ஒப்பனை செய்வோர்க்குச் சில யோசனைகள்

Spread the love

முகத்துக்கு சோப் பயன்படுத்துவதற்குப் பதில், ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது. இன்றைக்கு ஹாஸ்டல், கல்லூரி, பணியிடங்களில் பெண்கள் ஒருவர் வைத்திருக்கும் மேக்கப் பொருட்களை மற்றவர்களும் பயன்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. இதனால் கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். அலர்ஜி, முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, ஒருவர் பயன்படுத்தும் மேக்கப் சாதனங்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

மேக்கப் சாதனங்களை எளிதில் காற்று நுழையாத பாக்ஸ்களில் வைக்க வேண்டும். இதனால் நுண்ணுயிரிகள் புகுவது மற்றும் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

அழகான சருமம் கிடைக்க காலை மற்றும் இரவு நேரத்தில் சருமத்தைச் சுத்தப்படுத்துவது மிகவும் அவசியம். உங்கள் தோலுக்கு ஏற்ற பிரத்யேக கிளீனிங் முறைகளைச் சருமப் பராமரிப்பு நிபுணர்களிடம் கேட்டு செய்யலாம்.

எந்த ஒரு புதிய அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதாக இருந்தாலும், கையில் சிறிய அளவில் தடவி சோதனைசெய்து பார்ப்பது நல்லது. அலர்ஜி பிரச்சனை இல்லை என்பதை இரண்டொரு நாளில் உறுதி செய்த பிறகே, முகத்தில் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.      


Spread the love