்றுவதை இரட்டை நாடி என்கிறார்கள். முகத்தில் இடப்பட்டிருக்கும் பவுண்டேஷன்நிறத்தை விட அடர்ந்த நிறமுள்ள (Darker Shade) பவுண்டேஷனைதாடை எலும்பில் இருந்து ஆரம்பித்து தாடையின் கீழ் வரை கவனமாகத் தடவி, நன்கு பூசிஇழைத்து விடவும். அதே நிறத்தில் பவுடர் இட வேண்டும்.

ஏறிய நெற்றி (High Forehead):

                        நெற்றிப் பொட்டுகளில் (Temples) ப்ளஷர் தடவும் போது பார்ப்போர் கவனம் அங்கு திரும்பும். பீஜ் நிற பவுண்டேஷனை முடி தொடங்கும் இடத்தில் சற்று கனமாகத் தடவவும். புருவங்கள் அடர்ந்து காணும் படி ஐ புரோ இட வேண்டும்.

முன் துருத்திய நெற்றி (Bukging Forehead):

                        நெற்றிப் பொட்டின் கீழ் கண் இமைகளிலும், மூக்கின் மேற்பகுதியிலும் ஆழ்ந்த நிறமுடைய பவுண்டேஷன் இட்டு இழைத்து விடவும். இது முகத்தின் வடிவத்தை முழுமையாகத் தோற்றம் தரச் செய்து, துருத்திய நெற்றியை பின்னுக்குத் தள்ளி விடும்.

குறுகிய நெற்றி (Narrow Forehead):

                        நெற்றியில் வெளிர்நிற பவுண்டேஷன் இடும் போது, புருவங்களுக்கும் தலை முடி தொடங்கும் இடத்திற்கும் இடையேயுள்ள இடம் அகன்று தெரியும்.

அகன்ற செவிகள் (Large Ears):

                        அகன்ற காது மடல்களில் ஆழ்ந்த (Dark) பவுண்டேஷன் தடவுகின்ற போது, காது மடல்களின் தோற்றம் மட்டுப்படுத்தப்படும். ட்ரான்ஸ்லுசன்ட் ( டிரான்ஸ்பரண்ட் ) பவுடர் தடவிப் பூசுங்கள். பெரிய காது வளையங்கள் அல்லது காது மடலை இணைத்துப் பிடிக்கும் வண்ணம் பெரிய காதணிகளை அணிந்து கொள்ளுங்கள்.

கண்களின் கீழ் கருமை:

                        முதலில் கண்களின் கீழ் மாய்ஸ்சரைசர் இருங்கள். அடுத்து பவுண்டேஷன் இடுவதற்கு முன்பு ஒரு வெளிர் நிறமுள்ள க்ரீம் பேஸ் தடவி பிரஷ்கொண்டு சமன்படுத்தி உலர விடுங்கள். அதன் மேல் பவுண்டேஷன் இடுங்கள். பீஜ் கலர் பவுண்டேஷன் ஏற்றதாக இருக்கும். இந்த பேஸ்கள் ஸ்டிக் வடிவில் வருகின்றன. இதை மாய்ஸ்சரைசரில் தொட்டு ஈரமாக்கிக் கொண்டு ஒற்றி ஒற்றி எடுக்க வேண்டும்.

கண்களின் கீழ் சுரப்பு (Bags):

                        கண்களின் கீழ் சிறுபைகள் போன்று சுரப்பு ஒரு சிலருக்கு இருக்கும். இவற்றைப் பவுடர் போட்டு மறைக்க முயலக் கூடாது. ஒரு ஈர ஸ்பான்ஞ்சில் பீஜ் நிற பவுண்டேஷனைத் தொட்டுக் கொண்டு ஒரு கோட் ( பூச்சு ) இடுங்கள். அடர்ந்த (Dark) ஷேடுகளை கண்ணுக்கு மேல் இடுங்கள். கீழ் இமைகளுக்கு கீழே எதுவும் இட வேண்டாம்.

பெரிய மூக்கு:

                        மூக்கின் இரு பக்கங்களிலும், மூக்கின் நுனியிலும் ப்ரௌன் பீஜ் ஷேடு கொண்டு தடவுங்கள். ஹை-லைட்டரினால் மூக்கின் மேல் குறுகிய கோடு ஒன்று நீளத்தில் இடவும். அதை ஷேடுடன் இணைத்து விடவும். மூக்கு நுனிக்கு வரும் முன்னரே இந்தக் கோடு நின்று விட வேண்டும்.

