பார்லி உணவுகள்

Spread the love

பார்லி புலாவ்

தேவையான பொருட்கள்

பார்லி –                                    100 கிராம்

கேரட், பீன்ஸ், பட்டாணி    – கால் கிலோ

வெங்காயம் –                           1

நாட்டுத் தக்காளி –                  1

பட்டை, லவங்கம், ஏலக்காய் –            1

தயிர் –                                      1 டேபிள் ஸ்பூன்

புதினா, கொத்தமல்லி –           1 கைப்பிடி

மஞ்சள் தூள் –                                     1 சிட்டிகை

மிளகாய் தூள் –                       1 டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது –           1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் –                    2

எண்ணெய் –                            1 டேபிள் ஸ்பூன்

உப்பு –                                     தேவைக்கேற்ப

செய்முறை

கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் பட்டை, இலவங்கம், ஏலக்காய், வெங்காய்ம் போன்றவற்றை வதக்கவும். காய்கறிகள் எல்லாவற்றையும் தேவையான அளவு எடுத்து நறுக்கிக் கொண்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர் சேர்த்து கிளறவும். கடாய் எண்ணெய் சேர்ந்து வரும் போது தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது உடன் பார்லியும் கலந்து 10 நிமிடங்கள் வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பின் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் போன்றவற்றை கலந்து குக்கரை சிம்மில் வைத்து சிறிது நேரம் கழித்து எடுக்கவும்.

பார்லி கஞ்சி

தேவையான பொருட்கள்:

முழு பார்லி – 100 கிராம், சர்க்கரை – 50 கிராம்,

தண்ணீர் – 250 மி.லி.

செய்முறை:

பார்லி தானியத்தை சுத்தம் செய்து வெறும் வானலியில் பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு மாவாக மிக்ஸியில் அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் சர்க்கரையை மாவாக அரைத்துச் சேர்த்து, நீர் விட்டுக் கரைத்தால் இனிப்பு பார்லி கஞ்சி தயார்.வயிற்றுப் போக்கு ஆகும் குழந்தைகளுக்கு இது மாமருந்தாகும்.

பார்லி பொங்கல்

தேவையான பொருட்கள்

உடைத்த பார்லி –                   1 கப்

பாசிப்பருப்பு –                                     கால் கப்

பொடித்த மிளகு, சீரகம் –        2 டீஸ்பூன்

உப்பு –                                     தே.அளவு

பச்சை மிளகாய், இஞ்சி          சிறிது

நெய் –                                      1 டீஸ்பூன்,

பெருங்காயம் –                        1 சிட்டிகை.

செய்முறை பார்லியையும் பாசிப்பருப்பையும் வெறும் கடாயில் தனித்தனியே வறுக்கவும். பின் தனி கிண்ணத்தில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். நெய்யைச் சூடாக்கி, மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் போன்றவற்றை இட்டு தாளிக்கவும். பார்லி, பாசிப் பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.


Spread the love