பொதுவாக பீட்ரூட் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது என்றுகூறுவார்கள். ஆனால் இதற்கு பீட்ரூட் ஜீஸை குடிக்கும் போது முழுமையான பலன் நமக்கு கிடைக்கும். காரணம் பீட்ரூட் ஜுஸில் இருக்கும் நைட்ரேட்ஸ் இது நமக்கு நைட்ரிக்ஆசிட்டாக இரத்தத்தில் இருக்கும் செல்களை சீராக்கும். அதோடு சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் போன்ற இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும்.
தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜீஸை குடித்து வந்தால் பிளாஸ்மா நைட்ரேட்டின் அளவு அதிகமாவதாக கூறப்படுகின்றது. இதனால் ஒருவர் உடலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.
அதனால் பீட்ரூட் ஜூஸ் நமக்கு ஆற்றலை தரக்கூடிய ஆரோக்கியமானபானமாகும். அதுமட்டுமின்றி 2015-ல் நடத்திய ஆய்வில்என்ன கூறியுள்ளார்கள் என்றால் பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட்ஸ் இதய பலவீனம் மற்றும் இதய நோயாளிகளின் இசை ஆற்றலை அதிகரிப்பதாகவும் குறிப்பிட்ட நோயாளிகளுக்கு இந்த பீட்ரூட் ஜீஸை குடித்தால் 2 மணி நேரத்திலேயே நல்ல பலன் கிடைப்பதாகவும்சொல்லப்படுகின்றது.
அதோடு மூளை பாதிப்பினால் ஏற்படும் டிமென்ஷியா மாதிரியான நினைவகசீர்கேடு வராது என்று கூறுகிறார்கள். பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட்ஸ் மூளைக்கு செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை அதிகமாக்கும். அதனால் மூளை பகுதியில் இருக்கும் முக்கியமான செயலான Frontal நுரையீரல் சிறப்பாக செயலாற்றவும் உதவுகிறது. பீட்ரூட்ஜுஸில் கலோரிகளும், கொழுப்பும் குறைவு. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும்,பராமரிப்பவர்களும் காலையில் ஒரு கப் பீட்ரூட் ஜுஸோடு உங்கள் நாளை தொடரலாம்.
பீட்ரூட் நிறத்திற்கு காரணம் பீட்டாவைன்ஸ் இது தண்ணீரில் கரைய கூடிய ஆண்டி-ஆக்ஸிடன்டாக இருக்கின்றது. இது புற்றுநோய் செல்களை வளர விடாமல் அழிப்பதாகவும், 2014-ல் வந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட்ரூட்டில் வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் பொட்டாசியம் நரம்புகளுக்கும், தசை ஆரோக்கியத்திற்கும் முக்கிய மினரல்ஸ் ஆக இருக்கின்றது.அதனால் தினமும் பீட்ரூட் ஜீஸை குடித்து வந்தால் உடலில் ஏற்படும் அசாதாரண நடவடிக்கையிலிருந்து இருந்து விடுபடலாம்.