வாழை இலை பயன்படுத்துவோமா!

Spread the love

தமிழர்களின் உணவுமுறை தனித்துவம் மிக்கது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று தான் வாழை இலை பந்தி. ஊரில் நடக்கும் பெரிய விருந்தாக இருந்தாலும் சரி, வீட்டில் இருவர் மட்டுமே சாப்பிடும் சின்ன விருந்தாக இருந்தாலும் வாழை இலையில் பரிமாறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

இப்போது, வாழை இலையின் இடத்தை சில்வர் தட்டுக்களும், பிளாஸ்டிக் தட்டுக்களும் பறித்து விட்டன. எல்லோரும் இப்படிப்பட்ட தட்டுகளில் உணவு உண்பதைத் தான் விரும்புகிறார்கள்.

உண்மையில் வாழை இலையால் நிறைய பயன்பாடுகள் இருக்கின்றன. இதோ அவற்றைப் பார்க்கலாம்.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒரு வித வாசம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும். செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம்.

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும்.

புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டிவர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன் பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

சின்ன அம்மை படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணிநேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல்நலம் பெறும், மந்தம், வலிமைக் குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலை ஒரு கிருமிநாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.

வாழை இலையில் உணவு பரிமாறி சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழை மரத்தில் குருத்தை கொஞ்சம் கிளறிவிட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்றுவலி போன்றவை நீங்கும்.


Spread the love