மின்னிட… உதவும் சமையல் சோடா

Spread the love

சமையல் சோடா ஒரு புளிப்பேற்றி ஆகும். நொதித்தல் செயல் முறையில் ஒருவித நெடியை உருவாக்குகிறது. இதை தவிர்பதற்காகவே அடுமனை தொழிலில் (cake factory)  சமையல் சோடாவை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

சமையல் சோடா சமயலுக்கு மட்டும் பயன்ப்படுத்த படாமல், சமையல் செய்பவருக்கும் பயன் படுகிறது எந்த வகையில் பயன்படுகிறது என்பதை நாம் பாப்போம்.

அழகை அலங்கரிக்க செய்யும் சமையல் சோடா

சமையல் சோடா சமையலுக்கு மட்டும் பயன்ப் படாமல், சருமம் மற்றும் கூந்தல் ஆகியவற்றை அழகு படுத்தவும் பயன் படுகிறது.

முகத்தில் உள்ள பருக்களை நீக்குகிறது, கூந்தலில் தோன்றும்  பொடுகை காணமல் செய்கிறது. முகத்திற்க்கு   பயன்படுத்தலாம் என்று சொன்ன உடனே எல்லோருக்கும் ஒரு கேள்வி எழும். எல்லா வகை முகத்திற்கும் பயன்படுத்தலாமா என்று கேட்பவருக்காக, இதோ இந்த பதில்.

சென்ஸ்டிவ் சருமம் உள்ளவர்கள் மட்டும் சமையல் சோடாவை பயன்படுத்துவதற்கு முன்பு, சிறிது கையில் தேய்த்து பார்க்க வேண்டும். அப்பொழுது எதாவது அரிப்போ அல்லது எரிச்சலோ ஏற்படாமல் இருந்தால்   மட்டும் இதனை பயன்படுத்தலாம்.

பருக்கள் ஏற்படாமல் இருக்க

சிலரின் முகம் அழகாக இருக்கும் ஆனால் அதை கெடுப்பது இந்த முகபரு தான். முகபரு தோன்றுவதற்கு முக்கிய  காரணம் முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதினாலும் மற்றும் தொற்றுக்களினாலும் தான் முகத்தில் முக பரு தோன்றுகிறது. சிலரின் முகத்தில் முகப்பரு போய்விடும். ஆனால் முகப்பரு இருந்த இடத்தில் தழும்பு அப்படியே இருக்கும். அதற்க்கு சமையல் சோடாவை 2 வாரம்  பயன்படுத்தினால் போதுமானது.

முகத்தில் தோன்றிய முகபருவும் அதன் தழும்புகளும் காணாமல் போய்விடும்.

குளுகுளுக் கூந்தல்

சிலரின்  முடியில் எப்போதும் எண்ணெய் பிசுக்கு இருந்து கொண்டே இருக்கும், அதன் காரணமாக தான் நாம், நம் கூந்தலுக்கு கண்டிஷனர் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை   பயன் படுத்திவருகிறோம். அதன் காரணமாக கூந்தலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

இனி, விலை உயர்ந்த பொருட்கள் இல்லாமலேயே கூந்தலை பராமரிக்க ஒரு எளிய பொருள் நம் வீட்டிலேயே உள்ளது. அது தான் சமையல் சோடா!

நாம் தலைக்கு குளிக்க போகும் போது ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவை தலைக்கு தேய்க்கும் ஷாம்பூவுடன் கலந்து அதை முடியில் தேய்த்த, பின்பு அரை தேக்கரண்டி சமையல் சோடா மாவை சிறிது தண்ணீரில் கலந்து நம் கூந்தலை அந்த தண்ணீரில் கழுவிவர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கூந்தலில் ஏற்படும் எண்ணெய் பசை, சிக்கு நாற்றம் ஆகியவை போய்விடும். உங்களின் கூந்தல் எப்போதும் பளபளப்புடனும் , குளிர்ச்சியுடனும் இருக்கும்.

பளிங்கு போன்ற பற்கள்

நம் முகத்திலேயே மிகவும் பிரகாசமானது பற்கள் தான், ஆனால் சிலருக்கு காபி தொடர்ந்து குடிப்பதன் காரணமாக பற்கள் முழுவதும் கறையாக காணப்படும். இதை நீக்க எளிய வழி முறை…

நன்கு  பழுத்த ஸ்ட்ராபெர்ரி பழக்களை எடுத்து அதை நன்கு அரைத்து கொள்ளவும், அதனுடன் சிறிது  சமையல் சோடாவை சேர்த்து பசை போல ஆக்க வேண்டும். அதனை பற்களில் தேய்த்து விட்டு, சிறிது  நேரம் கழித்து வாயைக் கொப்பளிக்கவும். பின்பு பற்பசை கொண்டு பற்களை துலக்கினால் பளிச்சிடும் பற்களை பெறலாம்.

குறிப்பு :

இந்த முறையை மாதத்திற்கு 2 முறை மட்டும் செய்து வந்தால் போதுமானது, ஏன்னென்றால் அதிகமான மாலிக் அமிலம் பற்களின் எனாமலை பாதிக்கும்.

விஷத்தை முறிக்கும் சமையல் சோடா

சூரிய வெப்பத்தினால் ஏற்படும் கொப்பளங்களுக்கு ஒரு சிறந்த மருந்து சமையல் சோடா ஆகும்.

சிறிது சமையல் சோடா மற்றும் தண்ணீரை கலந்து, அதில் தூய்மையான துணி அல்லது பருத்தி துணியை எடுத்து அந்த நீரில் முக்கி கொப்பளங்கள் உள்ள இடத்தில் தேய்த்து வர, கொப்பளங்கள் படிப்படியாக குறைந்து விடும்.

விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில்  சமையல் சோடா மற்றும் தண்ணீர் கலந்த பசையை பூசி வந்தால் எல்லா விஷத் தன்மையும் முறியடிக்கப்படும். எல்லா பொருளும் அளவு அறிந்து பயன்படுத்தினால் நமக்கு நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நாம் மறந்து விடக்கூடாது.           


Spread the love