ஆரோக்கியமான சர்மத்திற்கு தேவையான வைட்டமின்.

Spread the love

ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

வைட்டமின் H3 யின் தேவை எல்லாவித உணவு புரதங்களில் ‘ட்ரைடோஃபான்’ (Tryptophan) என்ற அமினோ அமிலம் உள்ளது. இந்த அமிலத்தின் ஒரு பகுதியிலிருந்து, நம் உடல், வைட்டமின் H 3 ஐ (நியாசினாக) உண்டாக்குகிறது. 60 மி.கி. “ட்ரைடோஃபான்” 1 மி.கி. வைட்டமின் H3 ஐ தருகிறது. மீதித் தேவையை உணவின் புரதம் தவிர இதர ஊட்டச்சத்துகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது.

தினசரி தேவை

ஆண்கள் (செய்யும் வேலையை பொருத்து) – 16 லிருந்து 21 மி.கி.

பெண்கள் – 12 லிருந்து 16 மி.கி.

கர்ப்பிணிப் பெண்கள் – 18 மி.கி.

பாலூட்டும் தாய்மார்கள் – 18 மி.கி.

வைட்டமின்  H3 உள்ள உணவுகள்

சோளம், முழுத்தானியங்கள், பருப்புகள், பயிறுகள். நிலக்கடலையில் வைட்டமின் H3 அபரிமிதமாக உள்ளது. 100 கிராம் நிலக்கடலையில் (வறுக்காதது) 19.9 மி.கிராமும் வறுத்த நிலக்கடலையில் 22.1 மி.கிராமும் உள்ளது.

பீன்ஸ், சோயா பீன்ஸ், பட்டாணி, தக்காளி, உருளைக்கிழங்கு.

கடுகு கோழி, மாடு, வான்கோழி, பன்றி, முயல் இறைச்சிகளில்

முட்டை

வைட்டமின் H3 குறைந்தால்

ஒரு காலத்தில் ஐரோப்பியாவை உலுக்கிய நோய் “பெல்லகிரா” (Pellagra) வைட்டமின்  H3 குறைவினால் ஏற்படுவது. வாய்ப்புண், தோல் நோய்கள், வயிற்றுப்போக்கு, டிமென்ஷியா எனும் மன குறைபாடுகள் பெல்லக்ராவின் அறிகுறிகள் – தற்போது பெல்லக்ரா ஏற்படுவது மிகவும் குறைவு. இதில் அதிசயம் என்னவென்றால் சோளம் (ஜோவார், Sorghum Vulgare) மற்றும் மக்காச்சோளம் (Maize (Zea Mays) – இவற்றை முக்கிய உணவாக உண்ணும் தேசங்களில் பெல்லக்ரா தோன்றுகிறது. தென்னிந்தியாவில் சோளத்தை அதிகம் உண்ணும் ஏழை மக்களிடையே பெல்லக்ரா காணப்படுகிறது.

காரணம் சோளத்தை நேரடியாக சமைத்து சாப்பிட்டால் அதில் நிறைந்து உள்ள ‘நியாசின்’ உடலில் சேராது. அதனால் வைட்டமின் பி 3 யின் குறைவு ஏற்பட்டு ‘பெல்லக்ரா’ ஏற்படும். எலுமிச்சைப்பழ சாற்றில் ஊற வைத்தால் அதில் உள்ள நியாசின் (வைட்டமின் H3) வெளிபட்டு ஜீரணமாகி உடலில் கிரகிக்கப்படுகிறது.

மத்திய நரம்பு மண்டல பாதிப்புகள் உண்டாகலாம். மன அழுத்தம், சோர்வு, உற்சாகமின்மை, சித்தப்பிரமை ஏற்படலாம். ஜீரண மண்டல பாதிப்புகள், வாய்ப்புண்கள், வாய்துர்நாற்றம் ஏற்படலாம். எடை குறைவு, தூக்கமின்மை, பலவீனம்.

வைட்டமின் H3 அதிகமானால்

கல்லீரல் பாதிக்கப்படலாம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகலாம். வயிற்று வலி, தோல் சிவந்து அரிப்பு ஏற்படலாம்.

எதனால் வைட்டமின் H3 இழப்பு ஏற்படுகிறது?

இந்த வைட்டமின் உள்ள உணவுப் பொருட்களை அதிக நேரம் கொதிக்க வைத்து சமைத்தால், நியாசின் அழிந்து விடும்.

மாதமொரு விட்டமின் வைட்டமின் H5 (Pantothenic Acid) நீரில் கரையும் வைட்டமின்களான ‘H’  குடும்பத்தை சேர்ந்தது வைட்டமின் H -5 Calcium Pantho thenate  என்றும் சொல்லப்படுகிறது.

பயன்கள்

பாக்டீரியாவை அழிப்பதற்கென ரத்தத்தில் ஏற்கனவே உள்ள பொருளான Anti – bodies களை தொகுத்து கூட்டுப்பொருள்களாக செய்யும்.

நரம்பு மண்டலம், நார்மல் ஜீரணம் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்களுக்கு உதவும்.

கார்போ – ஹைடிரேட், புரதம், கொழுப்பு சத்துக்கள் ஜீரணமாக உதவுகிறது.

உடல் வளர்ச்சியை உண்டாக்கும்.

முக்கியமாக மன அழுத்தம், மனத்தளர்ச்சிகளை போக்கும். அட்ரீனல் சுரப்பிகளை தூண்டி விடுவதால் மன அழுத்தத்தை குறைக்கிறது.

உடலின் ஆற்றலை, தெம்பை அதிகரிக்கும்.

காயங்கள் குணமாக உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

சரும அலர்ஜிகளை போக்க உதவுகிறது.

இருக்கும் உணவுகள்

முழுக்கோதுமை, பருப்புகள், இதர தானியங்கள், வேர்கடலை, பால், பால் சார்ந்த பொருட்கள், வெண்ணெய், சீஸ், காய்கறிகள், பட்டாணி, பீன்ஸ், சூர்யகாந்தி விதைகள், பரங்கிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஆரஞ்ச், வாழைப்பழம், சிக்கன், மாட்டிறைச்சி, மீன், லிவர் முதலியன.

தினசரி தேவை

ஆண்கள் – 10 மி.கி., பெண்கள் – 5 மி.கி., கர்ப்பிணிகள் – 5 மி.கி., பாலூட்டும் பெண்மணிகள் – 5 மி.கி.

12 வயதுக்கு குறைந்த சிறுவர், சிறுமிகளுக்கு வைட்டமின் H5 மருந்தாக கொடுக்க வேண்டாம்.

குறைந்தால் வரும் பாதிப்புகள்

களைப்பு, தலைவலி, தூக்கமின்மை, மனஅழுத்தம், பசியின்மை, தலைவலி, நரம்புத்தளர்ச்சி, காலில் எரிவது போன்ற உணர்ச்சி, அஜீரணம், வளர்ச்சிக்குறைவு முதலியன.

எதனால் வைட்டமின் H5 இழப்பு ஏற்படுகிறது

சமைக்கும் போது உணவை சூடாக்கினால் வைட்டமின் H5 அழிகிறது. பச்சை காய்கறிகளை உண்பது நல்லது. உணவை பல நாள் கெடாமல் வைக்கும் ரசாயன பொருட்களான Preservatives களாலும் அழிந்து விடும். எனவே “டின்களில்” அடைத்து விற்கப்படும் உணவுப்பொருட்களில் வைட்டமின் H5 குறைவாக இருக்கும்.


Spread the love
error: Content is protected !!