பீட்ரூட்

Spread the love

சில காய்கறிகள் உலகம் முழுவதும் பரவியவை. அவற்றில் ஒன்று பீட்-ரூட். இந்தியாவில் இது உபயோகிக்கப்பட்டாலும், ‘பழங்காலமனிதர்கள் இதை அதிகம் விரும்புவதில்லை. வெளிநாட்டு காய்கறிஎன்பது காரணமாகலாம். இல்லை கிழங்கு வகை என்பதும் காரணமாயிருக்கலாம்.

நாலு வகை பீட்ரூட்டுகள் உள்ளன

அவை

சர்க்கரை பீட், சர்க்கரை சிவப்பு பீட் – சமையலில், சலாடுகளில் பயன்படும் காய்கறி மான்ஜல் வர்செல் – கால்நடை உணவாக, இலை பீட்.

சர்க்கரை பீட்– பெயருக்கேற்ப இது சர்க்கரை தயாரிப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது. கரும்பு பயிரிட முடியாத குளிர் பிரதேசங்களில் சர்க்கரை பீட் பயிராகிறது. 1802-ல் மார்க்க்ராஃப் என்ற ஜெர்மன் விஞ்ஞானி வெள்ளை நிற சர்க்கரை பீட்ரூடிலிருந்து 6.2% சர்க்கரையை பிரித்துக் காண்பித்தார். இப்போது முன்னேறிய முறைகளால் இந்த பீட்ரூட்டிலிருந்து 15 – 20% சர்க்கரை எடுக்கப்படுகிறது. சர்க்கரைக்காகவே, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் பயிரிடப்படுகிறது.

சர்க்கரை பீட்ரூட், நாம் சமையலில் பயன்படுத்தும் சிவப்பு பீட்ரூட்டுடன் (தாவரவியல் ரீதியாக) மிக நெருங்கிய உறவு உள்ளது – அண்ணன், தம்பி என்று சொல்லலாம். சர்க்கரை பீட் வருடமிருமுறை விளையும். வெண்ணிற, கூம்பு வடிவ சராசரி 0.90 கிலோ எடையுடன், 30.5 செ.மீ. நீளம் உள்ள வேர்களுடையது. வேர்கள் துண்டிக்கப்பட்டு நீரில் சூடாக்கப்பட்டு சர்க்கரை பிரித்தெடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன. இலைகளும், சர்க்கரை எடுத்த பின் கிடைக்கும் வேர்ப் புண்ணாக்கு மாட்டுத் தீவனமாக பயனாகிறது. சுத்திகரிக்கப்படாத சர்க்கரை பாகு எதனால்எனும் எதில் ஆல்கஹால்தயாரிப்பில் பயனாகும்.

சிவப்பு பீட்ரூட்– இது தான் நாம் சமையலில், ‘பச்சையாகவேகூட பயன்படுத்தும் தோட்டக்காய்கறி. ஒரு மாதிரியான இனிப்பு – துவர்ப்பு சுவை உடையது. மத்திய தரைக்கடல் நாடுகளில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி உபயோகத்தில் இருந்ததாக சரித்திர சான்றுகள் கூறுகின்றன.

எகிப்திய பெண்கள் இதன் சிவப்பு நிறத்திலிருந்து தயாரிக்கபட்ட சிவப்பு சாயத்தை லிப்ஸ்டிக்காகபயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் சமையல் பயன்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு தான், ஒரு ஃபிரான்ஸ் சமையல்காரர் மூலம் தெரிய வந்தது. 1558 ல் ஜெர்மனியிலும், 1758 ல் இங்கிலாந்திலும் பயிரிடப்பட்டது. பீட்ரூட் கெட்டியான வேருடையது. 2 வருடம் உயிர் வாழும் முதல் வருடம் அடுக்கு அடுக்கான இலைகள் கொண்டிருக்கும். இரண்டாம் ஆண்டில் பூ, விதை உண்டாகும்.

100 கிராம் பீட்ரூட்டில் உள்ளவை

ஈரம் – 87.7 கி, புரதம் – 1.7 கி, கொழுப்பு – 0.1 கி, தாதுப்பொருட்கள் – 0.8 கி, நார்ச்சத்து – 0.9 கி, கார்போஹைட்ரேட் – 8.8 கி, கால்சியம் – 18.3 மி.கி, பாஸ்பரஸ் – 55 மி.கி, அயச்சத்து – 1.19 மி.கி, தியாமின் – 0.04 மி.கி, ரிபோபிளேவின் – 0.09 மி.கி, நியாசின் – 0.4 மி.கி, விட்டமின் சி – 10 மி.கி, கோலின் – 242 மி.கி, தவிர மெக்னீசியம், சோடியம், செம்பு, ஸிங்க் போன்ற மூலப்பொருள்களும் பீட்ரூட்டில் சிறிதளவு உள்ளன.

பயன்கள்

இதன் வண்ணமே ரத்த நிறம் தான். இதனால் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் சோகை வியாதி நீங்கும். ரத்தத்திலிருந்து உண்டாகும் சிவப்பு அணுக்கள் அதிகமாகும்.

