எலும்புகள் வலுப்பெற
பச்சை அவரையில் உள்ள விட்டமின் கே எலும்புகளைப் பலப்படுத்துகிறது. மேலும் இதில் காணப்படும் கால்சியம் எலும்பு முறிவு, ஆஸ்டியோஃபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு நோய்களுக்கு தீர்வு அளிக்கிறது.
இதில் காணப்படும் சிலிக்கான் எலும்பு மறுவளர்ச்சி உள்ளிட்ட ஒட்டுமொத்த எலும்புகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகிறது.
செரிமானம் சீராக
பச்சை அவரையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் நார்ச்சத்து பாதுகாக்கிறது.
கண்களைப் பாதுகாக்க
பச்சை அவரையில் காணப்படும், ப்ளவனாய்டுகள் கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கண்தசை அழற்சி நோயானது கண்ணில் பார்வைக் குறைபாட்டினை உண்டாக்கி கண் செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும்.
கர்ப்பிணிகக்கு
பச்சை அவரையில் ஃபோலேட்டுகள் அதிகளவு உள்ளன. இந்த ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடின்றி ஆரோக்கியமாக பிறக்க உதவுகிறது.
ஆதலால் கர்ப்பிணிகள், குழந்தைப்பேறினை எதிர்நோக்கி இருப்பவர்கள் பச்சை அவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை
பச்சை அவரையை வாங்கும் போது ஒரே சீரான நிறத்துடன் வெட்டுக்காயங்கள் இன்றி கனமானதாகவும், இளமையானதாகவும் இருப்பதை வாங்க வேண்டும்.
பச்சை அவரையை பொரியலாகவும், குழம்பாகவும், சூப்பாகவும் வைத்து பயன்படுத்தப்படுகிறது. சாலட்டுகள், புலாவ் உணவுகள் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.