துளசிச் செடி இல்லாத இந்திய வீடுகள் இல்லை எனலாம். புனிதமான செடி என்று அழைக்கப்படும் ‘துளசி’, சிறப்பான மருத்துவ குணங்களுக்கும் மற்றும் ‘புனிதத்தின் அடையாளமாகவும்’ பிரசித்தி பெற்றுள்ளது. இந்த புனிதமான செடியானது தினந்தோறும் காலையும், மாலையும் வணங்கப்படுகிறது / பூஜிக்கப்படுகிறது.
அனைத்து இந்துக்களின் வீடுகளிலும் இந்தச் செடியினை சிறுதூணின் நடுவில் வைத்து, ஓர் ‘மாடம் அமைத்து அதில் ‘எண்ணெய் விளக்கு’ ஏற்றப்பட்டு வழிபடப்படும். இல்லத்தரசிகள் இந்தச் செடியினை வழிபட்ட பின்னரே, தம் நாளினை துவங்குவர். விஷ்ணுவின் அன்பிற்கு பாத்திரமானதாக துளசி கருதப்படுகிறது. துளசியானது செல்வத்தின் கடவுளும், விஷ்ணுவின் மனைவியான லெஷ்மியின் உருவமாக வழிபடப்படுகிறது. இது கோவிலைச்சுற்றிலும் நடப்படுகின்றது. துளசி மாலைகள் விஷ்ணுவை அலங்கரிக்கவும், அதன் இலைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவில்களில் வழங்கப்படும் “தீர்த்தம்” (புனித நீர்) துளசி இலைகள் இன்றி இருப்பதில்லை. விஷ்ணுவின் அன்பிற்கு பாத்திரமானதால் இது சில சமயங்களில் “ஹரிப்பிரியா” என்றழைக்கப்படுகிறது.
மக்கள் இந்தச் செடியானது தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கிறது எனவும் நம்புகின்றனர். இதன் தெய்வீக குணம் ஓருபுறமிருக்க, துளசி அற்புதமான மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இது பல்வேறு வியாதிகளுக்கு தீர்வாக உள்ளது. துளசிச் செடியின் வேர் முதல் இலை வரை உள்ள அனைத்து பாகங்களும் ஆரோக்கியம் தரும் நற்குணங்களைப் பெற்றுள்ளது.
துளசியின் குணங்கள்
துளசி கிளைகளுடைய, நிமிர்ந்து வளரக் கூடிய, வாசனைமிக்க மூலிகையாகும். இது பொதுவாக சுமார் 75 முதல் 90 செ.மீ. வரை வளரும். இதன் தாவரவியல் பெயர் “ஓசிமம் சேங்க்டம்” (ளிநீவீனீuனீ ஷிணீஸீநீtuனீ) ஆகும். இதன் இலைகள் ஓரளவு வட்டமாகவும் மற்றும் 5 செ.மீ. நீளமுடையதாகவும் இருக்கும். இதன் இலைகள் மருத்துவ குணங்களுடைய மஞ்சள் நிற எண்ணெயைக் கொண்டுள்ளன. துளசி, சளியை வெளியேற்றவும், தாதுக்கள் அதிகமாக சேராமலும் செயல்படுகிறது.
துளசியின் வகைகள்
இது இரு வகைகளை உடையது. வெள்ளை மற்றும் கருநீல நிறமாக வகைப்படுத்தப்படுகின்றன. வெண்மை நிற வகை துளசியை, வன்துளசி (ளி. ணீனீமீக்ஷீவீநீணீஸீணீனீ றீவீஸீஸீ) என்கிறோம். இது பச்சை நிற இலைகளையும் வெள்ளை நிற பூக்களையும் உடையது. கருமை நிற வகையினை ‘கிருஷ்ண துளசி’ (ளி. ஷிணீஸீநீtuனீ றீவீஸீஸீ) என்கிறோம். இது கருநீல நிறத்தில் தண்டு, இலைகள் மற்றும் பூக்களையும் உடையது. இதில் மூன்றாவது வகையான சப்ஜா (அ) பார்பரி துளசி, (ளி. ஙிணீக்ஷீவீtமீமீuனீ றீவீஸீஸீ) இனிக்கும் சுவை உடையதும் உண்டு. இந்த வகையான துளசி மேற்கண்ட இரு வகைகளை விட சிறியதாகும். இது கருநீல நிற இலைகளையும் சிவந்த நிறம் கொண்ட பூக்களையும் கொண்டது. நான்காம் வகையான கற்பூர துளசி (ளி. ரிவீறீனீணீஸீபீ sநீலீணீக்ஷீவீநீuனீ ரீuமீக்ஷீளீமீ) பச்சை நிற இலைகளையும் கற்பூரத்தின் வாசனை உடையதாக இருக்கும். இந்த அனைத்து வகைகளும் இந்தியாவிலேயே உள்ளன. இவையனைத்தும் ஒத்த மருத்துவ குணங்களை உடையதாய் உள்ளன.
மருத்துவ குணங்கள்
சளியைக் குறைக்கவும்
கிருமி நாசினியாகவும்
இரத்த சுத்திகரிப்பானாகவும்
பசித்தூண்டுதலுக்கும்
காளான் கொல்லியாகவும்
இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் துளசி எண்ணெயில் யூனொல், யூகெனால் மெதில் ஈதர் மற்றும் கார்வக்ரால் உள்ளது. இந்த எண்ணெயானது, கிருமிநாசினி மற்றும் பூச்சிக்கொல்லியாக பயன்படும் மருத்துவ குணமுடையது. தென்னாப்பிரிக்காவில் துளசிச் செடிகளை பயிரிட்ட போது, கொசுக்களால் பரவும் மலேரியாவின் அபாயம் வெகுவாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
துளசி இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாறுடன் ஏலக்காய் கொதிக்க வைத்து, ஒரு நாளைக்கு 3 வேளை கொடுத்து வர காய்ச்சல் குணமாகும்.
