அழகு டிப்ஸ்

Spread the love

சில துளிகள் பாதாம் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு இரண்டையும் கலந்து முகத்தில் மென்மையாகத் தடவிக் கொள்ளுங்கள். பதினைந்து நிமிடம் கழித்துக் குளித்தால் முகச் சருமம் பட்டுப்போல மென்மையாக இருக்கும்.

·     கொஞ்சம் பாலை எடுத்து அதில் எலுமிச்சைச் சாற்றைச் சில துளிகள் பிழிந்து கலந்து முகம் பாதங்கள், கைகள், கழுத்து முதலிய இடங்களில் தடவிக் கொண்டு பதினைந்து நிமிடங்கள் கழித்துக் குளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் சருமம் ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் எடுப்பாகவும் இருக்கும்.

·     தினமும் தூங்கப் போவதற்கு முன்பு தேயிலை தண்ணீர் கொண்டு கண்களைச் சுற்றி கழுவி வந்தால் சுருக்கம், கறுப்பு வளையம் நீங்கி பளபளப்பு உண்டாகும்.

·     பாதாம் பருப்புகளை தோலுரித்து நன்றாக அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவையும் சில சொட்டு எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து முகத்தில் தடவி ஊறிய பின் முகத்தை அலம்பினால் முகத்திலுள்ள கரும்புள்ளி, செம்புள்ளி மறைந்துவிடும்.

·     வெள்ளரிக்காயைத் துருவி சாறுபிழிந்து எண்ணெய் பசை, நார்மல் சருமம் உள்ளவர்கள் தடவி வந்தால் சருமத்தில் இருக்கும் நுண்ணிய துவாரங்கள் சுத்தமாகும்.

·     பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊற வைத்து காலையில் நன்றாக அரைத்து தேய்த்து வர, முகம் சிவப்பழகு கிடைத்துவிடும்.

·     நல்ல சந்தனத்தில் ஜாதிக்காயைப் போட்டு அரைத்து முகத்தில் தடவி வந்தால் பருக்கள் மறைந்து முகம் பளபளக்கும்.


Spread the love