ஆண்களுக்கான ஐந்து அழகு குறிப்புகள்

Spread the love

சரும பாதுகாப்புக்கு பெண்கள் எடுத்துக்கிற அளவுக்கு கவனம், ஆண்கள் தங்களோட சருமப்பாதுகாப்புல எடுத்துக்கிறது இல்லீங்க. இப்போ இருக்கிற ஆண்கள் சருமப்பாதுகாப்பு கொஞ்சம் கொஞ்சமாக கவனம் செலுத்த ஆரம்பிருச்சிருக்காங்க. ஆண்கள் தங்களோட சருமத்த பாதுகாக்கிற என்னென்ன மாதிரியான விஷயங்களை பாலோ பண்ணனும், பார்க்கலாம் வாங்க

ஆண்களோட முகத்துல இருக்கிற தேவையற்ற முடிகளை, ஷேவ் செஞ்சு நீக்கிடணும். இதுமட்டுமில்லாம, சருமத்தில இறந்த நிலையில இருக்கிற செல்களை க்ரீம்களை போடறது அல்லது வேறு ஏதாவது பியூட்டி டிப்ஸக் கொண்டு நீக்கிட விடுறது நல்லது.

ஆண்கள் ரொம்ப நேரமாக வெயில்ல அலையறதை குறைச்சுக்கிட்டாலே, சருமம் சம்பந்தமான பல பிரச்னைகள் முடிவுக்கு வந்திடும்ங்க.அப்படி வெயில்ல அலையறதை குறைச்சுக்க முடியலைன்னா, பெண்கள் யூஸ் பண்ற மாதிரி, சன் ஸ்கிரீன் கிரீம் அல்லது லோஷனை சருமத்துல பூசிக்கோங்க.

ஆண்களோட சருமப்பாதுகாப்புக்கு சோப்பு மட்டுமே போதும்ங்க. ஆனா, பல ஆண்கள், குளிக்கும் போது, சோப்பு கூட போடறதில்லீங்க. குளிக்கும்போதும் சரி, வேலை விஷயமா வெளியில போயிட்டு வந்தாக்க, முகத்த சோப்பு போட்டு கழுவுங்க.

சருமத்துல கான்சன்ரேஷன் பண்ற ஆண்கள்,ஆரஞ்சு எலுமிச்சம்பழம், சாத்துக்குடி போன்ற, வைட்டமின் சி சத்து அதிகமா இருக்கிற,  பழங்களை சாப்பிட்டு வந்தாலே போதுங்க.


Spread the love