துளசியின் வேர்களை (10 கிராம்), 250 மி.லி தண்ணீருடன் சமபங்கு ‘விஷ்ணு க்ராண்தி’ (ணிஸ்ஷீறீஸ்uறீus sவீஸீஷீவீபீமீsறீ) மற்றும் துளசி இலைகளை சேர்த்து காய்ச்சி 50 மி.லி. சாறாக்கி வடிகட்டிய பின்னர் ஒரு நாளுக்கு இரு வேளையென 2-3 நாட்கள் குடித்து வர கடுங்காய்ச்சலும் குணமாகும்.
ஆயுர்வேதத்தில் துளசி அனைத்து வகை காய்ச்சலைப் போக்கவும் பயன்படுகிறது.
துளசி இலைகளுடன் கிராம்பு, இஞ்சி மற்றும் சமையல் உப்பு (அ) சிறிது தேன் கலந்து பருக சளி, மூக்கடைப்பு, ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
துளசி இலைகளை மென்று வந்தாலோ அல்லது சூடான சாறினை ஒரு நாளுக்கு 2-3 முறைகள் கொப்பளித்து வந்தாலோ வாய்ப்புண் எளிதாக குணமாகும்.
10 மி.லி. துளசிச்சாறுடன், இஞ்சிசாறு மற்றும் தேன் கலந்து பருகி வர வாந்தி நிற்கும்.
துளசி விதைகளை பொடி செய்து 10 துளிகள் இஞ்சி சாறுவிட்டு தினசரி இரு வேளை என 2 நாட்கள் குடித்து வந்தால் வயிற்று வலி (ணீநீவீபீவீtஹ்) குணமாகும்.
துளசி இலைகள் ஊற வைத்த நீரினை குழந்தைகளுக்குக் கொடுத்து வர வாய்வுத் தொல்லை நீங்கும்.
துளசி இலை சாறு தொடர் இருமல், சளி, சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கினை குணப்படுத்த வீட்டிலே எளிதில் கிடைக்கப்பெறும் மருந்தாகும்.
குழந்தைகளுக்கு தோன்றுகின்ற கிருமித் தொற்று மற்றும் மூச்சிரைப்பிற்கு துளசி அருபெறும் மருந்தாகும்.
மோருடன் துளசி இலைகள் கலந்து குடித்து வந்தால் உடற்பருமனை குறைத்து கட்டுக்குள் வைக்கலாம்.
வெளிப்புற பயன்கள்
துளசி மற்றும் எலுமிச்சை சாறினை கலந்து படர்தாமரை மற்றும் பிற தோல் உபாதைகள் மேல் தடவி வர கட்டுப்பாட்டில் வரும்.
தோல் வியாதிகளுக்கு – துளசி இலைகள், கருமிளகு, வேம்பு இலைகள் மற்றும் பூண்டினை கலந்து தடவினால் குணம் பெறலாம்.
துளசி இலைகளை படையினால் பாதிக்கப்பட்ட இடத்தினில் பற்று போட பலன் தரும்.
படர்தாமரை, தோல் அரிப்பு குறைய உப்பு மற்றும் துளசி இலை கொண்டு தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற துளசி மற்றும் லவங்க இலைகளை அரைத்து தேய்க்கவும்.
துளசி இலைகளை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும்.
இளந் துளசி இலைச்சாறினை தினசரி முகத்தில் பூசி வர பருக்கள், கறைகள் மறைந்து முகப் பொலிவு தரும்.
துளசி இலைகளை பசைபோல் அரைத்து, துணியில் பரப்பி தலைமுடியில் மசாஜ் செய்து வர பேன்கள் ஒழியும்.
துளசிச்சாறினை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதை கொப்பளம் மற்றும் வீக்கம் உள்ள இடங்களில் தடவ எரிச்சல் குறையும்.
துளசியானது பாரம்பரிய பயன்களைத் தவிர ‘வாசனை எண்ணெய்’ தயாரிக்கவும். மிக முக்கிய மூலப்பொருளாய் உள்ளது. இந்த எண்ணெய் மற்ற எண்ணெய்களுடன் மூலிகைக் குளியல் மற்றும் மசாஜ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
இது மந்தமான தோல் உடையவர்களின் இரத்த ஒட்டத்தை சீராக்க வல்லது.
ஆனால், ஒரே வார்த்தையில் எச்சரிக்க வேண்டுமென்றால், அதிகமாக உபயோகித்தால் அதிக சோர்வை ஏற்படுத்தும். கர்ப்ப காலங்களில் உபயோகிக்காமல் இருப்பது நன்று.
பல்வேறு எண்ணற்ற பயன்களை பார்க்கும் போது இந்தச் செடியானது நோய்கள் எதிர்ப்பானாகவும் மற்றும் இதயத்தை பலப்படுத்தவும் ஏற்றது எனலாம். இதில் அற்புதம் என்னவென்றால் இது புனிதமாகவும், வணங்கப்படுவது தான்.
“புராணங்களில்”, துளசி இருக்கும் வீடுகள் புனிதஸ்தலங்களுக்கு நிகரானது. அதனால் “எமதூதன்” (இறப்பின் கடவுள்) வாயிலாக வரும் மரணமும் அவ்வீட்டினை நெருங்காது என்று குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்ததாகும்.