தேவையான பொருட்கள்
பீட்ரூட் -1 (துருவியது)
கேரட் 1 (துருவியது)
உப்பு -தேவையான அளவு
செய்முறை
பீட்ரூட், காரட் துருவலை மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு பசையாக அரைக்கவேண்டும்.ஒரு பவுலில் மூன்று கரண்டி தோசை மாவுடன் பீட்ரூட், கேரட் கலவையை தனித் தனி பவுலில் சேர்த்துக்கொண்டு, கேரட்டை தனியாகவும், பீட்ரூட்டை தனியாகவும் மாவில் கலக்கவேண்டும்.
இதில் தோசை செய்தால் பார்க்க அழகாகவும், சுவையானதாகவும் இருக்கும்.குழந்தைகள் கண்டிப்பாக இதை விரும்புவார்கள்.சுவையான தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் இதன் சுவை கூடும்.