வைட்டமின் சி, வைட்டமின் கே, போலாசின், பீட்டா கரோடின், மாவு சத்து, இரும்புச் சத்து அதிகம் உள்ளது. ஒரு தேநீர் கோப்பை அளவு அதாவது சுமார் 250 மி.லி. பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம்.எம். அளவாக குறைகிறது.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் அல்சர் குணமாகும்.
பீட்ரூட் சாறு, வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டால் சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்ததில் சிவப்பணு உற்பத்தியாகும்.
கல்லீரல் கோளாறுகளுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த மருந்து.
இது அஜிரணத்தை நீக்கி செரிமானததை கூட்டும்.
புதிதாக இரத்த அணுக்கள் உருவாக துணைபுரியும்.
தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் தீப்புண் கொப்புளமாக மாறாமல் விரைவில் ஆறும்.
பீட்ரூட் கஷாயம் மூல நோயை குணப்படுத்தும்.
இரத்த சோகையை குணப்படுத்தும்.
பி. சாந்தி
இராசிபுரம்