பொடுதலை கூந்தல் தைலம்

Spread the love

பொடுதலை ஒரு சிறப்பான கிருமிநாசினியாதலால் அதனைக்கொண்டு கூந்தல் தைலம் தயாரித்து உபயோகித்து வந்தால் அழுக்கு, கிருமி போன்றவைகள் அண்டாது.

பொடுதலை கூந்தல் தைலம் தயாரிக்க 200 மிலி தேங்காய் எண்ணெயை அடுப்பிலேற்றி அது நன்கு சூடானவுடன் ஒரு கைபிடியளவு நன்கு சுத்தம் செய்த பொடுதலை இலையை போட்டு நன்கு வேகவிடவேண்டும், நன்கு வெந்து மொறுமொறுப்பாக இலைகள் வந்த பின்னர் எண்ணையை இறக்கி ஆறவைத்து, நன்கு ஆறிய பின்னர் வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு தினசரி பயன்படுத்த நல்ல பலன் தெரியும்.

வேறு ஒரு முறை

பசுமையான பொடுதலை இலைகளை தேவையான அளவில் சேகரித்துக் கொண்டு, ஒரு கண்ணாடி பாட்டிவில் போட்டு அவை மூழ்கும் அளவிற்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் 15 அல்லது 20 நாட்கள் வைத்து எடுத்து பின்னர் வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு தினமும் தலையில் தடவிக்கொள்ளலாம்.

குறிப்பாக தூசி அழுக்கு நிறைந்த இடங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்த எண்ணெய் நல்ல கேச ஆரோக்கியத்தை தருவதுடன் கிருமிகள் படிந்து பொடுகு வராமல் பார்த்துக்கொள்ளும்.


Spread the love