சிறிய வாய்:

                        உதட்டின் இரண்டு மூலைகளையும் லிப்ஸ்டிக்கினால் நீட்டி விடவும்.

குட்டையான கழுத்து:

                        முகத்தில் தடவியிருக்கும் பவுண்டேஷனை விட ஆழ்ந்த (Dark) நிற பவுண்டேஷனை கழுத்தில் தடவி நன்கு இழைத்து விடவும். இது கழுத்தை மெலிதாகவும், நீளமாகவும் காட்டும்.

நீண்ட கழுத்து:

                        வெளிர் நிற (Pale) பவுண்டேஷனை கழுத்தில் தடவிச் சீராக இழைத்து விடவும். இது கழுத்தை கனமாகக் காட்ட வல்லது. பார்வைக்கு உயரம் குறைவாகத் தெரியச் செய்யும்.

தழும்புகள்:

                        முகத்தின் நிறத்தை விட ஆழ்ந்த கலர் பவுண்டேஷனைத் தழும்புகளில் தடவிப் பவுடரை ஒற்றி விடவும். இதன் மேல் முகத்தின் போட்டிருக்கும் நிறத்தில் பவுடர் பூசலாம்.

புள்ளிகள், பொட்டுகள் (Freckle):

                        புள்ளிகள், பொட்டுகள், சிறு வெடிப்புகளை மறைந்து வழுவழுப்பானதாகச் சருமத்தைக் காட்டுவதற்கு உங்களது இயல்பான நிறத்தை விடச் சற்று வெளிறிய பிங்க் நிறமுள்ள பவுண்டேஷனைத் தடவி சீராக்கிப் பின்னர் இயல்பான பவுடர் இடவும்.

முகச் சுருக்கங்கள் (Wrinkle ):

                        வெறும் பவுடர் மட்டும் இடும் போது முகச் சுருக்கங்கள் மேலும் அழுத்தமாகத் தெரியத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல் சருமம் வயதானது போல காட்டும் சிறிதளவு லிக்விட் பவுண்டேசனை,ஈரமான ஸ்பான்ஜில் நனைத்து லேசாகப் படும்படி கழுத்து, நெற்றி, கண் இமைகள், கடைக்கண்ணின் கீழ்ப்பகுதி போன்ற சுருக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒத்தி ஒத்தி எடுக்கவும். இதை சமமாக்கி உலர விடவும். மிக லேசாகப் பவுடர் இடவும்.

களைத்த முகம்:

                        சிறிதளவு ரூஜை ஸ்பான்ஞ்சில் எடுத்து நெற்றியின் நடுவில் இழைத்து விட்டால் முகத்திலிருந்து களைத்த தோற்றம் மறைந்து விடும்.

கழுத்தையும் கொஞ்சம் கவனியுங்க:

                        முகத்துக்கு அழகு புன்னகை. கழுத்துக்கு அழகு பொன் நகையா? அல்ல.. கழுத்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை மடிப்புகள் விழாமல் பராமரிப்பதுதான். பியூட்டி பார்லருக்குச் சென்று முக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் கழுத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். பாலியல் உணர்வைத் தூண்டும் சக்தி கழுத்துக்கு உண்டு. இதில் முன்கழுத்து,பின்கழுத்து என்று பேதம் தேவையில்லை. முகத்தைப் பராமரிக்கும் போது நாம் கழுத்தை மறந்து விடக் கூடாது. முகத்திற்குப் பயன்படுத்தும் களிம்புகளையே கழுத்துக்கும் பயன்படுத்தலாம். மஞ்சள் பொடி, பாலாடை மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த களிம்பை கழுத்தில் தடவலாம். குட்டைக் கழுத்து இருப்பவர்கள் கழுத்தை சரியாக பராமரிக்கா விட்டால், கழுத்தில் மடிப்புகள் தோன்றி விடும். பின்னர் கருப்பு வரிகளும் ஏற்படும். இதை போக்க என்ன செய்யலாம்? பாதாம் எண்ணெயையும், தேங்காய் எண்ணெயையும் சம அளவு எடுத்துக் கொண்டு மிதமாக சுட வைத்துக் கொள்ள வேண்டும். அதைக் கழுத்தில் தடவி தினமும் மேலிருந்து கீழாக விரல்களால் தடவிக் கொடுங்கள். பின்னர் இதே போல் செய்து தேய்த்துக் குளியுங்கள். இதனால் கழுத்தின் இறுக்கம் குறையும். மடிப்பும் மறைந்து போகும். கருப்பு வரிகள் காணாமல் போகும்.