தினம் 1/2 கப் பீட்ரூட் ஜுஸ் + 1/2 கப் கேரட் ஜுஸ், காலையில் எடுத்துக் கொண்டால், பிணியின்றி பல நாள் நீடித்து வாழலாம். உடலின் நோய் தடுக்கும் சக்தி பலமாகும். நுரையீரல் வலுவாகும்.

மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் வாந்தி, பேதி போன்ற உணவு மண்டல கோளாறுகளுக்கு பீட்ரூட் பலன் தரும். பீட்ரூட் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் சாறு சேர்த்தால் வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பீட்ரூட், கேரட்டைப் போல் கண்பார்வைக்கு நல்லது.

பீட்ரூட் கஷாயம் தோல் நோய்களை போக்கும். தீப்புண்களின் மேல் பீட்ரூட் சாற்றை தடவலாம். தீப்புண்கள் ஆறும்.

தேன் கலந்த பீட்ரூட் சாறு அல்சருக்கு நல்லது.

பீட்ரூட் சாறு மலமிளக்கி. காரணம் அதில் உள்ள செல்லுலோஸ்.

மற்ற காய்கறிகளைப் போலவே ருசியாகவும், சுவையாகவும் பீட்ரூட்டை சமைக்கலாம். தேங்காய் சேர்ந்த கறியாக, குழம்பில் இல்லை பச்சையாகவே உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பீட்ரூட்டை சமைக்கு முன் நன்கு கழுவ வேண்டும். கிழங்கானதால் மண் வாசனை இருக்கும். தோலை நீக்கி சமைக்க வேண்டும். புதிதான பீட்ரூட் கெட்டியாக இருக்கும். தோய்க்கும் போது துணிகள் சாயம் போவது போல், பீட்ரூட்டிலும் சாயம் வெளுக்கும். மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கையில், அவையும் சிவப்பாகும். எனவே பீட்ரூட்டை தனியே வேக வைத்து கடைசியில் சேர்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்களுக்கு பீட்ரூட்டை தவிர்க்கவும்.

சிவப்பு பீட்ரூட்டிலிருந்தும் சர்க்கரை எடுக்கலாம். ஏனென்றால் சர்க்கரை பீட்ரூட்டும், சிவப்பு பீட்ரூட்டும் நெருங்கிய உறவினர்.

வீட்டிலேயே தயாரிக்கும் பீட்ரூட் ஒயின் பிரபலமானது.

ரஷ்யாவின் பிரசித்தமான சூப்பில் முக்கிய பொருள் பீட்ரூட்.

பீட்ரூட் அல்வா

தேவையான பொருட்கள்

பீட்ரூட்    – 1/2 கிலோ

சர்க்கரை  – 1/2 கிலோ

நெய்      – 200 கிராம்

ஏலப்பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை

பீட்ரூட்டை நன்கு சீவி தோலை சீவவும். பொடிப் பொடியாக நறுக்கி வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு வதக்கவும். வதக்கிய பின் ஆற வைத்து மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சர்க்கரையை போட்டு அது முழுகும் வரை நீர் ஊற்றி பாகு தயாரிக்கவும். பாகு கம்பிப் பதம் வந்ததும் அரைத்த பீட்ரூட்டையும், நெய்யையும் கொட்டி கிளறவும். வாணலியின் ஓரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் ஏலப்பொடியைப் போட்டு கிளறவும்.

அடுப்பிலிருந்து எடுத்து நெய் தடவிய தாம்பாலத்தில் போட்டு அல்வா துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

உணவு நலம் அக்டோபர் 2010

பீட்ரூட், காய்கறிகள், வெளிநாட்டு காய்கறி, சர்க்கரை பீட், சர்க்கரை சிவப்பு பீட், சமையல், மான்ஜல் வர்செல், கால்நடை உணவாக, இலை பீட், மார்க்க்ராஃப், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய நாடுகளில், எதில் ஆல்கஹால், எகிப்திய பெண்கள், 100 கிராம், பீட்ரூட்டில், உள்ளவை, ஈரம், புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்கால்சியம், பாஸ்பரஸ், அயச்சத்து, தியாமின், ரிபோபிளேவின், நியாசின், விட்டமின் சி, கோலின், மெக்னீசியம், சோடியம், செம்பு, ஸிங்க், பயன்கள், சோகை வியாதி, சிவப்பு அணுக்கள், நுரையீரல், மஞ்சள் காமாலை, வியாதிகள், வாந்தி, பேதி, உணவு மண்டல கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள், கண்பார்வை, தோல் நோய்கள், தீப்புண்கள், அல்சர், செல்லுலோஸ், நீரிழிவு நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள்,

பீட்ரூட் அல்வா, செய்முறை, பீட்ரூட், சர்க்கரை, நெய், ஏலப்பொடி,


Spread the love
error: Content is protected !!