முகமும் தோலும் பளபளப்பாக ஐஸ் கட்டி பயன்படுத்தலாம். ஐஸ் கட்டி பயன்படுத்தி தோலையும், முகத்தையும் வெண்மையாக்க முடியும். அது எப்படி என்பது பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
உடனே முகத்தை பளபளப்பாக வைக்க வேண்டுமா? அப்போது ஒரு ஐஸ் கட்டி எடுத்து முகத்தில் circular motion நன்கு தேய்க்கவும். உங்க முகத்தில் உடனடி பலன் கிடைக்கும்.
நம் முகத்தை எவ்வளவு தான் அழகுபடுத்தினாலும் அடிக்கும் வெயிலுக்கு நம் முகத்தில் உள்ள makeup அனைத்தும் காணாமல் போய்விடுகிறது. உங்கள் makeup அழியாமல் இருக்க வேண்டுமா? அப்போது ஒப்பனை (makeup) செய்வதற்கு முன் முகத்தில் ஐஸ் கட்டி வைத்து தேய்த்து அதற்கு பின் ஒப்பனை (makeup) செய்யவும்.
முகத்தில் ஐஸ் கட்டி வைப்பதனால் இரத்த ஓட்டம் நன்கு இருக்கும், அதனால் மாசற்ற சருமத்தை பெறலாம். முகமும் பளபளக்கும்.
ஐஸ் கட்டி வைக்கும் போது, அவை நம்முடைய சரும துவாரங்கள் வரை செல்கின்றது. அதனால் கரும்புள்ளிகள் மற்றும் முகபருக்களை நீங்குவதற்கும் இந்த ஐஸ் கட்டி பயன்படுகிறது.
உங்கள் சருமம் எண்ணெய் பசை உள்ளது என்றால், நீங்கள் நிச்சயமாக இதை தினமும் செய்து வந்தால், நல்ல பலனை காணலாம். இதனால் எண்ணெய் பசை குறைகிறது. மிகவும் பளபளப்பான, மெல்லிய அழகான சருமத்தை நிச்சயம் பெறலாம்.
உலர்ந்த சருமம் அதிகமானோரின் பிரச்சனையாக உள்ளது. அதிலும் பனிக்காலம் வந்துவிட்டால் சருமத்தில் அரிப்பு மற்றும் சருமம் உலர்ந்து போய்விடும். இதற்காக நாம் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். அழகு நிலையத்திற்கு போகாமல் எளிதில் வீட்டிலேயே சரிசெய்யக்கூடிய குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.
பால் க்ரீம் மற்றும் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் பால் க்ரீம் உடன், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் போட்டு 15 நிமிடம் ஊற விட்டு பின் சூடான நீரில் கழுவவும். இது ஒரு சிறந்த சரும மாய்ஸ்சரைசர். இதை செய்து வந்தால் அழகு நிலையத்தில் கிடைக்கும் பலனை விட நல்ல மாற்றத்தை காணலாம்.
பாதாம் எண்ணெய் மற்றும் பால், சருமம் உலர்ந்து போகாமல் இருக்க ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 2 டேபிள் ஸ்பூன் காய்க்காத பால் சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற விட்டு சூடான நீரில் கழுவவும்.
ரோஸ் வாட்டர் மற்றும் ஸ்ட்ராபெரி, 2 டேபிள் ஸ்பூன் நொறுக்கப்பட்ட ஸ்ட்ராபெரியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து உங்கள் முகத்தில் தேய்த்து 2௦ நிமிடம் உறவிட்டு கழுவவும். பின் உங்கள் முகம் தானாக ஜொலிக்க ஆரம்பிக்கும்.
கொக்கோ வெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் கொக்கோ வெண்ணெயுடன், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், இஞ்சி பேஸ்ட் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் உறவிட்டு கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகம் மென்மையாவதை காணலாம்.