சில எளிய வழிகள்
மென்மையான ஷாம்பூ ஒன்றினைப் பயன்படுத்தி அடிக்கடி கூந்தலை சுத்தம் செய்யுங்கள். இதற்கு பேபி ஷாம்பு உகந்தது.
இயலுமானால் வெது வெதுப்பான நீரைப் பயன்படுத்தி கூந்தலைக் கழுவுங்கள். மிகவும் சூடான நீர் வேண்டாம்.
ஆழ்ந்த கண்டிஷனர் ஒன்றை கூந்தலின் நுனிகளில் பயன்படுத்துங்கள்.
நான்கைந்து வாரத்திற்கு ஒரு முறை பிளந்த கூந்தல் நுனிகளைத் கத்திரித்து விடுங்கள்.
தேவையான அளவு புரொட்டின் நிறைந்த உணவுகளையும், கீரை மற்றும் பச்சைக் காய்கறிகளை உண்ணுங்கள்.
தேவையற்ற கெமிக்கல்கள் மற்றும் ஹேர் டைகளைப் பயன்படுத்தாதீர்கள். ஹேர் டிரையரைப் பயன்படுத்தாதீர்கள்.
மழையில் நனைந்து கூந்தல் ஈரமாகி விட்டால் உடனே கூந்தலைக் கழுவித் துடைத்து விடுங்கள். சில நேரங்களில் சுற்றுப்புறத்திலுள்ள மாசுகளால் மழைநீர் அமிலம் கொண்டதாக மாறக் கூடும்.
பூஞ்சையைத் தடுக்கக் கூடிய ஷாம்பூவை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தவும்.
நீச்சலுக்குச் சென்றால் ஹெட் கேப் அணிந்து கொள்ளுங்கள். சிலிகான் கலந்த கிரீம் தடவிக் கொள்ளுங்கள்.
ஆல்கஹால், பார்மல்டிஹைட் கொண்ட கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.