குட்டை கழுத்து உடையவர்கள் கழுத்தோடு ஒட்டிக் கொண்டு இருப்பது போல் நெக்லஸ் போன்ற நகை அணியாதீர்கள். நீளமான செயின் அணியுங்கள். இது உங்கள் கழுத்தை எடுப்பாகக் காட்டும். காலையில் எழுந்ததும் சோம்பல் முறிப்பது போல கழுத்தை மேலும் கீழும், இடது வலத்திலும் ( பக்கவாட்டில் ) திருப்பி பயிற்சி செய்யுங்கள். இதனால் தசைகள் தளர்வாகி தோல் தொய்ந்து விடாதிருக்கும்.

கழுத்தில் அணிந்திருக்கும் மஞ்சள் சரடை மாற்றாமல் நீண்ட காலம் போட்டு இருந்தால் கழுத்துப் பகுதியில் கருமை படர்ந்து விடும். மேலும் சிலருக்கு தங்க நகைகளும் அலர்ஜி ஏற்படுத்தலாம். கவரிங் நகைகள் அலர்ஜி உண்டாக்குவது பலரின் அனுபவமாக இருக்கும். இதைப் போக்க ஒரு தேக்கரண்டி சர்க்கரைப் பவுடர், ஒரு தேக்கரண்டி வெண்ணெய், கால் தேக்கரண்டி பச்சைக் கற்பூர பவுடர் மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றைக் கலந்து, பின் கழுத்து, தோள்பட்டை வரை தினமும் தேய்த்துக் குளித்து வர கருமை காணாமல் போகும். தோலும் மென்மையாகும். கழுத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் வெந்தயக் கீரையை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அந்தக் கீரையை அரைத்து கழுத்தில் பூசி வந்தாலும் கழுத்து சங்கு போல ஜொலிக்கும். ஆகையால் கழுத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்க ப்ளீஸ்.

பாதாம், பிஸ்தா, கசகசா மூன்றையும் அரைத்தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். விழுது போல் வந்ததும் அதைக் கழுத்தில் இருந்து முகம் வரைக்கும் அடர்த்தியாக தடவுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே ஊற விடுங்கள். இது சருமத்தின் வறட்சியைப் போக்கும். தேவையான எண்ணெய்ப் பசையை கொடுத்து முகத்தை மட்டுமல்ல கழுத்தையும் பளபளப்பாக்கும்.பக்க விளைவுகளும் ஏற்படாத இயற்கை முறை இது.

முதுகு:

இயற்கையாகவே முதுகு எண்ணெய் சுரப்பிகள் அபரிதமாக உள்ள இடமாகும். இதனால் முதுகில் சுருக்கங்கள் விழுவது அபூர்வம். வெயில் காலங்களில் சூரிய வெப்பம் அதிகம் விழாமலிருக்க வேண்டுமானால் Sun Screen  லோஷன்களைத் தடவலாம்.

முழு உடலின் சரும பாதுகாப்பிற்கு:

முக அழகுக்காக ஏற்கனவே கூறப்பட்டுள்ள குறிப்புகளில் சில முழு சரும பாதுகாப்பிற்கும் உதவும்.

1. எண்ணெய்க் குளியல் வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தடவிக் கொண்டு உடற்பயிற்சி செய்தல்.

2. மூலிகைப் பொடி கலந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்துக் கொள்வது. 3. அஸ்வகந்தா, அதிமதுரம், தசமூலம் பொடிகளை சம அளவில் எடுத்து, கலந்து தண்ணீரில் குழைத்து தடவிக் கொள்ளலாம். கடலை மாவுடன் கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் மற்றும்  மஞ்சள் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து கலந்து தண்ணீரில் குழைத்துத் தடவிக் கொள்ளலாம். இதை மாதம் இருமுறை செய்யலாம். எண்ணெய் சிறிது சூடாக இருக்க வேண்டும்

To Buy Herbal Products>>>


Spread the love