ஏழே நாளில் உங்க முகம் பளிச்சிட இதை சாப்பிடுங்க…

Spread the love

பழங்காலத்தில் இருக்கும் ஊட்டசத்துக்கள், உடலை ஆரோக்கியமாக வைப்பதோடு, தோலையும் பளபளப்பாக்கும்.. அதனால் தோலின் பதுகாப்பிற்க்கு சில உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது…

இயற்கையாகவே முகத்தை மிளிர செய்யக்கூடிய ஆற்றல் எலுமிச்சை பழத்திற்கு இருக்கின்றது.. இதில் இருக்கும் உயர்வகை வைட்டமின் ஏ, உடலிற்கு ஆன்டி ஆக்சிடண்டா செயல்பட்டு, தோலில் இருக்கும் நச்சுக்கிருமிகளை அழித்து, சருமத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு, அழகாகவும் வைக்கின்றது…   தினமும் ஓரு தம்ளர் நீரில்  பாதி எலுமிச்சையை எடுத்து சாறு பிழிஞ்சி, அதில் ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனை கலந்து காலையில் குடித்து வரவும். தோலில் எந்த நச்சுக் கிருமிகளும் நெருங்காது… முகத்தில் கருவளையம் இருந்தால், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் பசும்பால் இரண்டையும் கலந்து கண்களுக்கு கீழே தடவி பத்து நிமிடம் கழித்து கழுவினால் கருவளையம் மறைந்துவிடும்..

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ பி மற்றும் சி அதோடு  பண்டோதேனிக் ஆசிட் மற்றும் காப்பர், பொட்டாசியம் போன்ற மினரல்ஸ் நிறைந்திருக்கின்றது… பப்பாளியில் இருக்க கூடிய ஆன்டிபாக்டீரியா தோலை பாதுகாக்கின்றது.. பப்பாளி  மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.. இந்த பிரச்சனை தோலிற்க்கு போக வேண்டிய ஊட்டச்சத்தையும் தடைசெய்கிறது. தோல்  தன்னுடைய வலிமையை இழக்கும் போது அரிப்பு, தோல் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.. இதற்கு தினமும் ஒரு கிண்ணம் அளவு போதுமான பப்பாளியை சாப்பிட்டு வருவது நல்லது…  அல்லது பப்பாளி பழ துண்டுகளோடு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கொஞ்சம் உப்பு சேர்த்து ஜூஸ் செய்து குடித்து வரலாம்.

எலுமிச்சையை அடுத்து ஆரஞ்சு பழத்தில் தோலிற்கு பாதுகாப்பு தரக்கூடிய வைட்டமின் சி அதிகமாகவே நிறைந்திருக்கின்றது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட், உடலில் ஆக்சிஜனேற்றத்தை சீராக்கும்… ஆக்சிஜன் தடைபடும் போது அது நமது முகத்தில் ஏற்படும் மாற்றத்தால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.. தோல் ஆரோக்கியத்திற்கு ஆக்சிஜன் மிகவும் அவசியம்..  இதனால் முக சுருக்கம், வறண்ட சருமம், பின், ஒரு அனீமியா நோயாளிக்கு இருக்கக் கூடிய மொத்த அறிகுறிகளும் வெளிப்படும்.. அதற்கு தினமும் ஆரஞ்சு பழத்தை,  பழமாகவோ அல்லது ஜூஸ் ஆகவோ குடித்து வருவது உடல் மற்றும் தோலிற்கு நல்லது…

அதற்கான காலம் முடிந்தாலும் அதிக கடைகளில் தர்பூசணி கிடைக்கும்… வெப்பத்தால் ஏற்படும் சரும பாதிப்பிற்காகவே இயற்கை நமக்கு கொடுத்திருக்க வரப்பிரசாதம் தான் தர்பூசணி.. குறிப்பாக எண்ணெய் பசை சருமத்திற்கு நல்ல தீர்வு தர்பூசணியில் இருக்கின்றது.. இதில் இருக்கும் வைட்டமின் C, A, B1, மற்றும் B6,  கரோட்டினாய்டு, பிளேவனாய்டுஸ், நச்சுக்கிருமிகளில் இருந்தும், சரும பாதிப்பில் இருந்தும் தோலை வலிமையாக வைக்க உதவுகின்றது… காலை, மாலை தர்பூசணியை உங்களுக்கு பிடித்த வகையில் சாப்பிட்டு வரலாம்.


Spread the love