அழகு மெருகேற மாம்பழம்

Spread the love

குளிர் மண்டல நாடுகளில் ஆப்பிள் பழத்திற்கு கிடைத்திருக்கும் மதிப்புகள் போல் வெப்ப மண்டலத்தின் ஆப்பிள் என்று மாம்பழத்தை அழைக்கிறார்கள். முற்றாத காயில் இருந்து கனி வரை பல்வேறு வகைகளில் இது பயன்படுவதால் கனிகளின் மன்னன் என அழைக்கிறார்கள். மகாத்மா காந்தியடிகள் “நான் சாப்பிட்ட பழங்களில் மிகவும் ருசியானது மாம்பழம் தான் என்று கூறியிருக்கிறார். தமிழிலக்கியத்தில் முக்கனியின் முதல் கனியாக மாம்பழத்தின் சிறப்பை எடுத்துக் காட்டியுள்ளனர்.

மாம்பழத்தில் நீரும், மாவுப் பொருளும் அதிகம் காணப்பட்டாலும், புரதம், கொழுப்பைத் தவிர்த்த மற்ற பொருட்கள் இதன் மதிப்பை உயர்த்தக் காரணமாக இருக்கின்றன. இதில் சர்க்கரைச் சத்து 11.5 முதல் 25 சதவீதம் வரை உள்ளது. சராசரி 16.9 சதவீதம் ஆகும். மாம்பழத்தில் வைட்டமின் ஏ (கெரட்டின்) மிகுதியாக அமைந்துள்ளது. ஆராய்ச்சி செய்யப்பட்ட நுலீற்றுக்கணக்கான பழ வகைகளில் மாம்பழத்திலேயே இச்சத்து மிகுதியாக உள்ளது. (2743 அலகுகள்) கெரட்டின் மஞ்சள் நிறமுடையது. இந்நிறம் காய்பழுக்கும் போது கிடைக்கும். நன்கு கனிந்த பழத்தில் உச்ச அளவில் இருக்கும். இச்சத்து சளியையும், இன்புளுயெ;னசாவையும் தடுக்க உதவும். இச்சத்துக் குறைவால் குடல், ஈரல் சம்பந்தமான நோய்கள், குடலில் கல் போன்ற நோய்கள், பார்வைக் குறைவு ஏற்படுகின்றன. இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை, சிரோப்கால்மியா நோய்களும் ஏற்படுகின்றன. தோல் நோய்கள், கபவாத சுரம், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுகின்றன.

வைட்டமின் சி யானது, வாழைப்பழம், திராட்சை, சப்போட்டா, பிளம், ஆப்பிள் பழங்களில்; காணப்படுவதை விட அதிகம் உள்ளது. வைட்டமின் சத்துக் குறைவினால் சோகை, தளர்ச்சி, மூட்டு பலகீனம், செரி, சிரங்கு, தலைவலி, சோர்வு ஏற்படும். தொடர்ந்து வேலை செய்ய ஊக்கம் இல்லாத நிலை தோன்றும்.

இச்சத்து வெப்பம், வெயிலினால் பாதிக்கப்படுவதால் இப்பழக்கங்களைப் பக்குவப்படுத்த காற்றிலிருந்து தள்ளி வைப்பது நல்லது. அறை வெப்ப நிலையில் 6 நாட்கள் மாம்பழத்தை வைத்திருந்தால், 10 சதவீதம் அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின் சி) குறைந்து விடும். சூரிய ஒளியில் காய வைத்தாலும் குறைந்து விடும். ஆனால், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட்டை இட்டு நீரை எடுத்து விட்டால், ஒரு ஆண்டு சென்றாலும் 38 சதவிகித அஸ்காபிக் அமிலம் தங்கியிருக்கும். தையமின், இச்சத்து குறைவாக இருப்பின் பெரி பெரி நோய் ஏற்படும். பசி இன்மை, கால்களும் கைகளும் தள்ளாடுதல், மூச்சு விடக் கஷ;டம் போன்றவை இந்நோயின்  அறிகுறிகளாகும். இதயத் தசைகளில் பலவீனம் ஏற்பட்டு இதயம் நின்று விடலாம். உடலில் சர்க்கரைப் பொருட்களை போதியபடி பயன்படுத்த இச்சத்து அவசியம்.

தையமின் சத்து பலா, வாழை, நெல்லி, கொய்யா, சப்போட்டா, திராட்சை, பப்பாளி, பிளம்ஸ், மாதுளை போன்ற பழங்களில் காணப்படும் அளவை விட மாம்பழத்தில் அதிகம் உள்ளது. வளர்சிதை மாற்றங்களுக்கு துணை புரியும் நியாசின் (நிகோட்டினிக் அமிலம்) நெல்லி, வாழை, முந்திரி, நீல திராட்சை, கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சுச் சாறு, பீச், அன்னாசி, மாதுளை, சப்போட்டா போன்ற பழவகைகளை விட மிகுதியாக உள்ளது. இவ்வைட்டமின் குறைவால் பெல்லகிரா என்னும் நோய் உண்டாகும். நாக்கில் புண் சொர சொரப்பான தோல், வயிற்றுப் போக்கு முதலியன இவ்வியாதிகளின் அறிகுறிகளாகும்.

மாங்கொட்டை

கொட்டையில் உள்ள பருப்பால் மூலச்சூடு, உதிரக்கடுப்பு, சீதபேதி போன்றவை குணமாகும். உட்பருப்பை எடுத்து உலர்த்தி துலீள் செய்து தேனில் குழைத்து, ஒரு வாரம் தொடர்ந்து தினசரி காலையில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர மாதவிலக்குத் காலத்தில் அதிகமாக இரத்தம் போவது நிற்கும்.

இதன் பருப்பைத் துண்டு துண்டாக நறுக்கி, நெய்விட்டு வறுத்து, வதக்கி, அரைத்து. மிதமாகக் காரமிட்ட புளிக்குழம்பில் கூட்டிப் பாகப்பழப் பக்குவப்படுத்தி அன்னத்துடன் கலந்து சாப்பிட பேதி நிற்கும். மாங்கொட்டைப் பருப்பை அரைத்து தயிரில் கலக்கிச் சாப்பிட மூலச்சூடு, உஷ்ண வாயுவால் உண்டான பேதி போன்றவை போகும்.

மாங்கொட்டைப் பருப்பை சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வேளைக்கு 1, 2 கிராம் எடை மோரில் கலக்கிச் சாப்பிட திமிர் பூச்சிகள் அழியும். இரத்த மூலம், பெரும்பாடு, பேதி போன்றவை நீங்கும்.

மாவிலை

எரிக்கப்பட்ட மாவிலைகளின் சாம்பல், கட்டிகள், கொப்புளங்களுக்கு மருந்தாக நாட்டு வைத்தியத்தில் பயன்படுகிறது. மாவிலையை எரித்து வரும் புகை தொண்டைக்கட்டு, தும்மல், கரகரப்பு நீக்குவதோடு, விக்கலையும் நிறுத்துகிறது. இலையைச் சுட்டு, சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து தீப்புண்களு;கும், உராய்ப்பு முதலிய வெந்த புண்களக்கும் இடலாம்.

உலர்ந்து பொடி செய்ய்ப்பட்ட மாம்பூவின் புகையினால் கொசுத் தொல்லை தீரும். மாம்பூவிலிருந்து ஒரு வித மணமுள்ள அத்தர் தயாரிக்கப்படுகிறது. மாம்பூவை உலர்த்திக் கஷலீயம் செய்து அருந்த சீதபேதி, வயிற்றுப் போக்கு குணமாகும்.


Spread the love